அமாவாசை நாளில் என்ன செய்யலாம்..!

அமாவாசை நாளில் என்ன செய்யலாம்

சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. ஆண்டில் எல்லா மாதத்திலும் வரும் அமாவாசை ஒரு சிறப்பான நாள் தான். அமாவாசையில் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும்.

அன்றைய தினம் நம் முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை வழிபாடு

அமாவாசைக்கு முந்தைய நாள் பூஜை அறை மற்றும் வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து வீட்டில் உள்ள அனைவரும் தலைக்கு குளித்துவிட்டு அமாவாசை விரதத்தை தொடங்க வேண்டும்.

முன்னோர்களுக்கு பிடித்த உணவை சுத்தபத்தமாக சமைத்து, மதியம்   முன்னோர்க்கு படையலிட்டு வழிபாடு செய்த பின் தான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடவேண்டும். மேலும் குலதெய்வத்தின் பெயரை 3 முறை உச்சரித்து, அந்த குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து மனம் குளிர குடும்பத்தோடு வழிபாடு செய்ய வேண்டும்.

முடிந்தால் அமாவாசை அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்வதால் வீட்டிற்கு செல்வத்தை பெற்றுத் தரும். ஒரு சில சூழ்நிலை காரணமாக அமாவாசை அன்று முன்னோர் வழிபாட்டையோ, குல தெய்வம் வழிபாட்டையோ செய்ய முடியாதவர்கள். ஏழைகள் 3 பேருக்கு வயிறு நிரம்ப சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அன்னதானம் செய்ய வேண்டும்.

அமாவாசை நாளில் என்ன செய்யலாம்

அமாவாசையில் குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம். அன்றய தினம் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. இல்லையேல் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.

ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரத்தில் தர்ப்பணம் கொடுக்க கூடாது. தர்ப்பணம் கொடுக்கும்போது உங்கள் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை சொல்ல வேண்டும்.

காகத்திற்கு சாதம்

அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. ஏனெனில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.

காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே தான் அமாவாசை அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் சாப்பிடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

துளசி

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம்.

அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும்.

இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர் நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

அமாவாசை நாளில் என்ன செய்யக்கூடாது

அமாவாசை அன்று காற்று மற்றும் வெப்பம் ஆனது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். அந்த சமயத்தில், உடலில் அடிபட்டால் அதிக ரத்தம் வர நேரிடுமாம். அதுமட்டும் அல்ல, அன்றைய தினம் அடிபட்டால், விரைவில் காயம் ஆறாது.

அமாவசை, பவுர்ணமி அன்று எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியை செய்ய மாட்டார்கள். ஏனெனில் இந்த இரண்டு நாட்களில் நம் மனம் ஒரு விதமான பட படப்பை ஏற்படுத்தும்.

அமாவாசையன்று வீட்டின் வாசலில் கோலம் போடக் கூடாது. எஏனெனில் நமது முன்னோர்கள் அமாவாசை அன்று பூமியை நோக்கி வருவதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. அவ்வாறு வரும் பொழுது வாசலில் நாம் கோலம் போட்டு இருந்தால் உறவினர்கள் நமக்கு வழிபாடு செய்யவில்லை என்று நினைத்து திரும்பி சென்று விடுவார்களாம், பின் நமது வழிபாட்டினை நமது முன்னோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களாம். இதனால் தான் அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் திதி, அமாவாசை தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அமாவாசை நாளில் முடிந்த அளவுக்கு தானம், தர்மம் செய்வது ஐஸ்வர்யத்தை பெருக்கும். தேவையற்ற முடிவுகளை அமாவாசையில் எடுக்காமல் இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாம் : அமாவாசை நாட்கள் 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *