
பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும் கோயிலுக்குச் சென்று, அங்கு செய்யப்படும் வழிபாடுகளை சரியாகச் செய்வதன் மூலம், இந்தக் கஷ்டங்கள் நீங்கும். சிறந்த பைரவர் தலங்கள் பற்றி பார்க்கலாம்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பைரவருக்கு யாகமும், பைரவருக்கு இரவு நேர பூஜையும் செய்தால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பைரவ பூஜையை ஏகமனதாகச் செய்வதால் எதிரிகளின் தொல்லைகளை நீங்கும். தேன் மற்றும் உளுந்து வடை நிவேதனம் செய்யது வழங்கப்பட வேண்டும்.
திருமணம் கைகூட
ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜையில் முப்பது வாரங்கள் நெய் தீபம் ஏற்றினால் திருமணம் கைகூடி வரும்.
ஆபத்துக்கள் விலக
கால பைரவ அஷ்டகத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலமும், சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலமும், ஏற்பட இருக்கும் ஆபத்துகளைத் தடுக்கலாம். ஒரு நாளைக்கு 9 முறை தொடர்ந்து 12 நாட்கள் படிக்க, எதிரி பயப்படுவார்.
ஆணவத்தை அழிக்கும் பைரவர் உங்கள் இன்னல்களை நீக்குவார். 12 நாட்களின் முடிவில் முடிந்தால் 9 பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
சனி பகவானை தொடர்ந்து ஆறு வாரங்கள் சனிக்கிழமைகளில் 6 எண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதால் எதிர்ப்புகள் நீங்கும்.
இதையும் படிக்கலாம் : 27 நட்சத்திர பைரவர்