பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும்

palli sollum palan

பொதுவாக வீட்டில் உள்ள பல்லிகள் நமக்கு வரவிருக்கும் நல்லது, கெட்டதுகளை முன்கூட்டியே அறியும் வல்லமை பெற்றவை. எனவேதான் அவை நாம் பேசும் விஷயங்களுக்கு முடியும், முடியாது என்பது போல் பதிலளிக்கின்றன. பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் என்ன பலன் என்று பார்ப்போம்.

பல்லிகள் தெய்வ சுபிட்சம் பெற்றவை. எனவே தான் கோவில்களில் பல்லிகளின் திருவுருவங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் தொட்டு வணங்கும் பொழுது நமது பாவங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன.

பல்லியை கொன்றால் பாவம்

நமது பாவங்களை போக்குகின்ற அருள் பெற்ற பல்லிகளை அடித்துக் கொன்றோம் என்றால் அதனை விட பெரிய பாவம் வேறு ஒன்றும் இல்லை.பல்லியை பிடிக்கவில்லை என்றால், அதை துன்புறுத்தாமல் விரட்டலாமே தவிர எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது.

ஒருவேளை இதற்க்கு முன்பு தெரியாமல் பல்லியை கொன்றிருந்தால் அந்த பாவத்தை போக்க, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்கி அந்த பாவத்தை போக்கிக்கொள்ளலாம்.

பல்லி சொல்லுக்கான பலன்

  • ஒரு சொல் சொன்னால் துன்பம்
  • இரண்டு சொல் சொன்னால் தனலாபம்
  • மூன்று சொல் சொன்னால் மரணம்
  • நான்கு சொல் சொன்னால் சௌக்கியம்
  • ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை
  • ஆறு சொல் சொன்னால் பீடை
  • ஏழு,எட்டு சொல் சொன்னால் அகமலிவு

பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் என்ன பலன்

கிழக்கு திசை

பல்லி கிழக்கே சொல்லுவது ராகு கிரகத்தின் தன்மை. வீட்டின் கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால்  தேவையற்ற மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்பதால் கிழக்கு திசையில் சத்தமிடுவது நல்லதல்ல.

மேற்கு திசை

மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும்,  சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும்.

வடக்கு திசை

வடதிசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுப செய்திகள் தேடிவரும்.

தெற்கு திசை

தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும், அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும்.

தென்மேற்கு திசை

தென்மேற்கு மூலையாகிய குபேர திசையிலிருந்து பல்லி சொன்னால் விருந்தினர்கள் வருவார்கள். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் நண்பர்கள் மூலம் அல்லது உறவினர்கள் மூலம் எதிர்பாராத நன்மை வந்தடையும்.

தென்கிழக்கு திசை

தென்கிழக்கு திசையான அக்னி மூலையில் இருந்து கொண்டு பல்லி சத்தம் போட்டால் வீட்டில் ஏதேனும் ஒரு கலகம் வர வாய்ப்பு உண்டு. இந்த நாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் அந்த வீட்டிற்கு ஏதேனும் ஒரு கெட்ட செய்தி வந்தடையும்.

இதையும் படிக்கலாம் : பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *