ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கட்டாயம், சில முக்கிய அடிப்படை சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எனினும், மக்கள் சிலர் சட்டங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதால், அவர்களது உரிமைகள் பறி போகிறது.
இந்தியச் சட்டம் இந்தியாவின் நீதிமுறைமையை செயல்படுத்துகின்ற ஒன்றாகும். இது ஆங்கிலேய பொதுச் சட்டத்தைச் சார்ந்தே இங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனோடு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சட்டத் தாக்கங்களும் இந்திய நீதி முறைமையில் இடம் பெற்றிருக்கின்றது.
பெண்கள் பாதுகாப்பு சட்டம்
இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது.
குற்றவியல் நடைமுறை குறியீடு-பிரிவு 164 (Code of Criminal Procedure 1973, Sec 164) படி, பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட மாஜிஸ்திரேட்-யிடம் புகார் தெரிவிக்கலாம். நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவையில்லை. இந்த சட்டம் அவர்களின் தனியுரிமையை பாதுகாக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டம்
இந்திய தண்டனைச் சட்டம் 166A (Indian Penal Code, 166A) படி, எந்த போலிஸ் அதிகாரியும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மறுக்க முடியாது. அவ்வாறு மறுத்தால் 6 மாதம் முதல் 1 வருடம் வரை அந்த அதிகாரிக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
காவல்துறை சட்டம் (Police Act, 1861) படி, எந்த புகார் வந்தாலும் காவல்துறை அதிகாரிகள் சீருடையில் இருந்தாலும், பிற உடைகளில் இருந்தாலும் எந்த நேரத்திலும் புகாரை எடுத்து கொள்ள வேண்டும்.
Indian Oil Corporation(Citizen Constitution Law) படி, சமையலின் போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் பாதிக்க பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நிவாரணத்தை பெற பாதிக்கப்பட்ட குடும்பம், காவல்நிலையத்தில் FIR பதிவு செய்து, அதன் நகலை குறிப்பிட்ட சிலிண்டர் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
(Indian Srius Act, 1887) படி, இந்தியாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் தண்ணீர் மற்றும் கழிப்பறையை பயன்படுத்த பணம் கொடுக்க வேண்டிதில்லை.
அரசியலமைப்பு விதி 22(1) மற்றும் விதி 22(2) படி, போலீசால் கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்தில் நீதிபதியின் முன்னிலையில் நிறுத்த வேண்டும்.
(விதி 39A) படி, பெண்களுக்கும், ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஒருவர் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டால், உடனடியாக வழக்கறிஞர் மூலம் காசோலை கொடுத்தவருக்கு, சட்டப்படி நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அடுத்த 15 நாட்களில் பணத்தை திருப்பி தரவில்லை எனில் அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சிறைக்கு அனுப்ப முடியும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code, Sec 46) படி, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை பெண் காவலர் தான் கைது செய்ய முடியும். பெண் குற்றவாளியை மாலை 6.00 மணிக்கு மேல் விசாரணைக்காகவோ, கைது செய்தோ போலிஸ் நிலையதிற்கு அழைத்து செல்ல முடியாது.
மேலும் கொலை குற்றம் போன்ற கடுமையான குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட வரை நீதிபதியின் அனுமதி பெற்று பெண் காவலர்கள் இல்லாமலே ஆண் காவலர் கைது செய்ய முடியும்.
இது மட்டுமல்லாமல், பெண்கள் தங்கள் புகார்களை ஈமெயில் மற்றும் தபால் மூலமாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப உரிமை இருக்கிறது. மேலும் அவர்கள் எந்த பகுதி காவல்நிலையத்திலும் புகார் கொடுக்கலாம்.
கர்ப்ப பாகுபாடு சட்டம்
(Maternity Benefit Act, 1961) படி, எந்த நிறுவனமும் கர்ப்ப காலத்தில் பெண்ணை வேலையில் இருந்து நீக்க முடியாது. அவ்வாறு நீக்கினால் 3 வருடம் வரை தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை சட்டம்
(MRP Act, 2014) படி, எந்த ஒரு பொருளையும் அதன் அதிகப்பட்ச விலையை (Maximum Retail Price) விட விலைக்கு விற்பது குற்றம். ஆனால் வாடிக்கையாளர் அதிகபட்ச விலையை விட குறைவாக பேரம் பேசி வாங்கிக் கொள்ள அனுமதி உள்ளது.
மோட்டார் வாகன சட்டம் / குற்றங்களுக்கான அபராதம்
வாகன திருத்த மசோதா (Automotive Amendment Bill, 2016) படி, தலைக்கவசம் அணியாமல் செல்வது உட்பட வேறு எந்த காரணத்திற்காகவோ அபராதம் விதிக்கப்பட்டால் அன்றைய தினம் அதே தவறுக்காக மீண்டும் அபராதம் விதிக்க முடியாது.
CMV R21(25) பிரிவு 177ன் கீழ் ரூ.100
மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்தால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
பிரிவு 181ன் கீழ் ரூ.500
18 வயதுக்கு உட்பட்ட மைனர் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 180ன் கீழ் ரூ.1000
டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பதும் தவறு. இதற்கு ரூ.1000 அபராதம், 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்க வழியுண்டு.
பிரிவு 183-1ன் கீழ்
வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
பிரிவு 189ன் கீழ் ரூ 500
போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ 500 அபராதம் அல்லது 1 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.
மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது தவறு. அவ்வாறு ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.2,000 அபராதமும், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க முடியும். இரண்டாவது முறை தவறுக்கு ரூ.3,000 அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க வழியுண்டு.
பிரிவு 192ன் கீழ் ரூ.5,000
புதிய வாகனம் வாங்கியவுடன் பதிவு செய்யவில்லை என்றால் For Regn என்று நம்பர் பிளேட்டில் எழுதியிருக்க வேண்டும். இல்லையெனில், தற்காலிக பதிவு எண்ணை எழுதி ஒட்டியிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் ரூ.5,000 வரை அபராதம் அல்லது 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 201ன் கீழ் ரூ.50
போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் 1 மணி நேரத்திற்கு ரூ.50 வீதம் அபராதம் விதிக்க முடியும்.
பிரிவு 182-1ன் கீழ் ரூ.500
ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, தகுதி இழந்தவர்கள் வாகனத்தை இயக்கினால், ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.
RRR 177 கீழ் ரூ.100
சிக்னல் நெரிசலிலோ, நடைபாதையிலோ வாகனம் ஓட்டுவது தவறு. இதற்கு ரூ.100 அபராதம் கட்ட வேண்டி வரும். அடுத்த முறை இதே தவறுக்கு ரூ.300 அபாராதம் விதிக்கப்படும்.
பிரிவு 184ன் கீழ் ரூ.1000
பிறரை அச்சுறுத்தும் விதத்திலும், விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அபாயகரமாக ஓட்டுதல் தவறு இதற்கு ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 177/139(1)ன் கீழ் ரூ.500
அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு மோட்டார் வாகனச் சட்டங்கள் கீழ் தவறு. இதற்கு முதல் முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
மோட்டார் இல்லாத வாகனங்கள்(சைக்கிள்) மோட்டார் வாகன சட்டத்தின் படி விதி மீறலுக்கு தண்டனை வழங்க முடியாது. இவை மோட்டார் வாகன சட்டங்கள் கீழ் வருவதில்லை.
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம்
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் (Hindu Adoption and Maintenance Act, 1956 Sec 2) படி, ஆண் அல்லது பெண், தங்களுக்கு சொந்தமாக மகன் அல்லது மகள் இருக்கும் போது, வேறு குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை. அதேபோல, தனியாக வசிக்கும் ஆணால், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to Information Article 19(1)(A), 2005)படி, அரசாங்கத்தின் தகவல்கள் வெளிப்படையானதாக இருப்பதோடு, எந்த ஒரு தகவலையும் இந்திய குடிமகன் அனைவரும் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு துறையிலும், பொது தகவல் அதிகாரி ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை நியமித்திருக்கிறார்கள். 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் அந்த அதிகாரி தான் பொறுப்பு. அதேபோல தவறான தகவல்களை கொடுத்தால், அதற்கான அபராதம் அல்லது தண்டனை அந்த அதிகரிக்கு தான்.
இதையும் படிக்கலாம் : அவசர உதவி தொலைபேசி எண்