மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இத்தலத்தில், முதல் பூஜை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி
அம்மா மதுரை மீனாக்ஷி
அருள்வாய் காஞ்சி காமாட்சி
அன்பாய் எனையே ஆதரித்து
அல்லல் களைந்தே காப்பாற்று
அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உன்சக்தி
வாழ்வைத் தந்து வளம் தந்து
வாழ்க்கைக் கடலின் கரையேற்று
தில்லை சிதம்பரம் பத்தினியே
நெல்லையில் வாழும் பத்தினியே
திருவடி மலரினைத் தொழுதிடுவேன்
திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று
ஓங்காரப் பொருள் நீதானே
உலகம் என்பதும் நீதானே
காணும் இயற்கைக் காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே
அம்மா தாயே உனைவேண்டி
அழுதிடும் என்னைத் தாலாட்டி
அன்புடன் ஞானப் பாலூட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்
உள்ளக் கோயில் உன்கோயில்
உயிரும் மூச்சும் உன் வடிவம்
பேச்சும் செயலும் உன்செயலே
பெருகட்டும் உன் பேரருளே.
மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்
ஸ்ரீ மீனாக்ஷி அஷ்டகம்
ஆரபி ராகம்
மாதுர்யே மஹிமே மஹா கிரி-சுதே மல்லாதி ஸம்ஹாரிணி
மூலாதாரக்ருதே மஹா மரகதே சோபே மஹா சுந்தரி
மாதங்கீ மஹிமே மஹா சுரவதே மந்த்ரோத்தமே மாதவி
மீனாக்ஷி மதுராம்பிகே மஹிமயே மாம்பாஹி மீனாம்பிகே
வராளி
நானா ரத்ன விபூஷணே நவகணே சோபே மஹா சுந்தரி
நித்யானந்தவரே நிரூபண குணே நிம்னோன்னதே பங்கஜே
நாட்ய நாடக வேஷதாரிணி சிவே நாதே கலே நர்த்தனி
மீனாக்ஷி மதுராம்பிகே மஹிமயே மாம்பாஹி மீனாம்பிகே
மோஹனம்
காமக்ரோத நிவாரணே கருணாலயே காத்யாயினி ஸன்மதே
காருண்யா-க்ருதிகே கிராத வரதே கம் கம் க பீஜாங்குரே
காமார்த்தம் தவ சித்தி ஹேதுகமிதம் பக்த்யா பவத் சன்னிதௌ
மீனாக்ஷி மதுராம்பிகே மஹிமயே மாம்பாஹி மீனாம்பிகே
ஹிந்தோளம்
ஷட்சக்ராந்தகதே ஷடானனவரே ஷட்பீஜ ரக்ஷாங்குரே
ஷோடாதாரா கலே ஷடாக்ஷரி சிவே kshoNI மஹா க்ஷீயதே
க்ஷந்தவ்யம் ஜனனி க்ஷமா ரம சிவே க்ஷீராப்தி மத்யாந்தரே
மீனாக்ஷி மதுராம்பிகே மஹிமயே மாம்பாஹி மீனாம்பிகே
சுப பந்து வராளி (சுப பந்துவராளி)
வாமே நீலதளாக்ஷி புஷ்ப ரஸிகே பாலே மஹா குங்குமே
அன்யே பாணி வராப்ஜ பக்த ஜனனி நித்யம் பரச்ரேயஸி
பாலே பந்துவராங்கிணி பகுவிதே பூசக்ர சஞ்சாரிணி
மீனாக்ஷி மதுராம்பிகே மஹிமயே மாம்பாஹி மீனாம்பிகே
சிந்துபைரவி
ராகஸ்தோத்ர விசார வேத விபவே ரம்யே ரதோல்லாஸினி
ராஜீவேக்ஷணி ராஜ ராங்கணரணே ராஜாதி ராஜேஸ்வரி
ராஞ்ஞே ராஜஸ சத்வ தாமஸ குணே ராதே ரமா சோதரி
மீனாக்ஷி மதுராம்பிகே மஹிமயே மாம்பாஹி மீனாம்பிகே
பூர்விகல்யாணி
ஸாரஸ்யே ஸரஸீருஹஸ்ய ஜனனி ஸாம்ராஜ்ய தானேக்ஷணி
ஸாம்யா ஸாம்ய சஷட்கலா சுகவனே சாந்தீபனி ஸேவிதே
ஸத்யானந்த ஸுதேச ஸுந்தர பலே ஸ்வாதிஷ்ட் சக்ராந்தரே
மீனாக்ஷி மதுராம்பிகே மஹிமயே மாம்பாஹி மீனாம்பிகே
மத்யமாவதி
கற்பூராருண குங்குமார்ச்சித பதே க்ஷீராப்தி சோபே சிவே
காயத்ரி கருணா கடாக்ஷ வினுதே கந்தர்ப்ப காந்திப்ரதே
கல்யாணாஷ்டக ஸுரார்ச்சிதே ஸுகவிதே காருண்ய வாராந்நிதே
மீனாக்ஷி மதுராம்பிகே மஹிமயே மாம்பாஹி மீனாம்பிகே
ஸ்ரீ மீனாக்ஷி அஷ்டகம் சம்பூர்ணம்
இதையும் படிக்கலாம் : பணம் பெருக மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்