ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகள்..!

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழகத்தில் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலந்தூர் பகுதியையும் சென்னை புறநகர் பகுதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட தொகுதி ஸ்ரீபெரும்புதூர். கார் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள தொகுதி இது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

சட்டமன்ற தொகுதிகள்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • மதுரவாயல்
  • அம்பத்தூர்
  • ஆலந்தூர்
  • திருப்பெரும்புதூர்
  • பல்லாவரம்
  • தாம்பரம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
16 ஆவது

(2014)

9,82,501 9,63,204 264 19,45,969
17 ஆவது

(2019)

11,02,231 11,08,288 332 22,10,851

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1967 திமுக சிவசங்கரன்
1971 திமுக டி.எஸ். லட்சுமணன்
1977 அதிமுக சீராளன் ஜெகன்னாதன்
1980 திமுக நாகரத்தினம்
1984 இந்திய தேசிய காங்கிரசு மரகதம் சந்திரசேகர்
1989 இந்திய தேசிய காங்கிரசு மரகதம் சந்திரசேகர்
1991 இந்திய தேசிய காங்கிரசு மரகதம் சந்திரசேகர்
1996 திமுக நாகரத்தினம்
1998 அதிமுக டாக்டர் வேணுகோபால்
1999 திமுக அ. கிருட்டிணசாமி
2004 திமுக அ. கிருட்டிணசாமி
2009 திமுக த. ரா. பாலு
2014 அதிமுக க. நா. இராமச்சந்திரன்
2019 திமுக த. ரா. பாலு
2024 திமுக த. ரா. பாலு

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

தி.மு.க வேட்பாளர் அ. கிருட்டிணசாமி வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக அ. கிருட்டிணசாமி 5,17,617
அதிமுக டாக்டர் வேணுகோபால் 2,82,271

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் த. ரா. பாலு வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக த. ரா. பாலு 3,52,641
பாட்டாளி மக்கள் கட்சி ஏ. கே. மூர்த்தி 3,27,605
தேமுதிக அருண் சுப்பரமணியன் 84,530

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் க. நா. இராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக க. நா. இராமச்சந்திரன் 5,45,820
திமுக எஸ். ஜெகத்ரட்சகன் 4,43,174
மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாசிலாமணி 1,87,094

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் த. ரா. பாலு வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக த. ரா. பாலு 7,93,281
பாட்டாளி மக்கள் கட்சி ஏ. வைத்திலிங்கம் 2,85,326
மக்கள் நீதி மய்யம் எம். சிறீதர் 1,35,525

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தி.மு.க வேட்பாளர் த. ரா. பாலு வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக த. ரா. பாலு 7,58,611
அதிமுக பிரேம் குமார் 2,71,582
தமாகா வி.என்.வேணுகோபால் 2,10,110

இதையும் படிக்கலாம் : காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *