தகைமைத் தனியில் (பழநி) – திருப்புகழ் 164 

தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் – பவனாலே

தரளத் திரளிற் புரளக் கரளத்
தமரத் திமிரக் – கடலாலே

உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் – பொழுதாலே

உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற் – றரவேணும்

திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் – திறல்வீரா

திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் – குழைமார்பா

பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் – பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : திருப்புகழ் 111 – 221

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *