பயம் நீங்க துர்க்கை அம்மன் வழிபாட்டு முறைகள்.!

பயம் நீங்க துர்க்கை அம்மன் வழிபாட்டு முறைகள்

 • துர்க்கைக்கு அஷ்டமி தினத்தில் அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.
 • துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
 • துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம், மனத்தளர்ச்சி, சோகம் ஏற்படுவதில்லை.
 • துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.
 • துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.
 • துர்க்கை என்ற சொல்லில் `த்’, `உ’, `ர்’, `க்’, `ஆ’ என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்’ என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ’ என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்’ என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்’ என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ’ என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்.
 • துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி மயில்தோகை.
 • பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.
 • துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும்.
 • கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால் போதும்.
 • துர்கா தேவியை பூஜை செய்தவன் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.
 • மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்கா தேவியை பிரார்த்திக்க வேண்டும்.
 • பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்கா தேவி.
 • தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.
 • ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி கைவசமாகும்.
 • தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.
 • துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.
 • துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர்.
 • சுவாஸினி பூஜையிலும் சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.
 • துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.

இதையும் படிக்கலாம் : ராகு கால எலுமிச்சை விளக்கின் மகிமை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *