தோஷம் நீக்கும் மயில் இறகு..!

remove all your doshas with a peacock feather

கடவுள் முருகனின் வாகனம் மயில் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சனி தோஷம் நீங்க

மூன்று மயில் இறகை ஒன்றாக இணைத்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்குமாம்.

வாஸ்து தோஷம் நீங்க

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகை ஒன்றாக சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, அதை பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்துவினால் ஏற்பட்ட தோஷம் நீங்குமாம்.

செல்வம் அதிகரிக்க

நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் மயில் இறகு ஒன்றை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.

இதையும் படிக்கலாம் : செல்வம் பெருக பெண்கள் வீட்டில் செய்ய வேண்டியவை..!

எதிர்மறை ஆற்றல் நீங்க

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

பூச்சிகள் வராது

மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

உற்பத்தி மேம்பட

ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

ஒற்றுமை ஓங்க

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்னைகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாம் : ஆன்மிக தகவல்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *