இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்.
1947 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா 15 பிரதம மந்திரிகளைக் கண்டுள்ளது. இதில் எண்ணிக்கைகளாக கொண்டு பார்த்தால் இந்தியாவில் 4 முறை பிரதமராக ஜவஹர்லால் நேருவும் அதன் பிறகு 3 முறை பிரதமராக அவரது மகள் இந்திரா காந்தியும், வாஜ்பாய்யும் பின்பு 2 முறை பிரதமராக குல்சாரிலால் நந்தா, மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடியும் பதவி வகித்துள்ளனர்.
பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும். இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பில், இந்திய அரசியல் அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியையே அரசின் தலைமையகாகக் குறிப்பிகிறது, ஆனால், நடைமுறையில், அவரது அதிகாரம் பிரதம மந்திரிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்
பெயர் |
கட்சி |
பதவிக்காலம் |
ஜவஹர்லால் நேரு
(1889 – 1964)
|
இந்திய தேசிய காங்கிரசு | 15 ஆகஸ்ட் 1947 – 15 ஏப்ரல் 1952 |
15 ஏப்ரல் 1952 – 17 ஏப்ரல் 1957 | ||
17 ஏப்ரல் 1957 – 02 ஏப்ரல் 1962 | ||
02 ஏப்ரல் 1962 – 27 மே 1964 | ||
குல்சாரிலால் நந்தா
(1898 – 1998)
|
இந்திய தேசிய காங்கிரசு | 27 மே 1964 – 09 ஜூன் 1964
( தற்காலிகம் ) |
லால் பகதூர் சாஸ்திரி (1904 – 1966) |
இந்திய தேசிய காங்கிரசு | 09 ஜூன் 1964 – 11 ஜனவரி 1966 |
குல்சாரிலால் நந்தா
(1898 – 1998)
|
இந்திய தேசிய காங்கிரசு | 11 ஜனவரி 1966 – 24 ஜனவரி 1966
( தற்காலிகம் ) |
இந்திரா காந்தி
(1917 – 1984) |
இந்திய தேசிய காங்கிரசு | 24 ஜனவரி 1966 – 04 மார்ச் 1967
|
04 மார்ச் 1967 – 15 மார்ச் 1971
|
||
15 மார்ச் 1971 – 24 மார்ச் 1977 | ||
மொரார்ஜி தேசாய்
(1896 – 1995) |
ஜனதா கட்சி | 24 மார்ச் 1977 – 28 ஜூலை 1979 |
சரண் சிங்
(1902 – 1987) |
மதச்சார்பற்ற ஜனதா கட்சி | 28 ஜூலை 1979 – 14 ஜனவரி 1980 |
இந்திரா காந்தி
(1917 – 1984) |
இந்திய தேசிய காங்கிரசு | 14 ஜனவரி 1980 – 31 அக்டோபர் 1984 |
ராஜீவ் காந்தி
(1944 – 1991) |
இந்திய தேசிய காங்கிரசு | 31 அக்டோபர் 1984 – 31 டிசம்பர் 1984 |
31 டிசம்பர் 1984 – 02 டிசம்பர் 1989 | ||
வி. பி. சிங்
(1931 – 2008) |
ஜனதா தளம் | 02 டிசம்பர் 1989 – 10 நவம்பர் 1990 |
சந்திரசேகர் (1927 – 2007) |
சமாஜ்வாடி ஜனதா கட்சி | 10 நவம்பர் 1990 – 21 ஜூன் 1991 |
பி. வி. நரசிம்ம ராவ்
(1921 – 2004) |
இந்திய தேசிய காங்கிரசு | 21 ஜூன் 1991 – 16 மே 1996 |
அடல் பிஹாரி வாஜ்பாய்
(1924 – 2018) |
பாரதிய ஜனதா கட்சி | 16 மே 1996 – 01 ஜூன் 1996 |
தேவகவுடா
(1933 –) |
ஜனதா தளம் | 01 ஜூன் 1996 – 21 ஏப்ரல் 1997 |
ஐ. கே. குஜ்ரால்
(1919 – 2012) |
ஜனதா தளம் | 21 ஏப்ரல் 1997 – 19 மார்ச் 1998 |
அடல் பிஹாரி வாஜ்பாய்
(1924 – 2018) |
பாரதிய ஜனதா கட்சி | 19 மார்ச் 1998 – 10 அக்டோபர் 1999 |
10 அக்டோபர் 1999 – 22 மே 2004 | ||
மன்மோகன் சிங் (1932 –) |
இந்திய தேசிய காங்கிரசு | 22 மே 2004 – 22 மே 2009 |
22 மே 2009 – 26 மே 2014 | ||
நரேந்திர மோதி
(1950 –)
|
பாரதிய ஜனதா கட்சி | 26 மே 2014 – 30 மே 2019 |
30 May 2019 – 04 ஜூன் 2024 | ||
09 ஜூன் 2024 – தற்போது |
இதையும் படிக்கலாம் : இந்திய நாடாளுமன்ற தொகுதிகள் பட்டியல்