கண் கருவளையம் மறைய டிப்ஸ்

கண் கருவளையம் மறைய டிப்ஸ்

இன்றைய நாட்களில் அனைவராலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனை தான் கருவளையம். கருவளையத்தால் முகத்தின் அழகு குறைவதால் பெண்கள் மிகவும் வருத்தத்திலும், கவலையிலும் இருப்பார்கள்.

கருவளையம் வருவதற்க்கு காரணங்கள்

  • தூக்கமின்மை
  • மனஅழுத்தம்
  • அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது
  • ஆரோக்கியமான உணவு உண்ணாமல் இருப்பது

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி, காப்பர், பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்களும் உள்ளன. உருளைக்கிழங்கு நம்முடைய கருவளையத்தை போக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.

உருளைக்கிழங்கின் மேல் தோலை எடுத்து விட்டு அதனை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து 20 நிமிடம் கழித்து தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.

புதினா

புதினா இலைகளில் உள்ள வைட்டமின் சி கருவளையம் போக்க மிகவும் உதவுகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

எனவே புதினா இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து அதனை கண்களில் மேல் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள விட்டமின் நம்முடைய முகத்தை பிரகாசிக்கவும் மேலும் முகத்தில் உள்ள கருவளையத்தை நீக்கவும் உதவுகிறது.

இதற்க்கு மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்து கண்களின் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

கற்றாழை

கற்றாழை சருமத்தின் வறட்சியை நீக்கி சருமத்தின் செல்களுக்கு சக்தியை தருவதோடு சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.

இதற்க்கு கற்றாழையை எடுத்து அதனுள் உள்ள ஜெல்-ஐ எடுத்து நம்முடைய கண்களில் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவை தருவதுடன் கருவளையத்தையும் நீக்கும்.

இதற்கு எலுமிச்சை சாறை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு நம் கண்களுக்கு மேல தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.

க்ரீன் டீ பேக்

க்ரீன் டீ பேக் கண்களில் உள்ள கருமையை போக்க உதவும். மேலும் இதில் உள்ள விட்டமின்கள் கண்களை பிரகாசம் ஆக்கும்.

இதற்க்கு க்ரீன் டீ பேக் ஐ எடுத்து தண்ணீரில் உற வைத்து பின் அந்த க்ரீன் டீ பேக் ஐ கண்களில் மேல் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். இதன் மூலம் கருவளையம் நீங்கும்.

விளக்கெண்ணெய்

சுத்தமான செக்கு விளக்கெண்ணெய்யை இரவு தூங்கும் முன்பு இரண்டு துளிகள் கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறைந்து விடும்.

வெள்ளரிக்காய்

சிறு துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறைந்து போகும்.

திராட்சை

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழி முறைகள் கண்களை சுற்றி கருவளையங்கள் வர விடாமல் தடுக்கும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *