நெய்யினால் சருமத்திற்கு உண்டாகும் நன்மைகள்

நெய்யினால் சருமத்திற்கு உண்டாகும் நன்மைகள்

கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுபவராக இருந்தால் நெய் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். நல்ல சுத்தமான நெய்யை உணவில் மட்டுமல்லாது, சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.

உதடு காய்ந்து, கருமையாக இருந்தால், நெய் தடவுவதால். மிருதுவான, ரோஸ் நிறத்தில் மாறிவிடும். கண்களைச் சுற்றி உள்ள கருமையைப் போக்க நெய் பயன்படுத்துவதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

வறண்ட சருமம் இருந்தால், குளிப்பதற்கு முன் நன்றாக தடவி ஊற வைத்து 15 நிமிடங்கள் கழித்து குளிப்பதன் மூலம் மிருதுவான, மென்மையான சருமம் கிடைக்கும்.

பாலுடன், கடலை மாவு மற்றும் நெய் சேர்த்து கலந்து இதை முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவுவதால் அழகான பொலிவான முகம் கிடைக்கும்.

ஒரு தேக்கரண்டி நெய்யோடு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொண்டு பின்னர் இதில் பச்சைப்பாலை கலந்து கொள்ளுங்கள். குளிர்காலங்களில் சருமம் வறண்டு போனால் இந்தக் முகப்பூச்சு உபயோகித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக பங்குபெரும் பொருள் நெய். இது புண்களுக்கும், சருமத்தில் உள்ள கரைகளுக்கும் நல்ல தீர்வை தரும். 100 கிராம் நெய்யில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து, பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் நன்றாக கலக்கி, பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள்.

இந்த முறையை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ப்ளெண்டர் பயன்படுத்தலாம். 20 முறை குறைந்தது செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது, நெய் நிறம் மாறி வெள்ளை நிறமாகும். இதை உடலின் வெளிப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உட்கொள்ளக்கூடாது.

வெயிலில் சென்று கருத்த தோள், பருக்களால் ஏற்பட்ட கருமை, தழும்பு, அரிப்பு போன்ற எந்த சரும பிரச்சனைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுபவராக இருந்தால் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு துளி நெய் எடுத்து முகத்தில், கை, கால்களில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சி இல்லாமல் பாதுகாக்கும்.

முகத்தில் சுருக்கங்கள் இருப்பின் நெய் தினமும் தடவ சுருக்கங்கள் நீங்கும். நெய்யில் விட்டமின் ஈ இருப்பதால் சருமத்தின் அழகை மேம்படுத்தும்.

குளிப்பதற்கு முன் வாசனை எண்ணெயுடன் 10 சொட்டு நெய் கலந்து கை,கால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சூப்பர் ஃபிரெஷாக உணர்வீர்கள்.

சருமம் பொலிவிழந்து களையிழந்து காணப்பட்டால் நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பிரெஷான பொலிவு பெறும். கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம்.

வறண்ட உதடுடன் போராடுகிறீர்கள் எனில் தினமும் நெய் தடவி வாருங்கள். வறட்சி மட்டுமன்றி பிங் உதடும் கிடைக்கும். தூங்கும் முன் தினமும் உதட்டில் நெய் தடவி மசாஜ் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கருமையான உதடு மாறும்.

இதையும் படிக்கலாம் : சருமத்தைப் பாதுகாக்கும் இயற்கையான ஃபேஸ் பேக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *