மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.

மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது. மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.

மீனில் உள்ள சத்துக்கள்

  • வைட்டமின் டி
  • கால்சியம்
  • புரதம்
  • பாஸ்பரஸ்
  • இரும்பு சத்து
  • ஜிங்க்
  • அயோடின்
  • மெக்னீசியம்
  • பொட்டாசியம்

கடலில் இருந்து நமக்கு கிடைக்கும் மீன்களில் முக்கியமான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த சத்தானது உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைக்க உதவுகிறது. நம் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள ஒமேகா 3 ஃபேட்டி உதவி செய்கிறது.

குழந்தைகளுக்கு உணவில் மீன் அதிகமாக சேர்த்து வர ஆஸ்துமா நோயை வரவிடாமல் தடுக்கலாம். ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டோர் மீனை உண்டு வந்தால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

மீனில் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. இதனால் டயட்டில் உள்ளவர்கள் இந்த உணவினை சேர்த்துக் கொள்ளலாம். நாம் உண்ணும் உணவில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி, நம் எலும்பு வளர்ச்சியை ஆரோக்கியமாக்க இந்த விட்டமின் டி அவசியமாக நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் உள்ளதால் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குறைக்கப்படுகின்றன. நம் இதயத்தை இந்த ஒமேகா-3 கொழுப்பு பாதுகாக்கிறது. மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மனச்சோர்வு உடையவர்களால் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட முடியாது. மீனை தொடர்ந்து சாப்பிட்டு வர மீனில் உள்ள, மீன் எண்ணெய் சத்து மனச்சோர்வை அகற்றி உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. இதனால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். சத்துக் குறைபாடு உள்ளவர்கள் மீன் சத்து மாத்திரையை சாப்பிடலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு சென்று அவர்களின் பார்வையை சீராக வைக்கிறது. தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் தன்மையும் மீன் உண்பதால் கிடைக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இந்த நோய் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக்கப் படுகிறது.

நம் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை முடக்குவாதம் என்று கூறுகிறோம். மூட்டுவலி உள்ளவர்கள், மூட்டில் வீக்கம் உள்ளவர்கள், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது விரைவில் குறைய ஆரம்பித்துவிடும்.

சில பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் குமட்டல், வாந்தி, தலைவலி, மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சனைகள் இருந்து பெண்கள் தங்களை காத்துக்கொள்ள, மாதவிடாய் வரும் சமயங்களில் மீனை சாப்பிட்டு வருவதால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நம் சரும பிரச்சினைகள் குறைந்து சருமம் பொலிவுடன் காணப்படும்.

மீன்களை அதிகமாக உண்பதால் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. கர்ப்பிணி பெண்கள் மீன்களை ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் சாப்பிட்டு வரவேண்டும்.

சில மீன்களுக்கு சூடு தன்மை அதிகமாக இருக்கும். அந்த மீன்களை எல்லாம் அவர்கள் முழுமையாக தவிர்ப்பது நல்லது. மாதம் இரண்டு முறையோ, அல்லது மூன்று முறையோ மீனை சாப்பிட்டு வரலாம். இதன்மூலம் குறைபிரசவம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மீனில் வைட்டமின்-டி அதிகமாக உள்ளதால் நீண்ட தூக்கத்திற்கு இது வழி வகுக்கும். நீண்ட நாளாக தூக்கம் வராமல் தவித்து கொண்டிருப்பவர்கள் மீன் உண்டால் நல்ல தூக்கம் பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *