சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் எவ்வளவு பிடிக்குமோ அதே போல் நெய்யின் நன்மைகள் பற்றியும் அறிந்துகொள்வோம். இது உடலுக்கு மட்டும் அல்ல கூந்தலுக்கும் பல நன்மை செய்யக்கூடியது.
நெய்யை லேசாக சூடு செய்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளிப்பதால், கூந்தல் கூடுதல் மிருதுவாகவும், பொலிவாகவும் வைக்க உதவும். கூந்தல் நன்றாக வளரும். மேலும் கூந்தலுக்கு நல்ல கண்டிஷன் செய்தது போல இருக்கும். கூந்தலை வறண்டு போகாமல், ஆரோக்கியமாக ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்.
பொடுகுத் தொல்லை
நெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து, இந்தக் கலவையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு ஊறவைக்கவும். பின்னர் கழுவி விடுங்கள். இதன் மூலம் பொடுகுத் தொல்லை படி படியாக குறையும்.
மேலும் படிக்க : நெய்யினால் சருமத்திற்கு உண்டாகும் நன்மைகள்
கூந்தல் நிறம் குறைந்திருந்தால்
எலுமிச்சை சாறுடன் நெய் சேர்த்து கூந்தலில் தேய்த்து, பத்து நிமிடம் ஊறியதும் குளிப்பதால் கூந்தலில் இயற்கையான பொலிவைப் பார்க்கலாம்.
இளநரை மற்றும் சொரியாசிஸ்
இளநரை மற்றும் சொரியாசிஸ் உள்ளவர்கள், மருத்துவ குணம் கொண்ட நெய் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.
கூந்தல் அடர்த்திக்கு
நெய்யோடு, நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் வெங்காயச் சாறு சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதன் மூலம் விரைவில் கூந்தல் உதிர்வது குறைந்து நன்றாக வளரும்.