பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் விலக பரிகாரம்..!!

பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம்

மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன.

மாந்தீரிக கலை என்பது கத்தியை போன்றது. கத்தி மருத்துவர் கையில் இருக்கும் போது உயிரை காக்கும். அதே கத்தி ஒரு முரடனிடம் இருந்தால் உயிரை எடுக்கும். இந்த முரடனை போன்ற மனநிலை கொண்ட பலர் பிறர் மீது ஏற்படும் பொறாமை மற்றும் கோபம் காரணமாக சில தீய மாந்திரீகர்களை கொண்டு பிறருக்கு ஏவல், பில்லி, சூனியம் செய்வினை, துஷ்ட ஆவிகள் போன்றவற்றின் மூலம் தீமை விளைவிக்க முயல்கின்றனர்.

பில்லி

ஒரு மனிதனின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து குழப்பி அவரது எண்ணம், செயல், சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரிக முறையே பில்லி எனப்படுகிறது.

சூனியம்

ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே சூனியம். இவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் ஆடை, அணிகலன்கள், முடி, காலடி மண் போன்றவைகளைக் கொண்டு செய்யப்படுகிறது.

ஏவல்

ஏவல் என்பது ஒருவரை, அவன் விரும்பாத அல்லது உடன்படாத காரியம் ஒன்றினை செய்திடும் படி ஏவுதல் ஆகும். பூசையில் வைத்து மந்திரசக்தியூட்டப் பட்ட உணவுப் பொருட்களை உண்ணக் கொடுப்பதன் மூலமாக ஒருவரை ஏவலில் சிக்க வைக்க முடியுமாம்.

வசியம்

தான் விரும்பிய அல்லது விரும்பாத ஒருவரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவது தான் வசியம். இது ராஜ வசியம், லோக வசியம், சர்வ வசியம், மிருக வசியம், ஆண்பெண் வசியம் என தேவைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்த வகையில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் செய்கின்றனர். பெரிய அளவில் ஏமாற்று வேலைகள் நடப்பதும், ஏமாறுவதும் இந்த வகையினரே!

பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் விலக பரிகாரம்

நமக்கு யாரேனும் இத்தகைய தீமையான காரியத்தை செய்திருந்தால் அதிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

எதையும் அழிக்கும் வல்லமை பெற்றது நெருப்பு. அந்த நெருப்பின் முழு உருவமாக இருக்கும் “சூரிய பகவானை” தினமும் நமஸ்கரிப்பவர்களை எப்படிப்பட்ட துஷ்ட சக்திகளும் தீய மாந்திரீக ஏவல்களும் எதுவும் செய்ய முடியாது.

செய்வினை ஏவல் பாதிப்புகள் இருப்பதாக உணருபவர்கள் வருடத்தில் வருகிற தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற தினங்களில் கடலை ஒட்டி இருக்கும் கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற கோவில்களின் கடலில் நீராடி, அந்த கோவில்களில் இருக்கும் இறைவனை வணங்க வேண்டும். அந்த கடல் நீரை ஒரு மிகப்பெரிய புட்டியில் பிடித்து வந்து, நம் வீட்டின் பூஜையறையில் வைத்து வணங்கி, பின்பு வீட்டை சுற்றிலும் அந்நீரின் சில துளிகளை தெளிக்க மாந்திரீக கட்டு ஏதேனும் இருந்தால் அது உடையும்.

வசிய மருந்து ஏதேனும் உங்களுக்கு கொடுக்கப்பட்டதாக உணர்ந்தால் ஒரு மண்டலம் முழுதும் தினந்தோறும் உணவில் முருங்கை அல்லது அகத்திக்கீரை சேர்த்து உண்ண உடலில் தங்கியிருக்கும் எப்படிப்பட்ட வசிய மருந்தின் சக்தியும் முறியும்.

பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ மூர்த்திக்கு பூசணிக்காயை இரண்டாக வெட்டி, விளக்கெண்ணெய் அல்லது பஞ்சதீப எண்ணையை ஊற்றி, திரி போட்டு தீபமேற்றி வழிபட்டு வந்தால் எப்படிப்பட்ட செய்வினை கோளாறுகளும் நீங்கும்.

துஷ்ட சக்திகளால் பாதிப்பு ஏற்படுமோ என பயப்படுபவர்கள் மதுரை கள்ளழகர் கோவிலில் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு சாற்றப்பட்ட காய்ந்த சந்தனத்தை சிறிது எடுத்துக்கொண்டு வந்து, வீட்டின் பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதே போல் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்பவர்கள் அங்கு நெருப்பில் இட்டு கொளுத்தப்படும் தேங்காயை சிறிது எடுத்து கொண்டு வந்து பூஜையறையில் வைத்து கொள்ள உங்களை எத்தகைய துஷ்ட சக்திகளும் அண்டாது. நம்மால் இவ்விடங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இந்த இடங்களுக்கு செல்லும்போது இவற்றை கொண்டுவர சொல்லி பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *