ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் 14 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்ச காலத்தில் இறந்த முன்னோர்கள் பூமிக்கு வந்ததாக நம்பப்படுகிறது.
எனவே, இக்காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, திதி கொடுக்கும்போது, இறந்த முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்பது மகாளய பட்ச காலத்தின் முடிவில் வரும் அமாவாசை.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை அக்டோபர் 14ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது. மகாளய அமாவாசை போலவே சனி அமாவாசையும் இந்து மதத்தில் மங்களகரமானது.
ஆண்டு முழுவதும் இறந்தவருக்கு எதுவும் செய்யாதவர்கள், இந்த மகாளய அமாவாசை தினத்தில் திதி மற்றும் தானம் அளித்தால், புண்ணியம் கிடைப்பதோடு, தலைமுறைகள் மகிழ்ச்சியும், வளமும் பெற்று வாழ்வர்.
மேலும் இந்த ஆண்டு மஹாளய அமாவாசி சனிக்கிழமை வருவதால் இந்த நாளில் ஒருசிலவற்றை செய்தால் பித்ரு தோஷம் நீங்கி ஏழரை சனியின் தாக்கம் குறையும்.
ஆற்றில் நீராடுவது
மகாளய அமாவாசை மற்றும் சனி அமாவாசை நாளில் ஆற்றில் குளிக்க வேண்டும். ஒருவேளை ஆற்றில் குளிக்க முடியாவிட்டால், அதிகாலையில் எழுந்து குளிக்கும் நீரில் சிறிது கங்கை நீரை கலந்து குளிக்கலாம். அதோடு,
ஏழை எளியோருக்கு தானியங்கள், புதிய ஆடைகள் போன்றவற்றை தானம் செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவதோடு, சனி பகவானும் மகிழ்ச்சி அடைந்து, அவரது அருளும் கிடைக்கும்.
நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது
சனி பகவானுக்கு எள்ளு பிடிக்கும். எனவே சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய், எள்ளு தீபம் ஏற்றி “ஓம் ஷாம் சனீஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் தாக்கமும் குறையும்.
சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயை வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் மகாளய சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு படைப்பது சிறப்பு.
சனி ஸ்தோத்திரம் பாராயணம்
சனி அமாவாசை அன்று சனி பகவானுக்கு தீபம் ஏற்றி, கடுகு எண்ணெயால் அபிஷேகம் செய்து, நீல நிற மலர்களை வைத்து வழிபடுவதோடு, சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் சொல்வதால் ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் தாக்கமும் குறையும்.
கருப்பு நிற பொருட்களை தானம் செய்யவும்
சனி அமாவாசை நாளானது சனி பகவானுக்கு உரிய நாள். இந்நாளில் சனி பகவானுக்கு உரிய கருப்பு நிற ஆடைகள், எள்ளு, கருப்பு உளுந்து போன்றவற்றை தானம் செய்தால், சனி பகவான் மகிழ்ச்சியடைவதோடு, முன்னோர்களும் சந்தோஷப்படுவார்கள்.
இதையும் படிக்கலாம் : அமாவாசை நாளில் என்ன செய்யலாம்..!