நம் விரல் நகங்களில் அழகுக்காக பூசப்படும் நக பாலீஷ் சில நாட்களில் பொலிவை இழக்க தொடங்கி விடும். நகங்களில் இருந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும். அதனை பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம்.
ஆனால் சில சமயம் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெட வேண்டி இருக்கும். நக பாலீஷ் ரிமூவலை பயன்படுத்தலாம், அது இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள சில பொருள்களை கொண்டு எளிதில் நீக்கி விடலாம்.
பற்பசை
பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும்.
பல் துலக்கப் பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்து விடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
வாசனை திரவியம்
டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கி விடும்.
ஹேர் ஸ்பிரே
பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்து போக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண்டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிரு முறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.
சானிடைசர்
கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படும் சானிடைசரையும் நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
இதையும் படிக்கலாம் : சருமத்தைப் பாதுகாக்கும் இயற்கையான ஃபேஸ் பேக்குகள்