நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும்.
பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.
ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.
ஒன்பது பஷாணங்கள்
- சாதிலிங்கம்
- மனோசிலை
- காந்தம்
- காரம்
- கந்தகம்
- பூரம்
- வெள்ளை பாஷாணம்
- கௌரி பாஷாணம்
- தொட்டி பாஷாணம்
நவக்கிரக தன்மை
இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும்.
நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.
தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள்
தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.
பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை பருகுவதால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
நவபாஷாணம் முருகன் சிலை ஏன் பழனியில்
2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட ராஜா ராஜா சோழன் பாண்டியர்களும் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது மற்றவர் கைக்கு இந்த மருந்து கிடைத்துவிடக்கூடாது எனவும் அல்லது அதன் பின்வந்த சுல்தான்கள் பிரிட்டிஷ் இவர்கள் இந்த மருந்தின் மகத்துவத்தை தெரிந்து கொண்டு எடுத்து செல்ல நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.
பொதுவாக தமிழகத்தில் கடவுள்களுக்கு என்று ஒரு மரியாதையை உண்டு அதுவும் முருகன் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. முருகனை பிடிக்காதவர் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அதனால் தான் அப்பேற்பட்ட முருகன் சிலையில் இந்த நவபாஷாண சிலை செய்வதால் யாருக்கும் இந்த மருந்தின் மீது தனியுரிமை ஏற்படாது. ஏனென்றால் முருகன் என்பவர் பொதுவானவர் இதனையெல்லாம் அறிந்தே போகர் சித்தர் இவ்வாறு செய்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் இந்த நவபாஷாண சிலை கல் கிடையாது மூலிகைகளை நன்கு அரைத்து இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது பொதுவாக பாறையால் செய்யப்பட்ட சிலைகூட சில சேதாரம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பொது 2500 வருடத்திற்கு முன் செய்யப்பட்ட இந்த முருகன் சிலை எப்படி கம்பிரமாக நிற்கிறது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
இந்த போகர் சித்தர் பற்றிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பழனி மலையின் மேல் போகர் சித்தரோட சமாதி இருக்கு. ஆனால் அங்க போகர் சித்தரோட உடல் இல்ல அது ஒரு குகை அந்த குகையை யாரும் இன்று வரை சென்று பார்க்கவில்லை. அந்த குகைக்குள் தான் போகர் கடைசியாக தவம் செய்ய சென்றிருக்கிறார். அங்கு இன்றும் போகர் தவம் செய்துக்கொண்டிருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.
இந்த நவபாஷாண முருகன் சிலை ஆரம்ப காலத்தில் பழனி மலையில் வாழ்ந்த மலைவாழ் மக்களால் விமர்சையாக கொண்டாப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நாட்கள் ஆகஆக அங்கு இருந்த மக்கள் வெளியேறிவிட்டனர். பின்னர் சில ஆண்டுகளுக்கு பின் வந்த சேரமன்னன் வேட்டையாடுவதற்காக மழைக்கு செல்லும் பொழுது அங்கு இருந்த முருகன் சிலையை கண்டறிந்து அதன் வரலாறை அப்போ அங்கு இருந்த மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த மலைமேல் கோவில் கட்டியிருக்கிறார். அந்த கோவில் தான் இப்ப இருக்கும் பழனி முருகன் கோவில்.
இதையும் படிக்கலாம் : முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்..?