/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ கிரி உலாவிய (திருத்தணிகை) - திருப்புகழ் 260 

கிரி உலாவிய (திருத்தணிகை) – திருப்புகழ் 260 

கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
கபட நாடக விரகிக ளசடிகள்
கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் – விரகாலே

க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
முழுது நாறிக ளிதமொழி வசனிகள்
கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் – பொருளாலே

பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
அதிக மாவொரு பொருள்தரு பவரொடு
பழைய பேரென இதமுற அணைபவர் – விழியாலே

பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை
பகர மாமயில் மிசைவர நினைவது – மொருநாளே

அரிய ராதிபர் மலரய னிமையவர்
நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ
அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக – இளையோனே

அரிய கானக முறைகுற மகளிட
கணவ னாகிய அறிவுள விதரண
அமரர் நாயக சரவண பவதிற – லுடையோனே

தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
சரிவு றாநிலை பெறுதவ முடையவர்
தளர்வி லாமன முடையவ ரறிவினர் – பரராஜர்

சகல லோகமு முடையவர் நினைபவர்
பரவு தாமரை மலரடி யினிதுற
தணிகை மாமலை மணிமுடி யழகியல் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கிறி மொழி (திருத்தணிகை) – திருப்புகழ் 261

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *