/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ முதுகு வலியை போக்க என்ன செய்யலாம்? - Thagavalkalam

முதுகு வலியை போக்க என்ன செய்யலாம்?

what-to-do-for-back-pain

இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் அதிகமாக பயமுறுத்தும் ஒரு நோய் முதுகு வலி. யாரைப் பார்த்தாலும் முதுகில் பெல்ட் மாட்டிக் கொண்டு சுற்றுகின்றனர். ஆண்கள் அதிகளவு டூவீலரில் சுற்றுவதால் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர்.

  • முதுகுவலி, கால் வலி உள்ளவர்கள் காலுக்க்கிடையிலோ அல்லது காலுக்கு கீழோ தலையணை வைத்து படுத்தால் ஓரளவிற்கு முதுகுவலியில் இருந்து விடுதலை பெறலாம்.
  • சிலருக்கு டெலிவரியின் போது முதுகு தண்டில் ஊசி போடுவதாலும் ஏற்படும்.
  • முதுகுவலி உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், வெயிட் அதிகமாக தூக்கக்கூடாது.
  • ஓவர் வெயிட்டாக இருந்தாலும் முதுகு வலி வரும் வெயிட்டை குறைத்தால் கூட இடுப்பு வலி முதுகு வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
  • முதுகுவலி இருப்பவர்கள் அதுவும் ஆபிஸில் வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காருவதை தவிர்க்கவும்.
  • அரை பக்கெட் தண்ணீரை கூட தம் பிடித்து தூக்கக்கூடாது, இதனால் இடுப்பு வலி முதுகுவலி ஏற்பட வாய்ப்பிருக்கு.
  • ஒரு நாளைக்கு இரு முறை ஹாட் வாட்டர் பேக் ஒத்தடம் கொடுத்தால் 50% வலி குறையும்.
  • கர்பிணி மாதம் ஏற ஏற வெயிட் காலில் இறங்கும் போது அவர்களுக்கு கால் வலி பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வர வாய்ப்பிருக்கு. அதற்கு அவர்கள் காலுக்கடியில் சைடில் கூட தலையணை வைத்து படுத்தால் கர்ப காலத்திலும் அதற்கு பிறகும் வரும் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
  • சேரில் உட்காரும் போது பின்னாடி ஒரு சிறிய தலையணை வைத்து கொண்டு உட்காரலாம்.
  • ரொம்ப முதுகுவலி உள்ளவர்கள் பெட்டில் படுக்காமல் கீழே படுத்து கொண்டு முதுகுக்கு மட்டும் ஒரு திக்கான துணியை விரித்து படுத்தால் ஓரளவிக்கு கட்டு படும்.
  • எந்த ஒரு பொருளையும் கீழே சட்டுன்னு குனிந்து எடுக்கக்கூடாது. குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ஒரு சிறிய சேர் போட்டு உட்கார்ந்து குளிக்க வைக்கலாம்.

இதையும் படிக்கலாம் : உள் தொடையில் உள்ள கருமை நீங்க சில டிப்ஸ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *