அடிக்கடி மட்டன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

mutton benefits

அசைவ உணவில் மனிதனுக்கு அதிகப்படியான நன்மை தரக்கூடிய உணவு மட்டன் தான். மட்டனில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்த கூடியது.

ஆட்டின் தலை, இதயம், மூளை, நுரையீரல், கால், குடல் மற்றும் ஈரல் என்று ஒவ்வொன்றிலும் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன.

மட்டன் சாப்பிடுவதன் மூலம் நன்மைகள்

மட்டன் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதனால் இதய நோய் வரும் வாய்ப்பு குறையும். மட்டனில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

மட்டன் சாப்பிட்டால், அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

ஆட்டு இறைச்சி சாப்பிடுவன் காரணமாக, நமது சிறுநீரக சுரப்பி வலிமை அடையும்.

ஆண்கள் மட்டன் அதிகம் சாப்பிட்டால், அவர்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும். மேலும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்யும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும்.

மட்டனில் உள்ள நியாசின் என்னும் விட்டமின், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, ஆற்றலை மேம்படுத்தும். படிக்கும் குழந்தைகளுக்கு சிக்கனை விட, மட்டன் அதிகம் கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு அதிகரித்து, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து கிடைக்கிறது.

மட்டனில் இருக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர பொருட்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். அதிலும் வாரத்தில் 2 முறை மட்டனை உட்கொண்டு வந்தால், உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணரலாம்.

ஆட்டின் தலை

தலைக்கறி சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் தீரும்.

இதையும் படிக்கலாம் : மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

ஆட்டின் கண் மற்றும் நாக்கு

ஆட்டின் கண் பகுதியைச் சாப்பிட்டால் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு பலம் கிடைக்கும். கண் கோளாறுகள் சரியாகும்.

ஆட்டின் நாக்கு உடல் சூட்டை அகற்றும். அதோடு நம்முடைய சருமத்துக்கு பளபளப்பை தரும்.

ஆட்டின் மார்புப்பகுதி

ஆட்டின் மார்புப்பகுதி, கபம் பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. இது கபத்தை அறுக்கும் ஆற்றல் உடையது. மார்புக்கு பலத்தைக் கொடுப்பதோடு ஏதேனும் மார்புப் பகுதிகளில் புண்கள் இருந்தால் வேகமாக ஆற்றக்கூடியது.

ஆட்டின் கொழுப்பு

கொலஸ்ட்ரால் பயத்தால் சிலர் கொழுப்பை வெறுத்து ஒதுக்குவார்கள். ஆனால் உண்மையில் ஆட்டினுடைய கொழுப்பானது இடுப்புப் பகுதிக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

உடம்பில் எத்தகைய வலி மற்றும் புண்ணையும் ஆற்றக்கூடிய குணம் இதற்கு உள்ளது. இந்த ஆட்டுக் கொழுப்பு அம்மை நோய், அக்கி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.

ஆட்டின் மூளை

ஆட்டின் மூளை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். ஆண்களுக்கு ஆண்மை விருத்திக்கும் தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும். புத்திக்கூர்மை பெறும். நினைவாற்றலை அதிகரிக்கும். மேலும் மூளையை பலப்படுத்தும்.

ஆட்டின் நுரையீரல்

ஆட்டின் நுரையீரல் சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு நுரையீரலுக்கு பலத்தைக் கொடுக்கும். மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சினை இருக்கிறவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமையும்.

ஆட்டுக்கால்

ஆட்டுக்கால் சூப் வைத்து சாப்பிடுவதனால் நமது எலும்புகள் வலுவாகும். நெஞ்சு சளியை வெளியேற்றும். கால்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

ஆட்டின் ஈரல்

ஆட்டினுடைய ஈரலை சாப்பிட்டால் நம்முடைய ஈரலைப் பலப்படுத்தும். உடலின் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். ரத்த விருத்திக்கு ஈரல் மிகச்சிறந்த மருந்து.

ஆட்டுக்குடல்

ஆட்டுக் குடல் அல்சர் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்து. ஆட்டினுடைய குடல் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடிய ஆற்றல் கொண்டது.

இதையும் படிக்கலாம் : கண் கருவளையம் மறைய டிப்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *