தினமும் மூன்று முறை துதி சொல்லுங்கள்..!

தினமும் மூன்று முறை மந்திரத்தை சொல்லி ஸ்ரீ சக்கரத்தை வணங்க வேண்டும்.

 

“அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!

துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து

நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு

உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!”

 

தீபத்தில் மலர்களை சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீ சக்கரத்துக்கு செய்ய வேண்டும்.

சிவசக்கரம் நான்கும் வடதிசையை நோக்க தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய் நாற்பத்து நான்காகி ஸ்ரீ சக்ர மானாய் வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டிய பின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீ சக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகே மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும். ஸ்ரீ சக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாம் : குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவான் ஸ்லோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *