கும்பகோணம் மகாமகம் குளத்தின் மொத்த பரப்பளவு 6.2 ஏக்கர். கோவில் குளங்கள் பொதுவாக சதுர வடிவில் இருக்கும்.
ஆனால், மகாமகம் குளம், சதுரமாகத் தோன்றினாலும், சற்று வித்தியாசமானது. குளத்தின் அனைத்துப் பக்கங்களிலும் கருங்கல் படிகள் உள்ளன.
படித்துறை 18 படிகளைக் கொண்டுள்ளது.
ஆகம விதிகளில் 18க்கு எப்போதும் தனித்துவமும் ஆற்றலும் உண்டு.
இந்த விதிப்படி 18 படிகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் 20,000 பக்தர்கள் நீராடலாம்.
மகாமகம் குளம் 19,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இதையும் படிக்கலாம் : மாசி மகம் அன்று எந்த கடவுளை வழிபட வேண்டும்..!