காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
தை அறுவடைத் திருவிழா தமிழர் பண்டிகை. விவசாயிகளுக்கு, இது மிகவும் மகிழ்ச்சியான நாள்.
பூமியின் இயற்கை வளங்களையும் உயிரினங்களையும் நிலைநிறுத்திய சூரிய பகவானுக்கு தமிழ் மக்கள் நன்றி தெரிவிக்கும் பாக்கியமான நாள் இது.
ஆன்மாவின் பிரதிபலிப்பே சூரிய பகவான். ஒருவருக்கு ஆத்மபலம் வேண்டுமானால் ஜாதகத்தில் சூரியபலம் வர வேண்டும்.
தமிழ் நாடுகளில் அறுவடைத் திருவிழா மிகவும் பிரபலம். பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் சூரிய வழிபாட்டை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சூரியனின் சாரம் கொண்டு நாம் விளையும் பயிர்களை அறுவடை செய்யும் நேரம் இது.
சூரியன் நமக்கு விளைச்சலைத் தருவதால், நன்றியுள்ள இதயத்துடன் சூரியனை வணங்குகிறோம்.
அதனால்தான் பொங்கல் பண்டிகை “உழவர் திருநாள்” என்று அழைக்கப்படுகிறது.
பொங்கல் தினத்தன்று உலையில் பால் வைத்து புத்தரிசி, புதுவெல்லம் போட்டு பொங்கல் செய்து சூர்யாவுக்கு சமர்பிப்போம்.
அந்த நேரத்தில், புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம்.
வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை போன்றவற்றை ஆதவனுக்கு வழங்குகிறோம்.
பொங்கலுக்கு முந்தைய நாள், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றன. அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கல், வயல்களை உழுவதற்கு உதவும் மாடுகளைக் கொண்டாடுகின்றன.
இதையும் படிக்கலாம் : சூரியன் மந்திரம்