வினைதீர்க்கும் விசாகம்..!

வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு கொண்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

பிறகு, தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்றி விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

விநாயகர் பூஜை முடிந்ததும் முருகப்பெருமானின் நாமத்தை ஜபித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.

மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பி கந்த ஷஷ்டி கவசம் மற்றும் கந்தரனுபூதி படிக்கவும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார்.

அங்கிருந்து ஏழாம் பார்வையாகிய விசாக நட்சத்திரத்தைப் பார்த்தார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

விசாக நட்சத்திரத்தை அனுசரித்து சூரியன் முருகப்பெருமானை வழிபடுவதாக நம்பப்படுகிறது.

எனவே தான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

விசாக நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

விரோதம் நீங்கி அன்பு பெருகும். அதிருப்தியான தீராத வினைகளும், எதிரிகளிடமிருந்து வந்த தொல்லைகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாம் : திதிகளில் வணங்க வேண்டிய கணபதி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *