நீரிழிவு நோய்க்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

diabatic foods

சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சில வகை சர்க்கரை நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க கூடிய சில உணவுகள் உள்ளன.

மீன்

மீன்களை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஏராளமான அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

மேலும் மீன்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்க உதவி, பெருந்தமனி தடிப்பைத் தடுப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உடலினுள் உள்ள அழற்சிகளை சரிசெய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மீன்களை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுவது மிகவும் நல்லது

பச்சை கீரை வகைகள்

பச்சை கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நல்லது மற்றும் அவை குறைந்த கலோரிகளை மட்டுமே அளிக்கக்கூடியது.

அதிகப்படியான பச்சை கீரை வகைகளை உண்பது கண்களுக்கு நல்லது மற்றும் சர்க்கரை நோயினால் வரும் கேட்ட ராக்ட் போன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்

தயிர்

தயிர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது. தினமும் தயிர் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதன் மூலம் டைப் 2 வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

நட்ஸ்

2011-இல் வெளிவந்த ஆய்வு ஒன்றில் டைப்-2 சர்க்கரை நோயாளிகளை தினமும் 2 அவுன்ஸ் நட்ஸை சாப்பிட வைத்தனர். அதில் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

எனவே சர்க்கரை நோய் இருந்தால், நட்ஸ் சாப்பிடலாமா என்ற அச்சம் இருந்தால், அதை உடனே விட்டொழியுங்கள்

பழம்

தர்பூசணி, முலாம் பழம் போன்றவற்றில், வைட்டமின் ஏ, சி போன்றவை அதிகம் உள்ளது. அதோடு நீர்ச்சத்தும் அதிகளவில் நிறைந்துள்து.

இதனை சாலட் செய்து சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, சர்க்கரை நோய் தீவிரமடையாமலும் இருக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியிலும் ஸ்டார்ச் இல்லை. இதில் ஆரஞ்சு பழத்தை விட அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஏராளமான அளவில் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் உள்ளது.

இந்த அடர் பச்சை நிற காய்கறியை சாப்பிட்டால், கண் பார்வை மேம்படும், பற்கள், எலும்புகள், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த காய்கறியில் ஃபோலேட், நார்ச்சத்து போன்றவை அதிகமாகவும், கலோரிகளும், கார்போஹைட்ரேட்டுகளும் குறைவான அளவிலும் உள்ளது.

பூண்டு

பூண்டு ஒரு சத்தான மூலிகை மற்றும் இது ரத்த கொதிப்பை கட்டு படுத்த உதவுகிறது. பூண்டு ரசம் மற்றும் உணவு வகைகளில் பூண்டினை அடிக்கடி சேர்த்து உண்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். இது உடம்பில் உள்ள வீக்கம், கொழுப்பு ஆகியவற்றை கரைக்க உதவுகிறது.

ஒட்ஸ்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் மிகச்சிறந்த உணவுப் பொருள். ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு குறைந்து, கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

திணை

திணையில் வளமான அளவில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், வயிறு விரைவில் நிறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆகவே சர்க்கரை நோய் இருந்தால், காலையில் திணை கஞ்சி செய்து குடியுங்கள். இது மிகச்சிறப்பான காலை உணவாக அமையும்

பட்டை தூள்

சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் பானங்களில் சிறிது பட்டைத் தூளைக் கலந்து எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்கும்.

இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால்கள், இன்சுலின் சென்சிவிட்டியை மேம்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே உணவில் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க நினைத்தால், பட்டைத் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்

ஆப்பிள்

ஆப்பிள் சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்பட்டு பாதுகாப்பளிக்கும். ஹார்வர்ட் பள்ளியின் பொது சுகாதார ஆய்வில், சுமார் 200,00 மக்களின் டயட்டை ஆராயப்பட்டது.

அதில் வாரத்திற்கு 5-திற்கும் அதிகமாக ஆப்பிள் சாப்பிட்டவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம், ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட 23 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *