தினந்தோறும் குளிப்பது நம்முடைய தனிப்பட்ட சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமானது. நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமாக நோய்கள் பலவற்றை வராமல் தடுக்க முடியும்.
அதே சமயம், தினமும் குளிக்கும்போது ஸ்க்ரப் செய்வது அவசியமில்லை. மேலும் அதிகப்படியான குளியலால் சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியாவும் கழுவப்படுவதால், சருமத்தில் வறட்சி, வெடிப்பு, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை உண்டாகும்.
தினமும் குளிப்பது என்பது அவர் அவர் தனிப்பட்ட விருப்பம் ஆனால் உடலில் இந்த 3 உறுப்புகளை மட்டும் அவசியம் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
அக்குள்
நம் உடலில் அதிகப்படியாக வியர்வை சுரந்தால், சருமத்தில் பாக்டீரியாக்கள் நிறைய படிந்து, துர்நாற்றம் வீசக் கூடும். அக்குள் பகுதியில் வியர்வையினால் வரக் கூடிய தொந்தரவுகள் அதிகம். அக்குளில் பாக்டீரியா சேர்ந்தால் துர்நாற்றம், அரிப்பு மற்றும் போன்ற பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
அக்குள் பகுதியில் உள்ள முடியை அவ்வப்போது நீக்குவதோடு, தினமும் அக்குள் பகுதியை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
இதையும் படிக்கலாம் : உள் தொடையில் உள்ள கருமை நீங்க சில டிப்ஸ்..!
இடுப்பு பகுதி
தினமும் குளிக்கும் போது இடுப்பு பகுதியை சுத்தம் செய்து, அத்துடன் உள்ளாடையையும் மாற்ற வேண்டும். அதே சமயம், ஈரப்பதம் உள்ள ஆடைகளை அணியக் கூடாது.
மடிந்த தோல் மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதியில் முடிகள் இருப்பதால் அங்கு மில்லியன் கணக்கான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தங்கும். இதனால் நோய்த்தொற்று, அரிப்பு மற்றும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே அந்தரங்க பகுதியை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பாதம்
உடலில் பலரும் சுத்தம் செய்ய மறந்து விடும் பகுதி பாதங்கள் தான். பொதுவாக குளிக்கும்போது உடலின் மற்ற பாகங்களை தேய்த்து குளிப்பது போல பாதங்களை தேய்த்து குளிக்க மறந்து விடுவார்கள். ஆனால் பாதங்களுக்கு நினைப்பதை விட அதிக கவனம் தேவை. ஏனெனில் இப்பகுதியில் தான் வியர்வை அதிகமாக சுரக்கும்.
குறிப்பாக நாள் முழுவதும் சாக்ஸ் அணிந்தால். இப்பகுதியை தினமும் சுத்தம் செய்வதன் மூலம் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.
குளிக்கும்போது, உடலின் சில பகுதிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. அக்குள், இடுப்பு மற்றும் பாதங்கள் தவிர, உடலின் சில பாகங்கள் பாக்டீரியாவின் புகலிடமான விரல் நகங்களின் கீழ், காதுகளுக்குப் பின்னால், தொப்பை பொத்தான், கழுத்தின் பின்புறம் அவற்றையும் சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாம் : குதிகால் வெடிப்பை போக்க சில இயற்கை வழிகள்..!