ஸ்ரீ சக்கர மஹாமேரு சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை ஆகும். ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் மஹாசாம்ராஜ்யம்.
கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இந்த சாம்ராஜ்யத்தில் இடம் உண்டு.
ஸ்ரீ சக்கரத்தில் வழிபடும் போது அனைத்து கடவுள்களையும் ஒரே இடத்தில் வணங்கலாம்.
சௌந்தர்ய லஹரியின் இரண்டாவது பாடலில், ஆதி சங்கரர் பேசும் போது, ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்ம பூலோஹம், புவர்லோஹம், ஸுவர் லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல்லோகங்கள் ஏழையும், கீழ் உலகம் அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மகாதல, பாதாளம் என்றும் சொல்லப்படுகிறது. ஏழையாகவும் இருக்கிறார், அவர் அதை உருவாக்கினார் என்று கூறுகிறார்.
ஸ்ரீ மகாதேவியின் பாதத்தில் உள்ள தூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மாவால் படைக்கப்பட்ட பதினான்கு உலகங்களையும் தனது தன் சிரசினால் தாங்குகிறார்.
ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாத தூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தைப் பயன்படுத்தி பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.
பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.
தேவி சிவனிடம் தன் அன்பை வெளிப்படுத்திய போது வல்லபை ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீ கணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள்.
ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ள அறையின் வலது பக்கத்தில், மஹாகாளி மற்றும் மகா பைரவர் இடதுபுறம் துவார சக்திகளாக அன்னையைக் காக்கிறார்கள்.
நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளும் அன்னையை வலம் வருகின்றனர்.
இதன்படி பார்த்தால், எல்லா தெய்வங்களுக்கும் தலைமை தாங்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானவர்.
ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
குல தெய்வங்களை அறியாதவர்களுக்கு ஸ்ரீ சக்ர வழிபாடு ஒரு வரம். ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.
ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பதே தனி சிறப்பு ஆகும்.
இதையும் படிக்கலாம் : பயம் நீங்க துர்க்கை அம்மன் வழிபாட்டு முறைகள்.!