துளசி செடி எங்கு வளர்கிறதோ, அங்கே எல்லா தேவர்களும், மும்மூர்த்திகளும் வசிக்கின்றனர்.
சூரியனைக் கண்டால் இருள் மறைவது போல, துளசியின் தென்றல் பாவங்களையும் நோய்களையும் நீக்குகிறது.
துளசி இலையை கடவுள் பிரசாதமாகச் சாப்பிட்டு வருபவர்கள் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.
உங்கள் வீட்டில் துளசி செடிகள் அதிகம் உள்ள இடம் புனிதமான இடம். அகால மரணம், நோய் போன்றவை அங்கு ஏற்படாது.
திருமாலின் அம்சமாக துளசி செடியை வழிபட வேண்டும். துளசியை வைத்து திருமாலை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை.
விஷ்ணு பூஜைக்குப் பிறகு பக்தர்கள் சந்தன தீர்த்தத்துடன், துளசி தளத்தை பிரசாதமாகப் பெறுகிறார்கள். இதையே சரண அமிர்தம், தீர்த்த பிரசாதம், பெருமாள் தீர்த்தம் என்பார்கள்.
துளசியை வழிபட்டதால் சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று ராமாயணம் கூறுகிறது.
இது குறித்து ஆகம நூலில் உள்ள ஸ்ரீமன் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை துளசி கலந்து அருந்துபவர்களுக்கு மறுபிறவி இல்லை.
இதையும் படிக்கலாம் : துளசியை எப்படி பயன்படுத்துவது?