
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
வலிமைகுல நின்ற – நிலையூர்பேர்
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
வரிசைதம ரென்று – வருமாயக்
கனவுநிலை யின்ப மதனையென தென்று
கருதிவிழி யின்ப – மடவார்தம்
கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
கருவில்விழு கின்ற – தியல்போதான்
நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
நெடுவரைபி ளந்த – கதிர்வேலா
நிலமுதல்வி ளங்கு நலமருவு செந்தில்
நிலைபெறஇ ருந்த – முருகோனே
புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
புளகஇரு கொங்கை – புணர்மார்பா
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
பொடிபடந டந்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : மாய வாடை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 88