பரிமள களபசு கந்தச் சந்தத் – தனமானார்
படையம படையென அந்திக் குங்கட் – கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் – குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் – றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் – றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் – தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் – குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பருத்தந்த (திருச்செந்தூர்) – திருப்புகழ் 79