பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம் அனுமனின் உருவம் நடுவிலும் ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோரின் முகங்கள் இணைந்தது தான் பஞ்ச முக வடிவம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரத்தை தினமும் 8 முறை சொல்லி ஆஞ்சநேயரை வணங்கினால், ஜாதக தோஷம், கிரக பீடைகள், கிரக பெயர்ச்சி கெடுபலன்கள், கெட்ட கனவுகள் என பல்வேறு துன்பங்களிலிருந்து நம்மை காத்து அனைத்து வகை நன்மைகளைப் பெற்று இனிய வாழ்வும், ஆரோக்கியமும் பெற்று வாழலாம். பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் அனைத்து வித பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்
ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம!!
இதையும் படிக்கலாம் : ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்