வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 14வது தொகுதியாக வில்லிவாக்கம் தொகுதி உள்ளது. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | க. சுப்பு | திமுக | 37,327 |
1980 | பிராபகர் ராசன் | அதிமுக | 57,192 |
1984 | வி. பி. சித்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 81,595 |
1989 | உ. ரா. வரதராசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 99,571 |
1991 | ஜி. காளன் | இந்திய தேசிய காங்கிரசு | 1,18,196 |
1996 | ஜே. எம். ஆரூண்ரஷீத் | தமாகா | 1,94,471 |
2001 | துரைசாமி நெப்போலியன் | திமுக | 1,64,787 |
2006 | ப. ரங்கநாதன் | திமுக | 2,78,850 |
2011 | ஜே. சி. டி. பிரபாகர் | அதிமுக | 68,612 |
2016 | ப. ரங்கநாதன் | திமுக | 65,972 |
2021 | அ. வெற்றியழகன் | திமுக | 76,127 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,17,587 | 1,21,830 | 61 | 2,39,478 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64
திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதி