சேலம் மாவட்டம் (Salem District)

சேலம் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமை இடம் சேலம் நகரம். இந்த மாவட்டம் 5237 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் 5வது பெரிய நகரமான சேலம், வட மத்திய பகுதியில் இருக்கிறது. பழங்காலத்தில் மழவர் நாட்டில் இருந்த இந்த ஊர், மாம்பழங்களுக்கு பெயர் பெற்றது.

சேலம் மிகப்பெரிய நகரம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்னிந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை சேலத்தில் தான் முடிவு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கும் சேலத்தின் விலையே அடிப்படையாக இருக்கிறது.

மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
பகுதி மழவர் நாடு
பரப்பளவு 5237 ச.கி.மீ.
மக்கள்தொகை (2011) 34,82,056
அஞ்சல் குறியீடு 636 xxx
தொலைபேசி குறியீடு 0427
வாகனப் பதிவு TN-27, TN-30, TN-52, TN-54, TN-77, TN-90, TN-93
Contents
  1. சேலம் பெயர்க்காரணம்
  2. வரலாறு
  3. அமைவிடம்
  4. SALEM
  5. மக்கட் தொகை
  6. கல்வி நிலையங்கள்
    1. பல்கலைக்கழகம்
    2. பள்ளிகள்
    3. கல்லூரிகள்
  7. தொழிற்சாலைகள்
    1. சேகோ உற்பத்தி
    2. உருக்காலை
    3. சதர்ன் அயர்ன் & ஸ்டீல் கம்பெனி லிமிடெட்
    4. மால்கோ
    5. தாதுக்கள்
    6. பிற தொழில்கள்
  8. இயற்கை வளம்
  9. கனிம வளம்
  10. வேளாண்மை
  11. நெசவுத்தொழில்
  12. கால்நடை வளர்ப்பு
  13. பொருளாதாரம்
  14. அருங்காட்சியகம்
  15. தொழிற்சாலைகள்
  16. கைவினைப்பொருட்கள்
    1. பூம்புஹார்
    2. தம்மம்பட்டி மர வேலைப்பாடுகள் பற்றிய குறிப்பு
  17. சேலம் மாவட்ட தொழில் வளம்
  18. முக்கிய விளைபொருள்கள்
  19. மலைகள்
  20. ஆறுகள்
  21. போக்குவரத்து
  22. வானூர்தி நிலையம்
  23. மாவட்ட வருவாய் நிர்வாகம்
    1. வருவாய் கோட்டம்
    2. சேலம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்
    3. ஆத்தூர் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்
    4. மேட்டூர் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்
    5. சங்ககிரி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  24. உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
    1. நகராட்சிகள்
    2. பேரூராட்சிகள்
    3. ஊராட்சி ஒன்றியங்கள்
  25. அரசியல்
    1. சட்டமன்றத் தொகுதி
    2. நாடாளுமன்றத் தொகுதிகள்
  26. சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள்
    1. சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்
    2. சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில்
    3. சேலம் அழகிரி பெருமாள் கோயில்
    4. சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
    5. சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில்
    6. அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில்
    7. எல்லைப் பிடாரி அம்மன் கோயில், சேலம்
    8. கந்தாஸ்ரமம்
    9. சித்தர் கோவில்
    10. ஊத்துமலை பால சுப்பிரமணியர் திருக்கோயில்
    11. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
    12. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்
    13. பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்
    14. உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோவில்
    15. ஆறகலூர்
    16. வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில்
    17. முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர்
    18. நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி கோயில்
    19. சேலம் காசி விசுவநாதர் கோயில்
    20. 1008 சிவலிங்கம் கோவில்
    21. அப்பா பைத்தியசாமி கோவில்
    22. அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்
    23. கந்தசாமி கோவில்
    24. ஜம்மா மசூதி
  27. சேலத்தில் உள்ள மற்ற கோயில்கள்
  28. சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்
    1. ஏற்காடு (ஏழைகளின் ஊட்டி)
    2. குரும்பப்படி உயிரியல் பூங்கா
    3. மேட்டூர் அணை
    4. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
    5. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்
    6. பொய்மான் கரடு, பனமரத்துப்பட்டி
    7. பூலாம்பட்டி (சேலத்தின் கேரளா)
    8. தான்தோன்றீஸ்வரர் கோயில், பேளூர்
    9. ஆத்தூர்க் கோட்டை
    10. சங்ககிரி மலைக்கோட்டை
    11. இராமானுஜர் மணிமண்டபம்
  29. சேலம் மாவட்டத்தின் சிறப்புகள்
  30. சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்

சேலம் பெயர்க்காரணம்

சேலம் நகரத்தின் பழைய பெயர் சேரலம் என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் “சாலிய சேரமண்டலம்” என்ற சொற்கள் சான்றாக உள்ளன. சேர்வராயன் மலையும் இதற்கு இன்னொரு சான்று ஆகும்.

சிலர் ‘சைலம்’ என்ற சொல்லில் இருந்து சேலம் வந்தது என்கின்றனர். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்த இடம் என்று பொருள். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பழைய கல்வெட்டுகளிலும் ஆவணங்களிலும் சைலம் என்ற பெயர் காணப்படவில்லை. ஆனால் சேலம் என்ற பெயர் பல கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

சேர்வராயன் மலை சேலத்தின் முக்கிய மலைத்தொடர். இது சேர+அரையன் என்ற சொற்களில் இருந்து வந்தது. அரையன் என்றால் அரசன் என்று பொருள்.

சேரலம் என்ற பெயர் நாளடைவில் சேலம் ஆனது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. சிலர் சேலை நெசவு காரணமாக சேலையூர் என்ற பெயர் சேலம் ஆனது என்கின்றனர். வேறு சிலர் ஆறும் ஏரிகளும் நிறைந்த பகுதிகளில் மீன்கள் நிறைய கிடைத்ததால் இப்பெயர் வந்தது என்கின்றனர். ஆனால் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று என்பது போல சேரலம் என்ற பெயர் சேலம் ஆனது என்பதே மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.

வரலாறு

சேலமும் கோவையும் முதலில் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. பிறகு 1768-இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. 1799-இல் ஆங்கிலேயர்கள் இதை கைப்பற்றினர். சங்ககிரி கோட்டையை தலைமையிடமாக வைத்து ஆட்சி செய்தனர். சேலத்தில் ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டை இன்றும் நகர் மையத்தில் உள்ளது.

சேலம் பழங்காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன் அதியமான் ஆட்சியில் இருந்தது. இங்கே பழைய கால மக்கள் பயன்படுத்திய கருவிகளும் பொருட்களும் பல மலைப் பகுதிகளில் கிடைத்துள்ளன. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள் என பல அரசர்கள் இங்கு ஆட்சி செய்தனர்.

1792-இல் திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் இப்பகுதியை பெற்றனர். முதலில் இரண்டு மாவட்டங்களாக பிரித்தனர். 1801-இல் அவற்றை ஒன்றாக்கினர். 1808-இல் இ. ஆர். ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது, இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைமையகம் பல இடங்களுக்கு மாறி, இறுதியில் 1860-இல் சேலத்தில் நிலைத்தது. 1965-இல் தர்மபுரி மாவட்டமும், 1996-இல் நாமக்கல் மாவட்டமும் சேலத்திலிருந்து பிரிந்தன.

அமைவிடம்

இந்த ஊர் 11.65°N 78.17°E என்ற இடத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 278 மீட்டர் உயரத்தில் (912 அடி) இந்த ஊர் இருக்கிறது. சேர்வராயன் மலையில் துவங்கி திருமணிமுத்தாறு என்ற ஆறு சேலம் நகரின் நடுவே ஓடுகிறது. சேலத்தில் இருந்து 35 கி.மீ தூரத்தில் ஏற்காடு உள்ளது. இது சேர்வராயன் மலையில் இருக்கிறது. சேலத்தைச் சுற்றி நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று போன்ற மலைகள் சேலத்தை சுற்றி அமைந்து உள்ளன.

SALEM

சேலம் மாவட்டத்தின் சிறப்புகளை SALEM என்ற ஆங்கில எழுத்துக்கள் மூலம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

S – Steel – எஃகு  A – Aluminium – அலுமினியம் L – Limestone – சுண்ணாம்புக் கல் E – Electricity – மின்சாரம்  M – Mangoes – மாம்பலம்

மக்கட் தொகை

2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 34,82,056  பேர் வாழ்கின்றனர். இதில் 17,81,571 பேர் ஆண்கள். 17,00,485 பேர் பெண்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 15.44% கூடியுள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 954 பெண்கள் இருக்கிறார்கள். ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 665 பேர் வாழ்கின்றனர்.

மாவட்டத்தில் 72.86% பேருக்கு படிப்பறிவு உள்ளது. ஆறு வயதுக்குள் உள்ள குழந்தைகள் 3,44 ,960 பேர் உள்ளனர்.

பட்டியல் சாதியினர் 5,80,512 பேரும், பட்டியல் பழங்குடியினர் 1,19,369 பேரும் வாழ்கின்றனர்.

கல்வி நிலையங்கள்

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகம் இருக்கிறது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன.

பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம் – 1

பள்ளிகள்

  • 1254 தொடக்கப் பள்ளிகள்
  • 120 நடுநிலைப் பள்ளிகள்
  • 103 உயர்நிலைப் பள்ளிகள்
  • 33 மேல்நிலைப் பள்ளிகள்

கல்லூரிகள்

  • 3 மருத்துவம்
  • 2 பல் மருத்துவம்
  • 19 பொறியியல்
  • 13 தொழிற்நுட்பக் கல்லூரி
  • 2 சட்டக் கல்லூரி
  • 23 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தொழிற்சாலைகள்

சேலம் கைத்தறித் தொழில் மிகவும் பழமையான குடிசைத் தொழில்களில் ஒன்று. பட்டு நூலையும் பருத்தி நூலையும் கொண்டு நல்ல புடவை, வேட்டி, துண்டு ஆகியவற்றை நெய்கிறார்கள். இப்போது வீட்டில் பயன்படுத்தும் துணிகளையும், வெளிநாடுகளுக்கு அனுப்பும் துணிகளையும் நெய்கிறார்கள்.

சேலத்தைச் சுற்றி 75,000க்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. ஒரு ஆண்டில் நெய்யப்படும் துணிகளின் மதிப்பு சுமார் 50,000 கோடி ரூபாய். சேலத்தில் 125க்கும் மேற்பட்ட நூற்பு ஆலைகளும், புதிய நெசவு நிறுவனங்களும், ஆடை தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன.

1960களில் 5-க்கும் குறைவான நூற்பு ஆலைகள் மட்டுமே இருந்தன. பிறகு தனியார் கைத்தறி நெசவு, கூட்டுறவு கைத்தறி நெசவு, விற்பனை பிரிவுகள் என வளரத் தொடங்கியது. சேலத்தைச் சுற்றி சிறிய கைத்தறி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

1980களில் ஜவுளித் தொழில் பெரிதாக வளர்ந்தது. பல பெரிய நூற்பாலைகள், கைத்தறி சங்கங்கள், அச்சுக் கூடங்கள் தொடங்கப்பட்டன. அம்மாப்பேட்டை, குகை, ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், மகுடஞ்சாவடி, சலகண்டாபுரம், தாரமங்கலம், இளம்பிள்ளை போன்ற இடங்களில் இத்தொழில் பரவியது.

சேகோ உற்பத்தி

சேலம் பகுதியில் சேகோ உணவுகள் மற்றும் சவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் மிக அதிகமாக உள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 34,000 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. இந்த மரவள்ளிக்கிழங்கு தான் சவ்வரிசி தயாரிப்பதற்கு பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கை பதப்படுத்த 650 தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

சேலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் எக்டருக்கு 25-30 டன் மரவள்ளிக்கிழங்கு கிடைக்கிறது. இது உலகிலேயே அதிகம். இந்திய அளவில் எக்டருக்கு 19 டி, உலக அளவில் 10 டி தான் கிடைக்கிறது.

சாகோ தொழிலை மேம்படுத்த 1981-ல் சேலம் ஸ்டார்ச் மற்றும் சாகோ உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (சாகோசர்வ்) துவங்கப்பட்டது. நாட்டின் சாகோ மற்றும் ஸ்டார்ச் தேவையில் 80% சாகோசர்வ் நிறைவு செய்கிறது.

உருக்காலை

சேலத்தில் இரும்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இது இந்திய அரசின் உருக்கு ஆணையத்துக்கு சொந்தமானது. இந்த ஆலையில் சிறப்பு வகை எஃகு தயாரிக்கப்படுகிறது. குளிர்ந்த நிலையிலும், சூடான நிலையிலும் எஃகு உருட்டப்படுகிறது. இங்கு கார்பன் எஃகும் தயாரிக்கப்படுகிறது.

நாட்டின் நாணயங்கள் செய்ய தேவையான வட்ட வடிவ தகடுகளும் இங்கு உருவாக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 3600 டன் அளவுக்கு இந்த வட்டத் தகடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலை 1130 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதை அமைக்க 1780 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

சதர்ன் அயர்ன் & ஸ்டீல் கம்பெனி லிமிடெட்

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்து சதர்ன் அயர்ன் & ஸ்டீல் கம்பெனி, சேலம் அருகே 2,235 கோடி ரூபாய் முதலீட்டில் நாட்டின் முதல் முழுமையான எஃகு தொழிற்சாலையை அமைத்துள்ளது.

இந்த ஆலையில் துருப்பிடிக்காத கம்பிகள் / அலாய் ஸ்டீல்கள் தயாரிக்கப்படுகின்றன. வாகனங்களுக்கு தேவையான முக்கிய உதிரி பாகங்களை இந்த ஆலை தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது.

மால்கோ

மேட்டூர் பகுதியில் இருக்கும் மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (மால்கோ) நிறுவனம் வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியாகும். 1999-ல் இங்கே புதிய நிலக்கரி மின் நிலையம் கட்டப்பட்டது. இந்த மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 90% வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. மீதி உள்ள மின்சாரம் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

தாதுக்கள்

சேலம் சுற்றுப்பகுதியில் பல கனிம தாதுக்கள் உள்ளன. சேலத்தில் மெக்னசைட்டு, பாக்சைட்டு மற்றும் இரும்பு போன்ற கனிமங்கள் மிக அதிகமாக சேலத்தில் கிடைக்கின்றன. இங்கு பர்ன் ஸ்டாண்டர்ட் & கோ, டால்மியா மேக்னசைட்டுகள், டாடா ரெப்ரக்டரிஸ் போன்ற தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் மெக்னசைட் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன.

பிற தொழில்கள்

சேலத்தில் இருக்கும் லீ பஜார் என்பது விவசாயப் பொருட்கள் விற்கப்படும் மிகப்பெரிய சந்தை. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நரசுஸ் காபி, பழைய நந்தி டால் மில்ஸ் மாவு ஆலை, உஷா சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு நிலையங்கள் உள்ளன.

சேலம் வேகமாக வளரும் நகரம் என்பதால், அரசு மற்றும் எல்காட் நிறுவனம் 160 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது. சூரமங்கலத்தில் மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகள் பூங்கா இயங்கி வருகிறது. கோவை-ஈரோடு பகுதிகளில் சேலம் துணி பதனிடும் தொழிலுக்கு பெயர் பெற்றது. தமிழ்நாடு அரசின் தொழில் முன்னேற்றக் கழகம் மூலம் மேலும் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இயற்கை வளம்

இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பகுதி செம்மண், களிமண், கரிசல் மண் கொண்டது. இங்கே காவிரி, வெள்ளாறு, வசிட்ட நதி, திருமணிமுத்தாறு ஆகிய நதிகள் பாய்கின்றன. மலைப்பகுதி நிறைந்த இந்த மாவட்டத்தில் கல்வராயன், சேர்வராயன், நகரமலை, கஞ்சமலை, தீர்த்தமலை, நைனாமலை, பச்சைமலை, கபிலமலை போன்ற முக்கிய மலைகள் உள்ளன.இம்மாவட்டம் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது.

கனிம வளம்

கஞ்சமலை மற்றும் தீர்த்தமலையில் இரும்பு கனிமம் இருக்கிறது. கஞ்சமலையில் உள்ள இரும்பு கனிமத்தை எளிதாக வெட்டி எடுக்க முடியும். இந்த மலையில் சுமார் 45 கோடி டன் இரும்பு கனிமம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 304 மில்லியன் டன் இரும்பு கனிமத்தை மட்டுமே எடுக்க முடியும். சேர்வராயன் மலையில் அலுமினியம் செய்வதற்கு தேவையான பாக்சைட் கனிமம் நிறைய கிடைக்கிறது.

வேளாண்மை

ஆண்டு முழுவதும் இந்த பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. இங்கே நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாங்காய் போன்ற பயிர்களோடு, காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளி, பழங்கள் போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிடுகிறார்கள்.

வசிட்டநதியின் குறுக்கே 16 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து வரும் நீர்ப்பாசன கால்வாய்கள் மூலம் சுமார் 6000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. மேட்டூர் அணையின் கால்வாய் வழியாக ஓமலூர், சங்ககிரி பகுதிகளுக்கு நீர் செல்கிறது. சேலத்தில் அரசு பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 258 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளால் 23,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி பெறுகின்றன.

நெசவுத்தொழில்

சேலம் மாவட்டத்தில் நெசவுத்தொழில் மிக முக்கியமான தொழிலாக உள்ளது. தமிழகத்தில் மிக அதிக கைத்தறிகள் சேலம் மாவட்டத்தில் தான் இருக்கின்றன.

சேலம் நகரம், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஊர்களில் பருத்தி ஆடைகள் நெய்கிறார்கள். சேலம், வெண்ணந்தூர், ஜலகண்டபுரம் ஆகிய இடங்களில் பவர்லும் தறிகள் நிறைய உள்ளன.

சேலம் நகரத்தில் உள்ள அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது. சேலம் நகரிலும், அதன் அருகில் உள்ள கொண்டலாம்பட்டியிலும் பட்டு ஆடைகள் நெய்கிறார்கள்.

கால்நடை வளர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 7% கால்நடைகள் உள்ளன. ஓமலூர் பகுதியில் உள்ள மேச்சேரியில் நல்ல  தரமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகளின் இறைச்சியும் தோலும் மிகவும் நல்ல தரம் உடையவை.

இந்த ஆடுகளை மேலும் நல்ல முறையில் வளர்க்க, கோவையில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகம் அரசு உதவியுடன் செயல்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பல வகை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவை காங்கேயம் மாடுகள், நெல்லூர் மாடுகள், ஓசூர் மாடுகள், சிந்தி மாடுகள் ஆகும். மேச்சேரியில் வாரம் ஒருமுறை மாட்டுச் சந்தை நடைபெறுகிறது.

சேலத்தில் உள்ள தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம், சேலத்தில் பெரிய அளவில் பாலைக் குளிர வைத்து பாதுகாத்து, பல இடங்களுக்கு அனுப்புகிறது.

பொருளாதாரம்

சேலம் பகுதியில் பல வகையான கனிமவளங்கள் உள்ளன. இங்கு கிடைக்கும் இரும்பைக் கொண்டு இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் இரும்பாலையை கட்டியுள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள ஒரே இரும்பு உருக்கும் ஆலை ஆகும்.

சேலத்தில் மாக்னசைட் என்ற கனிமம் நிறைய கிடைக்கிறது. டால்மியா நிறுவனமும், தமிழக அரசின் டான்மாக் (TANMAG – TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனமும் இங்கு மாக்னசைட் எடுக்கும் சுரங்கங்களை அமைத்துள்ளன.

இங்கு வெள்ளி நகைகள் செய்யும் தொழில் பெரிய அளவில் நடைபெறுகிறது. மேலும், நூல் தயாரிக்கும் ஆலை, வாகன உதிரிபாகங்கள் செய்யும் ஆலை, சவ்வரிசி ஆலை ஆகியவையும் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் நிறைய கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. லீ-பஜார் என்ற இடத்தில் மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற விவசாய பொருட்களின் பெரிய சந்தை நடைபெறுகிறது.

அருங்காட்சியகம்

சேலம் அரசு அருங்காட்சியகம் 2007-ஆம் ஆண்டு முதல் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பேர்லண்ட்ஸில் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தின் இந்த அருங்காட்சியகத்தை 1976-ல் அப்போதைய ஆட்சியர் திரு.அ.மு. சுவாமிநாதன் உள்ளூர் ஓவியர் சங்க உறுப்பினர்களின் உதவியுடன் துவக்கினார். 1976 முதல் 1979-ஆம் ஆண்டு வரை மாவட்ட நிர்வாகம் இதனை கவனித்து வந்தது. பிறகு 1979 ஆம் ஆண்டு அருங்காட்சியகத் துறையின் பொறுப்பில் இயங்கி வருகிறது.

சேலம் அரசு அருங்காட்சியகம் 1979 முதல் 1996-ஆம் ஆண்டு வரை மூன்று பங்களா கட்டடத்தில் செயல்பட்டது. பிறகு நீதிமன்றக் கட்டடத்துக்கு மாறி 2007 ஜனவரி வரை அங்கே இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, மக்கள் உதவியுடன் துவங்கப்பட்ட முதல் மாவட்ட அருங்காட்சியகம் இதுதான். இது ஒரு பல்நோக்கு அருங்காட்சியகம். கற்சிற்பங்களை உள்ளடக்கிய தொல்லியல், முந்துவரலாறு, ஆயுதங்கள், இசைக்கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மானுடவியல், தபால்தலைகள், நாணயவியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், மற்றும் ஓவியங்கள் ஆகிய காட்சிப்பொருட்கள் உள்ளன.

அருங்காட்சியகத்தின் முன்பகுதியில் பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் ஒரு சிற்பபூங்கா உள்ளது. இங்கே கற்சிற்பங்கள், பழைய கல்வெட்டுகள், வீரக்கற்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த அழகான கற்சிற்பங்கள் பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தில் செய்யப்பட்டவை.

கி.பி 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த பார்சுவநாதர் சிலை ஒன்று பருத்திப்பள்ளியில் கிடைத்தது. இதன் மூலம் சேலம் பகுதியில் சமண மதம் இருந்தது தெரிய வருகிறது.

கி.பி 10-ஆம் நூற்றாண்டை சார்ந்த மகதேசன் பெருவழிக்கல் ஆறகலூருக்கும் காஞ்சிக்கும் இடையே பெரிய சாலை இருந்ததற்கு சான்றாக இருக்கிறது.

சிற்றரசர்களான இராமச்சந்திரநாயக்கர், வணங்காமுடி ஆகியோரின் கல்லால் செய்யப்பட்ட உருவங்கள் இங்குள்ள பழைய வரலாற்றை நமக்கு சொல்கின்றன. தமிழ் எழுத்துகள் எப்படி வளர்ந்தன என்பதையும், உள்ளூர் தெய்வங்களின் சுடுமண் செய்த சிற்பங்களையும், ஆங்கிலேயர் காலத்து பீரங்கிகளையும், டைனோசரின் மாதிரி உருவத்தையும் இந்த கற்சிற்ப பூங்காவில் பார்க்கலாம்.

காட்சி அறையில் மாவட்டத்தின் முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஓவிய அறையில் D.P. ராய்சௌத்ரி, S.K.ராஜவேல் ஆகிய இன்றைய ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் பல சுவாரசியமான பொருட்கள் உள்ளன. பூச்சிகளை உண்ணும் செடிகள், பல்வேறு மரங்கள், பாம்புகள், மீன்கள், நண்டுகள் ஆகியவற்றின் மாதிரிகள் இருக்கின்றன. புலியின் தோல், ஆமையின் ஓடு, புதைப்படிவங்கள், மரசிற்பங்கள், பழைய ஓலைச்சுவடிகள் போன்றவையும் உள்ளன.

மண்ணால் செய்த பொருட்கள், சங்கு வளையல்கள், நாணயங்கள், வெளிநாட்டு பணங்கள், தபால்தலைகள் மற்றும் முதல் நாள் உறைகள் போன்றவற்றையும் காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த 50,000 ஆண்டுகள் பழைமையான கற்கால கருவிகளும், சேர்வராயன் மற்றும் கொல்லிமலைகளில் கண்டுபிடித்த 20,000 ஆண்டுகள் பழைமையான புதிய கற்கால கருவிகளும் உள்ளன.

வட இந்திய சிற்பங்களின் மாதிரி உருவங்கள், தேவாலய மணி, பீரங்கி கல்குண்டுகள், ஈட்டிகள், கத்திகள், பழங்கால மக்களின் தாழிகள் ஆகியவை பொது மக்களையும் மாணவர்களையும் மிகவும் ஈர்க்கின்றன.

தொழிற்சாலைகள்

  • விவசாயம் சார்ந்தவை – 125
  • காடு சார்ந்தவை – 31
  • கனிமப் பொருள் – 38
  • துணியாலைகள் – 393
  • பொறியியல் – 20
  • வேதிப்பொருள் – 95
  • ஸ்டார்ச் – 726
  • ஏனையவை – 410

கைவினைப்பொருட்கள்

பூம்புஹார்

தமிழக அரசு 1973-ல் கைவினைப் பொருட்களை மேம்படுத்த ஒரு கழகத்தை உருவாக்கியது. இதுதான் பூம்புஹார் என்று அழைக்கப்படும் தமிழக கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகம். இங்கே தமிழகத்தின் சிறப்பான கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

இந்த கழகம் 2 முக்கிய வேலைகளைச் செய்கிறது. ஒன்று – கைவினைக் கலைஞர்களுக்கு நல்ல பயிற்சி கொடுப்பது. இரண்டு – அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. கைவினைஞர்கள் புதுப்புது பொருட்களை உருவாக்க ஊக்கம் தருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிறது.

பூம்புஹாருக்கு 7 உற்பத்தி மையங்கள் உள்ளன. நாடு முழுவதும் 12 விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கே செய்யப்படும் பொருட்கள் அனைத்து கடைகளிலும் விற்கப்படுகின்றன.

பாரம்பரிய கைவினைஞரை ஊக்குவிப்பதன் மூலமும் கலைஞர்களுக்கு பயிற்சியும், பரிசுகளும், நலத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பழைய கலை வடிவங்கள் அடுத்த தலைமுறைக்கும் சென்றடைகின்றன. நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றும் பெரும் பொறுப்பை பூம்புஹார் ஏற்றுள்ளது.

தம்மம்பட்டி மர வேலைப்பாடுகள் பற்றிய குறிப்பு

salem thammampatti wood carving
Thammampatti Wood Carving

சேலம் பகுதியில் உள்ள தம்மம்பட்டி மர வேலைப்பாடுகள் தமிழகத்தின் 36-வது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் பகுதியில் இந்த கலை வளர்ந்து வருகிறது.

கோவில் சிலைகள், தேர்கள், கதவுகள் போன்றவற்றை செய்கின்றனர்.

தூங்கா வாகை (மழை மரம்), நாட்டு மரம், வாகாய் (அல்பீசியா லெபெக்), மாவிலங்கை (க்ராடீவ்ராக்ஸ்பைர்ச்), மற்றும் அத்தி (ஃபிகஸ் குளோமெட்ரியா) போன்ற மரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தக் கைவினைத் தொழிலை, திறமையான கைவினைக் கலைஞர்கள் தங்கள் பாரம்பரியமாகவும் பரம்பரை ரீதியாகவும் தங்கள் முன்னோர்களிடமிருந்தும் கற்று வருகிறார்கள்.

தம்மம்பட்டியில் உள்ள மரச் சிற்பங்களை அங்குள்ள பிராந்திய மக்களே செய்தார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பல கருத்துகளை இந்த சிற்பங்களில் காட்டினார்கள். மரம் செதுக்கும் நுணுக்கமான கலையை இன்றைய சிற்பிகள் தங்கள் குடும்பத்தில் இருந்தே கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

தம்மம்பட்டியில் செய்யப்படும் மரச் சிற்பங்கள் பாரம்பரிய கட்டட அமைப்புகளின் பாணியில் செய்யப்படுகின்றன. இங்கு முக்கியமாக இந்து கடவுள்களின் சிலைகள், பழங்கால கதைகள், தசாவதார சிற்பங்கள், பல்வேறு அளவிலான வாகனங்கள், புராண உயிரினங்கள், கதவு அலங்காரங்கள், கோயில் கதவுகள், பூஜை அறைகள், கோயில் தேர்கள் போன்றவற்றை செய்கிறார்கள். இவை 2 அடி முதல் 6 அடி வரை உள்ள அளவுகளில், பழைய முறையில் வண்ணம் பூசி உருவாக்கப்படுகின்றன.

அத்தகைய தயாரிப்புகளை தயாரிக்க பயன்படும் மரத்தில் தூங்காவகை (சமனேசாமன்/மழை மரம்), வாகை (அல்பீசியா லெபெக்), மாவிலங்கை (க்ராடீவ்ராக்ஸ்பர்ச்), அத்தி (ஃபிகுஸ்ராசெமோசா), ஸ்டெரோகார்பஸ்மார்சுபியம் (இந்திய கினோ) ஆகியவை ஆகியவை முக்கியமானவை.

விவசாய நிலங்களில் வளரும் தூங்கா மரம் தங்க நிறம் முதல் கருமை நிறம் வரை இருக்கும். இது நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டது. நடுத்தரமான முதல் உயர்ந்த தரம் வரை கிடைக்கும்.

வாகை மரம் மென்மையானது. இது நல்ல தோற்றம் கொண்டது. மாவிலங்கை மரம் காட்டிலும் வளரும், வீட்டிலும் வளர்க்கலாம். தம்மம்பட்டி பகுதியில் பரவலாக காணலாம். ஆறு, ஏரி ஓரங்களில் வளரும்.

அத்தி மரம் பெரிய இலை உதிரும் வகையைச் சேர்ந்தது. 7-10 மீட்டர் உயரம் வளரும். வெள்ளை நிற மென்மையான பட்டை உள்ளது. இது அலங்கார நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமானது. தேக்கு, ரோஸ்வுட் போன்ற மரங்களைக் கொண்டு கதவுகள், வீட்டு வாசல்கள் செய்யலாம்.

தம்மம்பட்டி மரச் சிற்பக் கலைஞர்கள் கைவினை சிற்ப சாத்திரப்படி மரச் சிற்பங்களை செய்கிறார்கள். அவர்கள் பின்பற்றும் அளவுகளும், விதிகளும் பழங்கால நூல்களில் சொல்லியபடியே இருக்கிறது. குறிப்பாக தேர் செய்வதில் இவர்கள் மிகவும் திறமையானவர்கள். அளவுகளை சரியாக கணக்கிட்டு செய்வதில் வல்லவர்கள். இவர்களின் மரச் சிற்ப வேலைகள் கைவினை சிற்ப சாத்திரத்தில் சொல்லியபடியே அமைந்துள்ளன.

மரம் செதுக்கும் வேலை சுற்றுச்சூழலுக்கு இயைந்த வகையில் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இதில் மிகக் குறைந்த அளவே ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மரத்தை பதப்படுத்த வெயில், மழை போன்ற இயற்கை காலநிலைகளில் வைத்து காய வைக்கிறார்கள். செயற்கை முறைகள் எதுவும் இதில் பயன்படுத்துவதில்லை.

தம்மம்பட்டியில் உள்ள மரச் சிற்பங்கள் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மனித நிலை அம்சத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்த கலை பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.

தம்மம்பட்டி என்ற ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ளது. இது கெங்கவல்லி தாலுகாவில், பச்சமலைக்கும் கொல்லி மலைக்கும் இடையே அமைந்துள்ளது. ஸ்வேதா ஏரிக்கு அருகில் இந்த ஊர் இருக்கிறது. சேலம் நகரத்தில் இருந்து 63.4 கி.மீ தொலைவில் இந்த ஊர் உள்ளது.

சேலம் மாவட்ட தொழில் வளம்

மோகனூரில் சர்க்கரை ஆலை இயங்குகிறது. பள்ளிப் பாளையத்தில் பெரிய காகித ஆலை உள்ளது. சேலம் (உடையாபட்டி), ஆத்தூர் (செல்லியம் பாளையம்), குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பெரிய நூற்பு ஆலைகள் இயங்கி வருகின்றன.

சேலம் மாவட்டத்திலுள்ள, சங்ககிரி துர்க்கத்தில் இந்தியா சிமெண்ட் ஆலை உள்ளது. மேட்டூரில் பல தொழிற்சாலைகள் உள்ளன. அவை:

  • இரசாயனப் பொருள் ஆலை
  • அலுமினிய ஆலை
  • மூலாம் பூசும் ஆலை
  • சந்தன எண்ணெய் ஆலை
  • வனஸ்பதி ஆலை

நம் நாட்டில் அதிக ஜவ்வரிசி இந்த மாவட்டத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

முக்கிய விளைபொருள்கள்

நெல், பருப்பு வகைகள், பருத்தி, மரவள்ளி, கரும்பு, நிலக்கடலை, மாம்பழம் மற்றும் பூக்களில் ரோஜா, மல்லிகை.

521 ஹெக்டேர் நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மலைகள்

  • சேர்வராயன் மலை
  • கஞ்சமலை
  • ஜருகுமலை
  • கொடுமலை
  • கல்வராயன் மலை
  • பச்சைமலை
  • மேட்டூர் அணை
  • நகரமலை

ஆறுகள்

  • காவிரி
  • திருமணிமுத்தாறு
  • வஷிஷ்ட நதி
  • சரபங்கா ஆறு

போக்குவரத்து

சேலம் நகரம் சாலை போக்குவரத்துக்கு மிக முக்கியமான இடம். இங்கே மூன்று பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கின்றன. அவை:

  • தே.நெ. எண்:7 (கன்னியாகுமரி – வாரணாசி)
  • தே.நெ. எண்:47 (சேலம்- கன்னியாகுமரி)
  • தே.நெ. எண்:68 (சேலம்- உளுந்தூர்பேட்டை)

இதனால் சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, திருச்சி, கொச்சி, பாண்டிச்சேரி போன்ற ஊர்களுக்கு செல்ல இந்த சாலைகள் மிகவும் உதவுகின்றன.

வானூர்தி நிலையம்

சேலத்தில் இருந்து 19 கி.மீ தூரத்தில் கமலாபுரம் என்ற ஊரில் விமான நிலையம் இருக்கிறது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் 4 வருவாய் கோட்டம், 14 வருவாய் வட்டங்கள், 655 வருவாய் கிராமங்கள் கொண்டுள்ளது.

வருவாய் கோட்டம்

  1. சேலம்
  2. ஆத்தூர்
  3. மேட்டூர்
  4. சங்ககிரி

சேலம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

  • சேலம் வட்டம்
  • சேலம் மேற்கு வட்டம்
  • சேலம் தெற்கு வட்டம்
  • வாழப்பாடி வட்டம்
  • ஏற்காடு வட்டம்

ஆத்தூர் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

  • ஆத்தூர் வட்டம்
  • பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்
  • கங்கவள்ளி வட்டம்
  • தலைவாசல் வட்டம்

மேட்டூர் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

  • மேட்டூர் வட்டம்
  • ஓமலூர் வட்டம்
  • காடையாம்பட்டி வட்டம்

சங்ககிரி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

  • சங்ககிரி வட்டம்
  • எடப்பாடி வட்டம்

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 6 நகராட்சியும், 31 பேரூராட்சிகளும், 20 ஊராட்சி ஒன்றியகளும், 385 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.

நகராட்சிகள்

  • ஆத்தூர்
  • எடப்பாடி
  • மேட்டூர்
  • நரசிங்கபுரம்
  • தாரமங்கலம்
  • இடங்கனசாலை

பேரூராட்சிகள்

  1. அயோத்தியாப்பட்டிணம்
  2. ஆட்டையாம்பட்டி
  3. கண்ணங்குறிச்சி
  4. கொளத்தூர்
  5. கொங்கணாபுரம்
  6. மேச்சேரி
  7. ஓமலூர்
  8. பி.என்.பட்டி
  9. பெத்தநாயக்கன்பாளையம்
  10. சங்ககிரி
  11. தம்மம்பட்டி
  12. வாழப்பாடி
  13. வீர்க்கல்புதூர்
  14. ஜலகண்டாபுரம்
  15. பேலூர்
  16. இளம்பிள்ளை
  17. கெங்கவல்லி
  18. காடையாம்பட்டி
  19. கருப்பூர்
  20. கீரிப்பட்டி
  21. மல்லூர்
  22. பனைமரத்துப்பட்டி
  23. செந்தாரப்பட்டி
  24. தெடாவூர்
  25. தேவூர்
  26. வீரகனூர்
  27. ஏத்தாப்பூர்
  28. அரசிராமணி
  29. நங்கவள்ளி
  30. பூலாம்பட்டி
  31. வனவாசி

ஊராட்சி ஒன்றியங்கள்

  • சேலம்
  • வீரபாண்டி
  • பனமரத்துப்பட்டி
  • அயோத்தியாபட்டினம்
  • வாழப்பட்டி
  • ஏற்காடு
  • ஆத்தூர்
  • பெத்தநாயக்கன்பாளையம்
  • தலைவாசல்
  • கங்கவள்ளி
  • மேச்சேரி
  • நங்கவல்லி
  • கொளத்தூர்
  • ஓமலூர்
  • தாரமங்கலம்
  • காடையாம்பட்டி
  • சங்கரி
  • மகுடஞ்சாவடி
  • கொங்கணாபுரம்
  • எடப்பாடி

அரசியல்

இந்த மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலும் 1 மக்களவைத் தொகுதியும் இங்கு உள்ளது.

சட்டமன்றத் தொகுதி

  1. கங்கவள்ளி (தனி)
  2. ஆத்தூர் (தனி)
  3. ஏற்காடு (தனி – பழங்குடியினர்)
  4. ஓமலூர்
  5. மேட்டூர்
  6. எடப்பாடி
  7. சங்ககிரி
  8. சேலம் மேற்கு
  9. சேலம் வடக்கு
  10. சேலம் தெற்கு
  11. வீரபாண்டி

நாடாளுமன்றத் தொகுதிகள்

சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள்

சேலத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிறைய கோயில்கள் உள்ளன. இங்கே இருக்கும் முக்கியமான கோயில்கள் சில

சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்

salem rajaganapathy temple
Salem Rajaganapathy Temple

சேலம் நகரின் நடுவில் ராஜகணபதி கோயில் அமைந்துள்ளது. இது சிறிய கோயில் தான், ஆனால் மிகவும் புகழ் பெற்றது.

இக்கோயில் மூலவர் ராஜகணபதி என்று அழைக்கப்படுகிறார். சேலத்தின் கடைவீதியில் ராஜகணபதி கோயில் இருக்கிறது. அதனால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில்

சேலம் நகர மையப் பகுதியில் சுகவனேஸ்வரர் சிவன் கோயில் இருக்கிறது. கிளி வடிவில் வந்த சுகவன முனிவர் இங்குள்ள சிவனை வணங்கியதால், இந்த கோயிலின் சிவபெருமானுக்கு சுகவனேசுவரர் என்று பெயர் வந்தது. இந்த கோவில் நான்கு யுகங்களாக இருந்து வருகிறது. இங்கு இருக்கும் முருகனைப் பற்றி அருணகிரிநாதர் பாடல்கள் எழுதியுள்ளார். அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை.

இக்கோயிலில் ஆறு விதமான விநாயகர் சிலைகள் உள்ளன. அவை மதவடி விநாயகர், வலம்புரி விநாயகர், சுகவன கணபதி, க்ஷிப்த கணபதி, ந்ருத கணபதி, விகடசக்ர கணபதி.

சுப்பிரமணியர் சாமிக்கு தனி சன்னதி உள்ளது. அறுபடை வீடுகளில் உள்ள எல்லா முருகப்பெருமான் அவதாரங்களும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் புனித நீர் அமண்டுக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

சேலம் அழகிரி பெருமாள் கோயில்

சேலம் நகரத்தில் மையத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலை கோட்டை பெருமாள் கோவில் என்றும் சொல்கிறார்கள். இந்தக் கோயில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இக்கோயிலில் அழகிரிநாதப்பெருமாள் சன்னதி இருக்கிறார். இந்தக் கோயிலை அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதத்தில் ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளிலும் விழா நடைபெறுகிறது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்

salem kottai mariamman temple
Salem Kottai Mariamman Temple

சேலம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். சேலத்தில் உள்ள 8 மாரியம்மன் கோவில்களில் இதுதான் மிகப் பெரியது. அதனால் தான் இதை “கோட்டை பெரிய மாரியம்மன்” என்று அழைக்கிறார்கள். சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் இந்த அம்மன் தான் தலைமையாக விளங்குவதால். இதற்கு “எட்டுப்பேட்டைகளை ஆளும் அன்னை கோட்டை மாரி” என்று சிறப்புப் பெயர் வந்தது.

சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில்

சேலம் மாவட்டத்தில் சித்தனூர் கிராமத்தில் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இந்த கோவிலில் திருவிழா நடக்கும்.

அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில்

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி என்னும் ஊரில் இக்கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. ஆண்டுதோறும் மாசி மாதம் 2 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

எல்லைப் பிடாரி அம்மன் கோயில், சேலம்

சேலம் நகரத்தின் மையத்தில் எல்லைப் பிடாரி அம்மன் கோவில் இருக்கிறது.இக்கோயில் அம்மன் தானாகவே தோன்றியவர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்.

கந்தாஸ்ரமம்

சேலம் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உடையாப்பட்டி என்ற ஊர் உள்ளது. அங்கே ஒரு சின்ன மலை மேல் முருகன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலை சாந்தானந்த பிரமேந்திர சரஸ்வதி கட்டினார். ஜருகுமலையின் வடக்கு பகுதி கடைசியில், கன்னிமார் ஒடையின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

சித்தர் கோவில்

பதினென் சித்தர்களில் ஒருவரான கலங்கானி சித்தர் சமாதி அடைந்த இடத்தில் இந்தக் கோவில் உள்ளது. இது கஞ்சமலையின் மலைச்சரிவில்அமைந்துள்ளது. சேலம் நகரிலிருந்து இளம்பிள்ளை செல்லும் பாதையில் 12 கி.மீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கே ஊற்றுகளில் இருந்து வரும்நீரில் குளித்தால் / குடித்தால் பல நோய்கள் குணமாகும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஊத்துமலை பால சுப்பிரமணியர் திருக்கோயில்

சேலம் நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் சீலநாயக்கன்பட்டி பக்கத்தில் ஊத்துமலையில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த சத்திய நாராயண கோவில் இங்கே இருக்கிறது.

சேலம் நகரின் தெற்கு பகுதியில் இருக்கிறது. ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தமானது. இதோடு சிவன் கோவில், பெருமாள் கோவில், சௌடேஸ்வரி அம்மன் கோவில் ஆகியவையும் உள்ளன. இங்குள்ள கிணறுகளில் எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும் வற்றாது.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

சேலத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் தாரமங்கலம் என்ற ஊரில் கைலாசநாதர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் ரதி மன்மதன் சிலைகள் இருக்கின்றன. இங்குள்ள கல்லால் செய்த சிற்பங்கள் மிகவும் புகழ் பெற்றவை. சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியைக் கொல்லும் காட்சி போன்ற சிற்பங்களைப் பார்த்தால் வியப்பு ஏற்படும். இங்கு பல அழகிய சிற்பங்கள் உள்ளன.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்

சேலத்திலிருந்து 33 கி.மீ தூரத்தில் மேச்சேரி என்ற ஊரில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மன் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். அவற்றில் பிரம்மா, விஷ்ணு, சூலம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். கால்களில் சலங்கை அணிந்துள்ளாள். வலது காலை மேலே வைத்து, இடது காலால் அசுரனை மிதித்தபடி அமர்ந்துள்ளாள். மூக்கில் மூக்குத்தி, முகத்தில் புன்னகை, அக்னி மகுடமும், காதில் குண்டலம் ஆகியவற்றுடன் அழகாக காட்சி தருகிறாள்.

அம்மனை வணங்கினால் 21 தலைமுறைகளின் பாவங்கள், துன்பங்கள், நோய்கள் நீங்கும். கல்வியும் அறிவும் மேம்படும். அம்மனை மனமுருகி வணங்கினால் அஷ்டமாசித்திகளும் கிடைக்கும்.

இக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்

சேலத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் பேளூர் என்ற ஊரில் மிகப்பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் பல அழகான கற்சிற்பங்கள் உள்ளன.

இக்கோயிலின் மூலவர் தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இந்த இறைவனை வணங்கினால் நல்ல கல்வி, பணம், வேலையில் உயர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 3 முதல் 10 வரை சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது. அம்மன் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் இறைவனுக்கு இடது பக்கம் தனி இடத்தில் அமர்ந்திருக்கிறார். மா, பலா, இலுப்பை ஆகிய மூன்று மரங்கள் ஒன்றாக வளர்ந்திருக்கும் அதிசய மரம் இங்கு தல விருட்சமாக உள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் வசிட்ட நதி ஆகும்.

உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோவில்

Uthamasolapuram Karapuranathar Temple
Uthamasolapuram Karapuranathar Temple

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் என்னும் ஊரில் கரபுரநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இது பழைமையான சிவன் கோவில் ஆகும். இத்தலத்தின் மூலவர் கரபுநாதர், அம்பிகை பெரியநாயகியம்மன்.

அங்கவை, சங்கவை என்ற இரு பெண்களின் திருமணம் நடந்த இடம் இது. இக்கோயில் அர்த்த மண்டபத்தில் கல்தூணில் மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் கொடிகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் ஔவையாரின் பெரிய உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. குணசீலன் என்ற சிறுவனுக்காக கோயிலின் மூலவர் சாய்ந்த நிலையில் இருக்கிறார்.

ஆறகலூர்

சேலம் நகரத்திலிருந்து 74 .மீ தொலைவில் ஆறகலூர் இருக்கிறது. தலைவாசலில் இருந்து தென்கிழக்கே 4 கி.மீ தொலைவில், வசிட்ட ஆற்றின் மேற்குக் கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது.

இங்கே முன்பு வாணர் என்ற மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் சோழ மன்னர்களுக்கு கீழ் இருந்தவர்கள். இந்த ஊரைச் சுற்றி ஆறு அகழிகள் இருந்ததால், இதற்கு ஆறகழூர் என்ற பெயரும் உண்டு.

Kamanadaeswarar Temple Aragalur
Kamanadaeswarar Temple

பழங்காலம் முதலே ஆறகலூர் ஒரு முக்கிய ஆன்மீக தலமாக இருந்து வருகிறது. இங்கே இரண்டு முக்கிய கோயில்கள் உள்ளன. ஒன்று காமேஸ்வரர் கோயில் – இதை ஏகாம்பரமுதலியார் 14-ஆம் நூற்றாண்டில் கட்டினார். மற்றொன்று கரிவரதபெருமாள் கோயில். காமநாதீஸ்வரர் கோயிலில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு நடக்கும் பூஜைக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். அப்போது சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்த ஊரிலும், அருகில் உள்ள தியாகனூர் கிராமத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள காமேஸ்வரர் பற்றி ‘காமநாத கோவை’ என்ற நூல் எழுதப்பட்டுள்ளது.

வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில்

Vadasennimalai Murugan temple
Vadasennimalai Murugan Temple

வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சேலம் ஆத்துரில் உள்ள வடசென்னிமலை என்ன்னும் குன்றின் மேல் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரத்தன்று தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கும்.

இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர்

sri muthumalai murugan temple salem
Muthumalai Murugan Temple

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏத்தாப்பூர் பகுதியில் புத்திரகவுண்டன்பாளையத்தில் புறநகர்ப் பகுதியில் பெரிய முருகன் கோயில் இருக்கிறது. இங்குள்ள முருகன் சிலை உலகிலேயே மிக உயரமானது. சிலை 111 அடி உயரம் கொண்டது. அதன் கீழே உள்ள பீடம் 35 அடி உயரம் உள்ளது. மொத்தமாக 146 அடி உயரம் இருக்கிறது.

முத்துமலை முருகன் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 329 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் சுப்பிரமணியர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு சூரசம்காரம் நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலுக்கு 2022-ம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி கும்பாபிசேகம் நடந்தது.

நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி கோயில்

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஓர் அம்மன் கோயில் லலிதா திரிபுரசுந்தரி கோயில் ஆகும். இது சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பக்கம், நாகலூர் என்ற ஊரில் இந்த கோயில் இருக்கிறது. இந்த கோயில் மகாமேரு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.

சேலம் காசி விசுவநாதர் கோயில்

காசி விசுவநாதர் கோயில் சேலம் நகரத்தின் மையத்தில் 2-வது அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

1008 சிவலிங்கம் கோவில்

சேலம் – கோவை நெடுஞ்சாலையில் அரியானூர் பக்கத்தில் ஒரு சின்ன மலையில் இக்கோவில் உள்ளது. விநாயகா குழுமத்தினர் இதனைப் பராமரித்து வருகிறார்கள். இக்கோவிலில் 1008 சிவலிங்கங்கள் நந்தியோடு வைக்கப்பட்டுள்ளன.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7.30 முதல் நண்பகல் 12.30 வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

அப்பா பைத்தியசாமி கோவில்

கரூரில் 1859-ல் பிறந்த அப்பா பைத்தியசாமி என்பவர் முக்தி பெற்று சமாதி அடைந்த இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. அவர் ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். தை மாதத்தில் வரும் அஸ்வினி நாளில் அவரின் குருபூஜை நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வணங்குவார்கள். சேலம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு 1 கி.மீ தொலைவில் இக்கோவில் உள்ளது.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 5.30 முதல் நண்பகல் 12 மணி வரை மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை.

அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்

சேலத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அயோத்தியாபட்டிணத்தில் அமைந்துள்ள இக்கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய கோவில்களில் ஒன்று. இது ஒரு அழகான விஷ்னு கோவிலாகும். இறைவன் கோதண்டராமர் என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

கந்தசாமி கோவில்

சேலத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் பாதையில் 22 கி.மீ தொலைவில் சுந்தர கந்தசாமி கோவில் இருக்கிறது. இக்கோவில் மாவட்டத்தில் உள்ள 7 முக்கிய கோவில்களில் ஒன்று. தை பூச விழா மற்றும் முருகன் விழாக்கள் அனைத்தும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஜம்மா மசூதி

சேலம் நகரத்தில் மையத்தில் திருமணிமுத்தாறு ஓடைக்கு தெற்கே மிகவும் பழைமையான ஜம்மா மசூதி உள்ளது. மைசூர் மன்னர் திப்புசுல்தான் இதைக் கட்டினார். அவர் இங்கே தொழுகை நடத்தியதாகவும் சொல்கிறார்கள்.

மசூதி திறந்திருக்கும் நேரம் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை.

சேலத்தில் உள்ள மற்ற கோயில்கள்

  • சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில்
  • சேலம் அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில்
  • சேலம் பழையூர் திரௌபதி அம்மன் கோவில்
  • சேலம் அம்மாபேட்டை அருள்மிகு செங்குந்தர் மாரியம்மன் திருக்கோயில்
  • சேலம் அம்மாபேட்டை அருள்மிகு குமரகுரு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
  • சேலம் அருள்மிகு பாவடி செங்குந்தர் கல்யாண சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
  • குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில்
  • நாமமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்
  • ஏற்காடு சேர்வராயன் சுவாமி கோயில்
  • செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
  • சாஸ்தா நகர் ஐயப்பன் திருக்கோயில், சேலம்
  • அத்தனூர் அம்மன் கோயில்

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்

ஏற்காடு (ஏழைகளின் ஊட்டி)

yercaud
Yercaud

ஏற்காடு என்பது சேலம் மாவட்டத்தில் இருக்கும் மலை ஊர். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் (4969 அடி) உயரத்தில் உள்ளது. இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் மொத்த பரப்பு 382.67 382.67 ச.கி.மீ ஏற்காடு, ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இது வட்டத்தின் தலைமை இடமாகவும் செயல்படுகிறது. இங்கு செலவு குறைவாக சுற்றுலா செல்லலாம். அதனால்தான் இதை ஏழைகளின் ஊட்டி என்று சொல்கிறார்கள்.

சேலத்தில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. சேலத்தில் இருந்து ஏற்காடு போகும் மலை சாலையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

அண்ணா பூங்கா ஏரிக்கு பக்கத்தில் இருக்கிறது. கொடைவிழா நாட்களில் இங்கே மலர்கண்காட்சி நடைபெறும். இங்குள்ள ஜப்பானிய பூங்காவை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நுழைவுக் கட்டணம் பெரியவர்கள் – ரூ15, சிறுவர்கள் – ரூ10, வீடியோ கேமரா – ரூ50, கேமரா – ரூ25.

தோட்டக்கலைதுறை பண்ணையில் பல விதமான தாவரங்களின் கன்றுகள் விற்பனைக்கு உள்ளன. உள்ளே செல்ல பெரியவர்களுக்கு ரூ.30 கட்டணம். கேமராக்கு ரூ.50 கட்டணம்.

இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கும் தாவரவியல் பூங்கா அதிக தாவரங்களின் தொகுப்புடன் உள்ளது. இங்குள்ள மணிப்பாறையில் கல்லால் மோதினால் மணிச்சத்தம் கேட்கும்.

ஏற்காடு மலையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேலே உள்ள ஏரியின் நீர் கீழே விழுந்து அருவியாக பாய்கிறது.

லேடிஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் இடத்தில் பாறைகள் இயற்கையாகவே காட்ச்சித்தளங்களாக அமைந்துள்ளன. இங்கிருந்து சேலம் நகரத்தின் அழகை நன்றாகப் பார்க்க முடியும்.

சேர்வராயன் கோவில் பெருமாள் குகைக்கோவிலாகும். மே மாதத்தில் இங்கு நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கின்றனர். கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.

இங்கே ஒரு பெரிய இயற்கை ஏரி உள்ளது. ஏரியைச் சுற்றி மான்கள் உள்ள பூங்கா, விளையாட்டு பூங்கா, அண்ணா பூங்கா, ஹோட்டல் தமிழ்நாடு ஆகியவை உள்ளன. ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் மகிழ்ச்சி தரும். படகு சவாரி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. படகு சவாரி கட்டணம் 8 பேருக்கு–ரூ.320; 4 பேருக்கு –ரூ.110; 2 பேருக்கு –ரூ.80.

பகோடா பார்வை இடம் – ஏற்காடு மலையின் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் இந்த இடத்துக்கு பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே ராமர் கோயில் இருக்கிறது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை நன்றாகப் பார்க்க முடியும். ஏற்காட்டிலிருந்து இங்கு வர 5கி.மீ தொலைவில் உள்ளது.

ஏற்காட்டில் இருந்து சேர்வராயன் கோயில் போகும் வழியில் 4 கி.மீ தூரத்தில் ராஜ ராஜேஸ்வரி கோயில் இருக்கிறது. எல்லா தெய்வங்களுக்கும் மேலான தெய்வமென போற்றப்படுகிறது. கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை.

இந்த பட்டு பண்ணையில் நிறைய மல்பெரி செடிகள் வளர்க்கிறார்கள். இங்கே பட்டுப்புழு வளர்ப்பதையும், அதில் இருந்து பட்டு நூல் எடுப்பதையும் நாம் பார்க்கலாம். பக்கத்தில் உள்ள ரோஜா தோட்டத்தில் பல நிற ரோஜா பூக்கள் இருக்கின்றன. ரோஜா செடிகளையும் இங்கே வாங்கலாம். ரோஜா தோட்டம் ஏற்காடு ஊரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

குரும்பப்படி உயிரியல் பூங்கா

Kurumbapatti Zoological Park
Kurumbapatti Zoological Park

சேலம் மாவட்டத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இருக்கிறது. ஏற்காடு மலைக்கு அடிவாரத்தில், அழகான இயற்கை சூழலில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 1981-ஆம் ஆண்டு இந்த பூங்கா திறக்கப்பட்டது. முதலில், 11 ஹெக்டர் பரப்பில் அமைந்திருந்த பூங்கா இப்போது 31.73 ஏக்கர் அளவுக்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. அதோடு விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மான்களுக்காக மட்டும் 1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. சேலம் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பொழுதுபோக்குக்காக வரும் இடங்களில் குரும்பப்பட்டி பூங்கா முக்கியமான இடமாக திகழ்கிறது.

இங்கே பல குரங்குகள், புள்ளி மான்கள், வெள்ளை மயில்கள், முதலைகள், யானைகள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் உள்ளன. இவை கூண்டுகளிலும் திறந்தவெளியிலும் விடப்பட்டுள்ளது. வண்டலூருக்கு அடுத்தபடி சேலம் குரும்பப்பட்டி பூங்காதான் பெரியது. வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஆறு கடமான்களை பெரிய கூண்டுகளில் கொண்டு வந்து, குரும்பப்பட்டி பூங்காவில் உள்ள மான் பகுதியில் விட்டனர். மதுரை அழகர் கோவிலில் இருந்த ஆண்டாள் என்ற 60 வயது பெண் யானை நோய்வாய்ப்பட்டது. அதனால் அதனை பராமரிக்கும் பணியை சேலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேலம் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இயற்கை அழகு நிறைந்த ஒரு சிறிய உயிரியல் பூங்காவாகும். இதை பார்வையிட நுழைவுக்கட்டணம் சிறியவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 ம் வசூலிக்கப்படுகிறது.

மேட்டூர் அணை

mettur dam
Mettur Dam

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில், காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டது. இந்த அணை 1925-ல் துவங்கி 1934-ல் முடிக்கப்பட்டது. கர்னல் W.M எல்லீஸ் என்பவர் வடிவமைத்த இந்த அணை 4.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகின் மிக உயரமான நேர்கோட்டு அணையாக இருந்தது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் என்ற ஊரில் இந்த அணை இருக்கிறது. அதனால் தான் இதற்கு மேட்டூர் அணை என்று பெயர் வந்தது. இந்த அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணையை கட்ட 9 ஆண்டுகள் ஆனது. 1934-ஆம் ஆண்டு கட்டி முடித்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் இதுதான் மிகப் பெரியது.

இந்த அணையால் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. மேலும், பல மாவட்ட மக்களின் குடிநீர் தேவை, பள்ளி-கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளும் மேட்டூர் அணை நீரால் நிறைவேற்றப்படுகிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது, அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின்சாரமும், காவிரி ஆற்றில் உள்ள 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

83 ஆண்டுகளுக்குப் பிறகு, 2017 மே 28 அன்று, அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தால் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

Tharamangalam Kailasanathar Temple
Tharamangalam Kailasanathar Temple

சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்ற ஊரில் கைலாசநாதர் கோவில் இருக்கிறது. சேலத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் உள்ளது. ஊரின் நடுவில் மேற்கு பக்கம் பார்த்தபடி கோயில் உள்ளது. கோயிலின் ஐந்து மாடி ராஜகோபுரத்தில் ஏழு கலசங்களும், சுமார் 375 சுண்ணாம்புச் சிற்பங்களும் உள்ளன. கோயிலின் முன் மண்டபத்தில் உள்ள எட்டு தூண்களும் அழகான சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. முதல் தூணும் கடைசி தூணும் வளைந்து இருப்பது போல செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கோவில் அழகான சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. இங்கே இரண்டு சிறப்பான சிற்பங்கள் உள்ளன. ஒன்று, சிங்கத்தின் வாயில் உருளும் கல். மற்றொன்று, இராமர் வாலியைக் கொல்லும் காட்சி. இவை பார்ப்பவர்களை வியக்க வைக்கின்றன. தூண்களில் யாழி மிருகத்தின் மேலும், இரண்டு குதிரைகளின் மேலும் வீரர்கள் அமர்ந்திருப்பது போல சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன. யாழியின் வாயில் ஒரு கல் உருண்டை உள்ளது. அந்த உருண்டையை கை கொண்டு தொட முடியாது. ஆனால் விரல்களை நுழைக்கும் அளவுக்கு இடம் உள்ளது. சிற்பி இந்த கல் உருண்டையை அப்படியே செதுக்கி உள்ளார்.

மாசி மாதம் 9, 10, 11 ஆம் நாட்களில் சூரியனின் ஒளி நந்தியின் கொம்பு வழியாக வந்து சிவலிங்கத்தின் மேல் மூன்றாம் பிறை போல விழுகிறது. இதைக்காண நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.

கோயிலில் இரதி சிலையை பார்க்கும் போது மன்மதன் சிலை தெரியாது. ஆனால் மன்மதன் சிலையிலிருந்து பார்க்கும் போது இரதி சிலை தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.

இத்தலத்தில் கல்லால் செய்யப்பட்ட சங்கிலி, தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பக்கலையின் சிறப்பை காட்டுகின்றன. கோயிலின் நுழைவு வாசலில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் படிக்கட்டாக உள்ளது.

தாரமங்கலம் கோயிலின் முன்பகுதியில் உள்ள தூண்களில் இராமன், வாலி சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. வாலி சிலையைப் பார்க்கும் போது இராமன் தெரியாது. இராமனைப் பார்க்கும் போது வாலி தெரியும். இந்தக் கதை மிக அழகாக சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் கீழே, காற்று கூட உள்ளே போக முடியாத அறையில் ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. இதற்கு பச்சை கற்பூரம் போட்டு செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கினால், கல்யாணம் ஆகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழில் நன்றாக நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இக்கோயிலில் சுரகேசுவரர் மூன்று தலை, மூன்று கால்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடை மாலை அணிவித்து வழிபட்டால் காய்ச்சல், மற்ற குணமாகாத நோய்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்

Salem Mecheri bathrakaliamman temple
Salem Mecheri bathrakaliamman temple

சேலத்தில் இருந்து 32 கி.மீ தூரத்திலும், மேட்டூர் அணையில் இருந்து 20 கி.மீ தூரத்திலும் பத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் 800 ஆண்டுகளுக்கு மேல் பழையது. கோவிலின் முன்புறம் வடக்கே பார்த்த பெரிய ராஜகோபுரம் உள்ளது. கோவிலைச் சுற்றி உயரமான சுவர்கள் உள்ளன. நான்கு பக்கங்களிலும் கோபுரங்களோடு வாசல்கள் உள்ளன.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனின் சிலை எட்டு கைகளுடன் உள்ளது. கைகளில் பல்வேறு பொருட்களை ஏந்தி இருக்கிறார். வலது காலை ஊன்றி, இடது காலால் அசுரனை மிதித்தபடி அமர்ந்திருக்கிறார். மூக்குத்தி, பவளமாய் ஜொலிக்கும் சிரிப்பு, நெருப்பு போன்ற மகுடம், காது அணிகள் ஆகியவற்றுடன் அழகாக காட்சி தருகிறார்.

மாசி மாதத்தில் திருவிழா நடக்கும். அப்போது பக்தர்கள் பூக்கரகம், அலகு, தீச்சட்டி எடுப்பார்கள். அக்னிக்குண்டத்தில் நடப்பார்கள். தினமும் காலையிலும் மாலையிலும் பூஜை நடக்கும்.

தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, வைகாசி விசாகம், பௌர்ணமி, அமாவாசை, ஆடிப்பூரம், மாசி மகம், கார்த்திகை தீபம், நவராத்திரி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பொய்மான் கரடு, பனமரத்துப்பட்டி

Poiman Garuda
Poiman Garuda

சேலத்தில் இருந்து 9 கி.மீ தூரத்தில் பொய் மான் கரடு என்ற இடம் உள்ளது. இது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனைமரத்துப்பட்டி அருகே இருக்கிறது. இங்கே ஒரு சுவாரசியமான காட்சி உள்ளது. கிழக்கு பக்கம் உள்ள மலையில், இரண்டு பாறைகளுக்கு நடுவே ஒரு குகை இருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது, அந்த குகை இரண்டு கொம்புகள் கொண்ட மான் போல தெரியும். ஆனால் அருகில் சென்று பார்த்தால், அங்கே மான் இருக்காது. அதனால் தான் இதற்கு ‘பொய் மான் கரடு’ என்று பெயர். இப்போது இந்த இடம் நல்ல சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

பூலாம்பட்டி (சேலத்தின் கேரளா)

poolampatti
Poolampatti

பூலாம்பட்டி என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.

சேலத்தில் இருந்து 49 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. குட்டி கேரளா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் மேட்டூர் அணையில் உள்ளது. அது 22 கி.மீ தொலைவில் இருக்கிறது. பூலாம்பட்டியின் பக்கத்து ஊர்கள்: கிழக்கே எடப்பாடி (12 கிமீ), மேற்கே நெருஞ்சிப்பேட்டை (6 கிமீ), வடக்கே மேட்டூர் (17 கிமீ), தெற்கே சங்ககிரி (27 கிமீ) தொலைவில் உள்ளது.

காவிரி கரையில் இருப்பதால், இங்கு விவசாயம் தான் முக்கிய தொழில். கரும்பு, நெல், வாழை, மஞ்சள் போன்ற பயிர்கள் நன்றாக வளர்கின்றன. அருகில் உள்ள தடுப்பணையில் விவசாயத்துக்கான தண்ணீரைத் தேக்கி வைக்கிறார்கள். சிறிய அளவில் மீன்பிடித்தலும் நடக்கிறது. சில மீனவர்கள் ஆற்றில் படகு சவாரி நடத்தி வருமானம் ஈட்டுகிறார்கள்.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கம் பூலாம்பட்டிக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து படகில் காவிரி ஆற்றைக் கடந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டைக்குச் செல்லலாம். இதற்காக விசைப்படகு சேவை இயங்குகிறது.

தான்தோன்றீஸ்வரர் கோயில், பேளூர்

Belur Thanthondreeswarar Temple
Belur Thanthondreeswarar Temple

சேலத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. வசிட்ட நதி ஓரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பழைய சிவன் கோயிலுக்கு தான்தோன்றிநாதர் கோயில் என்று பெயர்.

இக்கோயிலில் உள்ள நடன மண்டபம் அழகிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்கள் தாரமங்கலம் கோயில் தூண்களைப் போலவே இருக்கின்றன. இங்கேயும் யாழி என்ற விலங்கின் வாயில் கல் உருண்டை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் வடக்குப் பகுதியில் சிங்கத்தின் வாய் வழியாக கிணற்றுக்குச் செல்லும் பாதை ஆச்சரியம் தரும் வகையில் அமைந்துள்ளது. தெற்குப் பகுதியில் உள்ள புனித மரமான பலா மரம், இலுப்பை மரமாக மாறியிருப்பது வியப்பாக உள்ளது.

இக்கோயிலில் எட்டு கைகளுடனும், ஐந்து ஆயுதங்களுடனும் காணப்படும் சிலை மிகவும் அழகாக உள்ளது. அதேபோல் ஆறு முகங்களுடன் காட்சி தரும் முருகப்பெருமானின் சிலையும் பார்க்க அழகாக உள்ளது.

ஆத்தூர்க் கோட்டை

Attur Fort
Attur Fort

சேலத்தில் இருந்து 51 கி.மீ தூரத்தில் ஆத்தூர் உள்ளது. இங்கே பழைய கோட்டை ஒன்று நன்றாக பாதுகாக்கப்படுகிறது. வசிஷ்ட நதி ஓரத்தில் இந்த ஊர் இருக்கிறது. அதனால் தான் ஆற்றூர் என்று இருந்த பெயர் இப்போது ஆத்தூர் ஆனது.

இந்நகரம் நெல் விற்பனையில் பெயர் பெற்றது. ‘ஆத்தூர் கிச்சிடி சம்பா’ என்ற நெல் வகை புகழ் பெற்றது. இங்கே பல அரிசி ஆலைகள் உள்ளன.

கி.பி. 1559-1585 காலத்தில் கெட்டி முதலி என்ற சிற்றரசர் இந்தக் கோட்டையைக் கட்டினார். அக்காலத்தில் தான் கோட்டைக்குள் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் முதலியார் சிலையும் உள்ளது.

கோட்டையைச் சுற்றி மூன்று பக்கம் பெரிய அகழி உள்ளது. தெற்கே வசிஷ்ட நதி ஓடுகிறது. நான்கு பக்கமும் உயரமான சுவர்கள் உள்ளன. பீரங்கி வைக்க இடங்களும், ஓய்வு எடுக்க அறைகளும், பாதுகாப்புக்காக சிறிய வாசல்களும் உள்ளன.

கோட்டைக்குள் நான்கு நெல் களஞ்சியங்கள், பழைய மண்டபங்கள், இராணியின் தனி அரண்மனை, இரண்டு நீச்சல் குளங்கள் ஆகியவை உள்ளன. கிழக்குச் சுவர் இடிந்து போய் உள்ளது. கோட்டைக்குள் உள்ள சிவன் கோயில் காயநிர்மலேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இக் கோயில் ஆதித்தசோழன் காலத்து பாணியில் கட்டப்பட்டுள்ளது.

சங்ககிரி மலைக்கோட்டை

Sankari Fort
Sankari Fort

இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் கோட்டைகளுல் சங்ககிரி கோட்டையும் ஒன்றாகும். இந்தக் கோட்டை சேலத்திலிருந்து 38 கி.மீ தூரத்திலும், ஈரோட்டிலிருந்து 22 கி.மீ தூரத்திலும் உள்ளது. விஜயநகர மன்னர்கள் 15-ஆம் நூற்றாண்டில் இதைக் கட்டினார்கள்.

கோட்டைக்கு 12 மதில்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். கொங்கு நாட்டிற்கான வரி வசூல் கிடங்காகவும் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. திப்பு சுல்தானும், பிறகு ஆங்கிலேயர்களும் இதை படைத்தளமாகப் பயன்படுத்தினர்.

கோட்டை ஒரு பக்கம் மிகவும் சரிவாக உள்ளது. ஒரே வழியில் மட்டுமே மேலே செல்ல முடியும். அதனால் இது பாதுகாப்பான இடமாக இருந்தது.

கோட்டையில் தானியம் சேமிக்கும் கிடங்கு, இரண்டு பள்ளிவாசல்கள், இரண்டு பெருமாள் கோவில்கள் உள்ளன. ஆங்கிலேயர்கள் கட்டிய அலுவலகங்களும், கல்லறைகளும் உள்ளன. நமது விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை ஆங்கிலேயர்கள் இங்கே தான் தூக்கிலிட்டார்கள்.

இராமானுஜர் மணிமண்டபம்

Ramanujar Mani Mandapam
Ramanujar Mani Mandapam

இராமானுஜர் மணிமண்டபம் சேலம் மாவட்டத்தில் எருமபாளையம் ஏரிக்கரையில் உள்ளது. இது இராமானுஜரின் 1000-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டது.

சேலம் நகரில் இருந்து 10 கி.மீ தூரத்தில் இக்கோயில் இருக்கிறது. எருமபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

மண்டபத்தின் மேல் 18 அடி உயரத்தில் இராமானுஜர் சிலை இருக்கிறது. நான்கு மூலைகளில் நான்கு பெருமாள்கள் உள்ளனர் – திருவரங்க ரங்கநாதர், திருவேங்கடமுடையான், வரதராச பெருமாள், சம்பத்குமார சுவாமி.

இக்கோயில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

இங்கே இராமானுஜரின் வாழ்க்கை பற்றிய படம் காட்டப்படுகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு இடம், நீரூற்று, நூலகம் ஆகியவை உள்ளன. முதியவர்களுக்கு லிஃப்ட் வசதியும், சுற்றிப் பார்க்க மின்சார வாகனமும் உள்ளன.

சேலம் மாவட்டத்தின் சிறப்புகள்

  • சேலம் மாநகரத்தைச் சேர்ந்தவர் சி. விஜயராகவாச்சாரியார்.
  • 1937ல் முதன்முதலில் சேலம் மாவட்டத்தில் தான் மதுவிலக்கு தொடங்கியது.
  • இங்கு விளையும் மல்கோவா மாம்பழம் மிகவும் புகழ் பெற்றது.
  • சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தென்னிந்தியாவில் முதன்முதலில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட படங்களை எடுத்தது.
  • சேலம் என்ற பெயரில் அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஊர்கள் உள்ளன.
  • இந்த ஊரில் கைத்தறி மற்றும் வணிக நிலையங்கள் நிறைய உள்ளன.
  • லீ பஜார் என்ற பகுதியில் பல மண்டிகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை தோறும் பெரிய சந்தை நடக்கும். பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள்.
  • சேலம் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமானது.
  • ஓமலூர் சாலையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது.

சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்

  • தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் (24 கி.மீ)
  • குமரகிரி கோவில் (5 கி.மீ)
  • கந்தராஸ்ரமம் (10 கி.மீ)
  • திப்பு சுல்தான் கட்டிய பள்ளிவாசல்
  • சேலம் எஃகு ஆலை
  • குரும்பபட்டி உயிரியல் பூங்கா (10 கி.மீ)
  • ஏற்காடு (35 கி.மீ)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *