கண் திருஷ்டி அல்லது எதிர்மறை ஆற்றலின் ஆதிக்கத்தில் இருப்பதை கண்டறியும் அறிகுறிகள் பற்றி கீழே பார்க்கலாம்.
கண் திருஷ்டி
கண் திருஷ்டி என்பது ஒரு மோசமான உணர்வு போன்றது, அது எதிர்மறையான எண்ணங்களைச் சிந்திக்க வைக்கும். கல்லடி கூடப் படலாம் கண்ணடி படக்கூடாது என முன்னோர்கள் கூறுவது உண்டு.
ஒருவரின் முன்னேற்றத்தைக் கண்டு மற்றவர்கள் பொறாமை படுவதே கண் திருஷ்டி என சொல்லப்படுகிறது. இது உறவுகள் முதல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி வரை அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது இந்த கண் திருஷ்டி.
கண் திருஷ்டியின் அறிகுறிகள்
- வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகளை அனுபவித்துக்கொண்டிருத்தால்.
- சொல்லமுடியாத உடல்நலப் பிரச்சினைகள் அல்லது திடீர் நோயினால் பாதிக்கப்படுவது.
- எதிர்மறை சக்திகள் நம் உறவுகளை கஷ்டப்படுத்தும், விருப்பத்துக்கு உரியவரிடம் சண்டை மற்றும் அவர்களை பற்றி தவறாக புரிந்து கொள்ள செய்யும்.
- எதிர்பாராத பண பிரச்சனைகளை உருவாக்கும்.
- உடல் ரீதியாக பதட்டம், கவலையாக அல்லது தொடர்ந்து சோர்வாக உணர்வீர்கள்.
கண் திருஷ்டியை போக்குவது எப்படி
- வீட்டில் பூஜை செய்வதை வழக்கமாக்க வேண்டும்.
- தாயத்துக்கள்
- பாசிட்டிவ் எண்ணத்தை வளர்ப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றலை அழிக்கலாம். எனவே பிறரிடம் அன்பாக பணிவாக பேசவேண்டும். எப்போதும் நல்லதை பற்றியே பேசவேண்டும்.
இதையும் படிக்கலாம் : திருஷ்டி நீக்கும் பூசணிக்காய்!