பெண் பிறப்புறுப்பு வறட்சி, தொற்று, B.H. அளவு குறைவாக இருந்தால் அரிப்பு ஏற்படலாம். இதை தடுப்பதற்கான சில வழிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பெண் பிறப்புறுப்பு ஒவ்வாமையை தடுக்கும் முறைகள்
வேப்பிலை
வேப்ப இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த தண்ணீரை பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்வதால் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வெளியேறும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை அரிப்பு உள்ள பகுதிகளில் தடவுவதும் ஒரு சிறந்த தீர்வாகும்.
கற்றாழை
கற்றாழையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பூஞ்சைகளை அழிக்கும் திறனும் இதற்கு உண்டு. எனவே அதன் சதைப்பகுதியை பிறப்புறுப்பின் அரிப்பு பகுதிகளில் தடவலாம். கற்றாழை நேரடியாக சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்.
பூண்டு
பூண்டு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டை அரைத்து, வைட்டமின் ஈ எண்ணெயில் கலந்து தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இறுக்கமான உள்ளாடைகளை அணிய வேண்டாம். பருத்தி துணி பயன்படுத்தவும். கழிப்பறை மற்றும் குளித்த பிறகு பிறப்புறுப்பு பகுதியில் ஈரப்பதம் இல்லாமல் வைத்திருப்பது நன்மை பயக்கும்.
இதையும் படிக்கலாம் : உள் தொடையில் உள்ள கருமை நீங்க சில டிப்ஸ்