உள் தொடையில் உள்ள கருமை நீங்க சில டிப்ஸ்

dark thights

முகம், கை மற்றும் கால் வெள்ளையாக இருந்தாலும், பெரும்பாலும் கழுத்து, அக்குள், பிறப்புறுப்பு மற்றும் உள் தொடை தான் கருமை படிந்திருக்கும். ஏனெனில் உள் தொடையில் உண்டாகும் கருமை நிறத்தை சட்டென்று பார்ப்பதில்லை என்பதோடு அதைக் கண்டாலும் பெரிதுபடுத்துவதும் இல்லை. அதைப் பராமரிப்பதும் இல்லை.

கருமைக்கான காரணங்கள்

  • இரண்டு தொடைகளுக்குமான உராய்வு
  • ஹார்மோனல் பாதிப்பு
  • இறுக்கமான உடை அணிதல்
  • காற்றோட்டம் இல்லாதது
  • வியர்த்துப் போகுதல்
  • மருந்துகளை உட்கொள்ளுதல்
  • சருமம் வறட்சிடைவது
  • அடிக்கடி ஷேவிங் செய்வது

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறை இயற்கை பிளீச் என்று சொல்லலாம். இதில் விட்டமின் சி அதிகம் உள்ளதால் இவை புதிய செல்களை உருவாக்க கூடியவை.

எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து கருமையான பகுதியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி விடவும். இதனை தினமும் செய்து வந்தால், கருமையாக இருக்கும் இடத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழையானது  உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், சருமத்தை மிருதுவாக்கும்.

கற்றாழையின் தோலை நீக்கி, சதைப்பகுதியை நன்றாக கழுவி அதை பேஸ்டாக்கி  தொடைப் பகுதியில் தடவவேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவ வேண்டும்.

இதையும் படிக்கலாம் : உதடு வெடிப்புக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்

சந்தனம்

சந்தனத்தில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து, கருமை உள்ள இடத்தில் தடவி உலர்த்த பின் கழுவ வேண்டும். தினமும் செய்து வந்தால், உள் தொடையில் உள்ள கருமை நீங்கி, பொலிவோடு இருக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்சுரைசர்.

தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தொடைப் பகுதியில் தடவி பின் 20 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவவேண்டும். வாரத்தில் 4 முறை செய்வதால் நல்ல மாற்றத்தை காணலாம்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் சருமத்துக்கு சிறந்த பிளீச்சிங் எஃபெக்டை தரும்.

ஆரஞ்சு பழ தோலை நன்கு வெயிலில் காய வைத்து அதை பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆரஞ்சு தோல் பவுடரில், சிறிது தேன் கலந்து தொடையின் கருமையான பகுதியில் தடவி பின் 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரம் 2-3 முறையாவது இதை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து கருமையான தொடைப் பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவேண்டும்.

பால் பவுடர்

பால் பவுடர் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1/2 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் உள் தொடையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாம் : முகப்பரு நீங்க வீட்டு வைத்தியம்

முக்கிய குறிப்பு

  • சோப்புக்கு பதிலாக குளியல் பொடி அல்லது பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம்.
  • தொடைக்கு காற்றோட்டம் தேவை எனவே இரவு நேரத்திலாவது தளர்வான ஆடைகளை அணிந்து பழகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *