‘விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும் போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய் விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.
சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.
நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது. பொதுவாக நெய் தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.
திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்று சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்
மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க.. உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம்.
ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகி விடும் என்று கூறினான்.
அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.
இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம் அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார்.
இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.
இதையும் படிக்கலாம் : பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் விலக பரிகாரம்..!!
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!
பொருள்
புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி. இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’
பொதுவான விதிமுறைகள்
- விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
- பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
- விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
- இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
- தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
- தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.
முக்கிய குறிப்பு
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.
மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். இது விஷம். மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.
ஆஸ்துமா, மார்புபுற்றுநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.
இதையும் படிக்கலாம் : இறைவனை ஆலயம் சென்று வழிபடுவது ஏன் தெரியுமா..?