ஐஸ்வர்யங்கள் கிட்டும் ரங்கநாதாஷ்டகம்

இத்துதியை வைகுண்ட ஏகாதசியன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.

“ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே

விமானே

காவேரீ மத்ய தேஸே

ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே

நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர:

பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்

பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம்

பஜேஹம்”

பொருள்

ஏழு மதில்களால் சூழப்பட்ட பிரகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.

இதையும் படிக்கலாம் : சுதர்சன காயத்ரி மந்திரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *