/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ திருமணத் தடையையும் நீக்கும் திருப்புகழ் மந்திரம்

திருமணத் தடையையும் நீக்கும் திருப்புகழ் மந்திரம்

திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள் நல்ல பதில் கிடைக்கும்.

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.

இதையும் படிக்கலாம் : தோஷம் நீக்கும் மயில் இறகு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *