/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஒற்றை தலைவலி!! - Thagavalkalam

ஒற்றை தலைவலி!!

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது.

தலைவலிக்கான காரணம்

குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.

அறிகுறிகள்

இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்.

ஒற்றை தலைவலிக்கான தீர்வுகள்

பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

  1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
  2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.
  3. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம்        தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
  4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.
  5. அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
  6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இது மிகவும் விலைமதிப்பானது.

செய்ய வேண்டியவை

  • விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.
  • 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்) மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.
  • தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.
  • தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

  • புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
  • வெயிலில் அலைவது.
  • காரமான உணவு வகைகள்.
  • வயிறு முட்ட சாப்பிடுதல்.
  • தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை.

இதையும் படிக்கலாம் : நீரிழிவு நோய்க்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *