லட்சுமி நரசிம்மர் 108 போற்றியை தினமும் பக்தியுடன் சொல்லுங்கள். துன்பமெல்லாம் தீர்ந்து இன்பம் சேரும்.
லட்சுமி நரசிம்மர் 108 போற்றி
- ஓம் திருக்கடிகைத் தேவாபோற்றி
- ஓம் திருமாமகள் கேள்வாபோற்றி
- ஓம் யோக நரசிங்காபோற்றி
- ஓம் ஆழியங்கையாபோற்றி
- ஓம் அக்காரக் கனியேபோற்றி
- ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய்போற்றி
- ஓம் எக்காலத்தும் எந்தாய்போற்றி
- ஓம் எழில் தோள் எம்மிராமாபோற்றி
- ஓம் சங்கரப்ரியனேபோற்றி
- ஓம் சார்ங்க விற்கையாபோற்றி
- ஓம் உலகமுண்ட வாயாபோற்றி
- ஓம் உவப்பில் கீர்த்தியம்மாபோற்றி
- ஓம் அடியவர்க்கருள்வாய்போற்றி
- ஓம் அனைத்துலக முடையாய்போற்றி
- ஓம் தாமரைக் கண்ணாபோற்றி
- ஓம் காமனைப் பயந்தாய்போற்றி
- ஓம் ஊழி முதல்வாபோற்றி
- ஓம் ஒளி மணிவண்ணனேபோற்றி
- ஓம் ராவணாந்தகனேபோற்றி
- ஓம் இலங்கை எரித்த பிரான்போற்றி
- ஓம் பெற்ற மாளியேபோற்றி
- ஓம் பேரில் மணாளாபோற்றி
- ஓம் செல்வ நாரணாபோற்றி
- ஓம் திருக்குறளாபோற்றி
- ஓம் இளங்குமாரபோற்றி
- ஓம் விளக்கொளியேபோற்றி
- ஓம் சிந்தனைக்கினியாய்போற்றி
- ஓம் வந்தெனை ஆண்டாய்போற்றி
- ஓம் எங்கள் பெருமான்போற்றி
- ஓம் இமையோர் தலைவாபோற்றி
- ஓம் சங்கு சக்கரத்தாய்போற்றி
- ஓம் மங்கை மன்னன் மனத்தாய்போற்றி
- ஓம் வேதியர் வாழ்வேபோற்றி
- ஓம் வேங்கடத்துறைவாபோற்றி
- ஓம் நந்தா விளக்கேபோற்றி
- ஓம் நால் தோளமுதேபோற்றி
- ஓம் ஆயர்தம் கொழுந்தேபோற்றி
- ஓம் ஆழ்வார்களுயிரேபோற்றி
- ஓம் நாமம் ஆயிரம் உடையாய்போற்றி
- ஓம் வாமதேவனுக்கு அருளினாய்போற்றி
- ஓம் மூவா முதல்வாபோற்றி
- ஓம் தேவாதி தேவாபோற்றி
- ஓம் எட்டெழுத்திறைவாபோற்றி
- ஓம் எழில்ஞானச் சுடரேபோற்றி
- ஓம் வரவரமுனி வாழ்வேபோற்றி
- ஓம் வட திருவரங்காபோற்றி
- ஓம் ஏனம்முன் ஆனாய்போற்றி
- ஓம் தானவன் ஆகம் கீண்டாய்போற்றி
- ஓம் கஞ்சனைக் கடிந்தாய்போற்றி
- ஓம் நஞ்சரவில் துயின்றாய்போற்றி
- ஓம் மாலேபோற்றி
- ஓம் மாயப் பெருமானேபோற்றி
- ஓம் ஆலிலைத் துயின்றாய்போற்றி
- ஓம் அருள்மாரி புகழேபோற்றி
- ஓம் விண் மீதிருப்பாய்போற்றி
- ஓம் மண்மீது உழல்வோய்போற்றி
- ஓம் மலைமேல் நிற்பாய்போற்றி
- ஓம் மாகடல் சேர்ப்பாய்போற்றி
- ஓம் முந்நீர் வண்ணாபோற்றி
- ஓம் முழுதும் கரந்துறைவாய்போற்றி
- ஓம் கொற்றப் புள்ளுடையாய்போற்றி
- ஓம் முற்ற இம் மண்ணளந்தாய்போற்றி
- ஓம் அனைத்துலக முடையாய்போற்றி
- ஓம் அரவிந்த லோசனபோற்றி
- ஓம் மந்திரப் பொருளேபோற்றி
- ஓம் இந்திரனுக்கருள்வாய்போற்றி
- ஓம் குரு பரம்பரை முதலேபோற்றி
- ஓம் விகனைசர் தொழும் தேவாபோற்றி
- ஓம் பின்னை மணாளாபோற்றி
- ஓம் என்னையாளுடையாய்போற்றி
- ஓம் நலம்தரும் சொல்லேபோற்றி
- ஓம் நாரண நம்பிபோற்றி
- ஓம் பிரகலாதப்ரியனேபோற்றி
- ஓம் பிறவிப் பிணியறுப்பாய்போற்றி
- ஓம் பேயார் கண்ட திருவேபோற்றி
- ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளேபோற்றி
- ஓம் ஏமகூட விமானத்து இறைவாபோற்றி
- ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய்போற்றி
- ஓம் கல்மாரி காத்தாய்போற்றி
- ஓம் கச்சி யூரகத்தாய்போற்றி
- ஓம் வில்லியறுத்த தேவாபோற்றி
- ஓம் வீடணனுக்கருளினாய்போற்றி
- ஓம் இனியாய்போற்றி
- ஓம் இனிய பெயரினாய்போற்றி
- ஓம் புனலரங்காபோற்றி
- ஓம் அனலுருவேபோற்றி
- ஓம் புண்ணியாபோற்றி
- ஓம் புராணாபோற்றி
- ஓம் கோவிந்தாபோற்றி
- ஓம் கோளரியேபோற்றி
- ஓம் சிந்தாமணிபோற்றி
- ஓம் சிரீதராபோற்றி
- ஓம் மருந்தேபோற்றி
- ஓம் மாமணி வண்ணாபோற்றி
- ஓம் பொன் மலையாய்போற்றி
- ஓம் பொன்வடிவேபோற்றி
- ஓம் பூந்துழாய் முடியாய்போற்றி
- ஓம் பாண்டவர்க் கன்பாபோற்றி
- ஓம் குடந்தைக் கிடந்தாய்போற்றி
- ஓம் தயரதன் வாழ்வேபோற்றி
- ஓம் மதிகோள் விடுத்தாய்போற்றி
- ஓம் மறையாய் விரிந்த விளக்கேபோற்றி
- ஓம் வள்ளலேபோற்றி
- ஓம் வரமருள்வாய்போற்றி
- ஓம் சுதாவல்லி நாதனேபோற்றி
- ஓம் சுந்தரத் தோளுடையாய்போற்றி
- ஓம் பத்தராவியேபோற்றி
- ஓம் பக்தோசிதனேபோற்றி
இதையும் படிக்கலாம் : ஐஸ்வர்யங்கள் கிட்டும் ரங்கநாதாஷ்டகம்..!