பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறு பூஜைகள் நடக்கும். தேவர்களும் இதேபோன்ற ஆறுகால பூஜைகளை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம். அவர்களுக்கு தட்சிணாயணம், உத்தராயணம் என இரண்டு வகையான காலங்கள் உண்டு.
தை முதல் ஆனி வரை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) உத்தராயணம்.
ஆடி முதல் மார்கழி வரை (மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) தட்சிணாயணம்.
அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது நமக்கு மார்கழி. காலைப் பொழுது மாசி மாதம். மதியம் சித்திரை திருவோணம். மாலைப் பொழுது ஆனி. இரவு நேரம் ஆவணி. அர்த்தஜாமம் புரட்டாசி. இதற்காக நடராஜப் பெருமானுக்கு 6 முறை அபிஷேகம் செய்வது வழக்கம்.
ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடைபெறுகின்றன.
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேக நிகழ்வு நடைபெறும்.
ஆனி மாத அபிஷேகம் உத்திர நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் 4 மணிக்கு நடைபெறும்.
ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
மாசி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தசி அன்று மாலை கனகசபையில் அபிஷேகம் நடைபெறுகிறது.
சிறப்புமிக்க இந்த ஆறு நாட்களிலும் நடராஜப் பெருமானை சந்தித்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம் : ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்