வீட்டில் அதிகமாக பல்லிகள் இருப்பதால், அது விழுவது இயற்கையானது. ஆனால் ஜோதிட அறிவியலின் படி, பல்லிகள் நம் வாழ்வோடு தொடர்புடையவை என்பதால், பல்லி எங்கு விழுகிறது என்பதை வைத்தே பலன் கணிக்கப்படுகிறது.
இடது கை விழுவது
உடலின் இடது கை அல்லது காலில் பல்லி விழுந்தால், அன்றைய நாள் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவோம். ஆனால், பல்லி நமது உடலின் வலது கை அல்லது காலில் பட்டால், உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தலையில் பல்லி விழுவது
தலையில் பல்லி விழுவது துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது. இது மோசமான காலத்திற்கான எச்சரிக்கை என்று கூறப்படுகிறது. இப்படி தலையில் பல்லி விழுந்தால் நிம்மதியை இழந்து போவது, எதிர்ப்புகள், உறவினர்களுடன் இணக்கம் குறைதல் போன்றவை ஏற்படும். ஆனால் பல்லி நேரடியாக தலையில் படாமல், தலைமுடியில் மட்டும் பட்டால் நல்லது நடக்கும்.
நெற்றியில் பல்லி விழுவது
நெற்றியில் பல்லி விழுந்தால் நல்ல அறிகுறி. குறிப்பாக நெற்றியின் இடது பக்கத்தில் விழுந்தால் நன்மைகள் வரும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் பணவரவு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.
வலது மார்பில் பல்லி விழுவது
வலது மார்பில் பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும். இந்த பல்லி இடது மார்பில் பட்டால், அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
முகத்தில் பல்லி விழுவது
முகத்தில் பல்லி விழுந்தால் உறவினர் வீட்டுக்கு வரப்போகிறார்கள் என்று அர்த்தம். அதேபோல புருவத்தில் பல்லி விழுந்தால் உயர்ந்த அரச அந்தஸ்து கைகூடும். கண் அல்லது கன்னத்தில் பல்லி விழுந்தால், சில செயல்களுக்கு உங்களுக்கு தண்டனை கிடைக்க போகிறது என்று அர்த்தம்.
தொடைப்பகுதியில் பல்லி விழுவது
தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், உங்கள் பெற்றோருக்கு அதிருப்தி தரும் ஒரு செயலை நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் காலில் பல்லி விழுந்தால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு நிச்சயம் வரும்.
கழுத்தில் பல்லி விழுவது
கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யப்போகும் வேலை வெற்றியடையும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் மற்றவர்களுடன் பகை ஏற்படும்.
தொப்புள் பல்லி விழுவது
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் தங்க வைரம் உள்ளிட்ட நவரத்தினம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்
பல்லி எந்த இடத்தில் விழுந்தாலும், முதலில் குளித்துவிட்டு, அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் அல்லது வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
இதையும் படிக்கலாம் : பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும்