யுகாதி, தெலுங்கு பண்டிகையாகும். இது தெலுங்கு புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.
யுகாதி என்றால் என்ன ?
பிரம்மா இவ்வுலகை படைக்க தொடங்கிய நாளை உகாதி இந்து மத நூல்கள் மற்றும் புராணங்கள் குறிக்கிறது. பிரம்மா காலத்தை வரையறுக்க வருடங்கள், வாரங்கள், நாட்கள் மற்றும் மாதங்களை உருவாக்கி பிரபஞ்ச செயல்பாட்டின் அடையாளமான உகாதியை தொடங்கியதாக நம்பப்படுகிறது. உகாதி அல்லது யுகாதி யுகம் என்ற பொருளை கொண்டது. ஆதி என்றால் புதியது என்று பொருள்படும்.
யுகாதி பண்டிகை கொண்டாட்டம்
யுகாதி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிப்பார். இது மனதையும் உடலையும் தூய்மையாக்கி புத்தாண்டுக்கு தயார்படுத்துவதாக நம்பப்படுகிறது. மக்கள் புதிய ஆடைகளை அணிகின்றனர். இது ஒரு புதிய தொடக்கத்தையும் குறிக்கிறது. மக்கள் தங்கள் வீடுகளை மா இலைகள் மற்றும் ரங்கோலிகளால் அலங்கரிக்கின்றனர். விழாவையொட்டி சிறப்பு உணவுகள் தயார் செய்வார்கள்.
இந்து புத்தாண்டின் முதல் நாள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் பட்வா என்றும், காஷ்மீரில் நவ்ரஹ் என்றும், கொங்கனில் சன்வட்சர் பட்வோ என்ற பெயரிலும், மேற்குவங்கத்தில் பொய்லா போய்ஷாக் என்ற பெயரிலும், அசாமில் பிஹூ என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் யுகாதி என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்கத்தின் படி இந்துக்களின் புத்தாண்டான யுகாதி இந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
யுகாதி பச்சடி
இந்த நாளில் யுகாதி பச்சடி வைப்பது மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இது வேப்பம்பூ, மாங்காய், வெல்லம், காரம், உப்பு உள்ளிட்ட அறுசுவைகளையும் சேர்த்து செய்யப்படுவதாகும். இந்த நாளில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதுண்டு.
இதையும் படிக்கலாம் : பூரணை தினங்களில் முக்கியத்துவம்