தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கடலூர் மக்களவைத் தொகுதி 26வது தொகுதி ஆகும்.
கடலூர் துறைமுகம் மற்றும் மீன்பிடி தொழில்கள் வருவாய் ஈட்டும் முக்கிய தொழில்களாகும். பண்ருட்டி பகுதியில் பயிரிடப்படும் முந்திரி பிரதான பயிராக இருந்து வருகிறது. முந்திரி ஏற்றுமதியும் இந்த பகுதியில் அதிக அளவில் நடைபெறுகிறது. ஒரு சில நகரங்களைத் தவிர, பெரும்பாலானவை கிராமப்புறங்கள்.
கடலூர் தொகுதியை பொறுத்த வரையில் காங்கிரஸ் நீண்ட நாட்களாக வெற்றி பெற்று வருகிறது. காங்கிரசுக்கும் இந்த தொகுதி அடிக்கடி கூட்டணியில் ஒதுக்கப்படுகிறது. திமுக, அதிமுக இரண்டு முறை இங்கு வெற்றி பெற்றுள்ளன. எவ்வாறாயினும், இம்மாவட்டத்தில் போட்டியிட இருகட்சியும் பொதுவாக ஆர்வம் காட்டவில்லை.
சட்டமன்ற தொகுதிகள்
கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- திட்டக்குடி (தனி)
- விருத்தாச்சலம்
- நெய்வேலி
- பண்ருட்டி
- கடலூர்
- குறிஞ்சிப்பாடி
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
17 ஆவது
(2019) |
6,73,660 | 6,89,899 | 91 | 13,63,650 |
18 ஆவது
(2024) |
10,45,551 | 10,77,438 | 287 | 21,23,276 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
1951 | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | கோவிந்தசாமி கச்சிராயர் |
1957 | சுயேட்சை | முத்துக்குமாரசாமி |
1962 | திமுக | இராமபத்ரன் |
1967 | திமுக | வி. கே. கவுண்டர் |
1971 | இந்திய தேசிய காங்கிரசு | ச. இராதாகிருஷ்ணன் |
1977 | இந்திய தேசிய காங்கிரசு | ஜி. பூவராகவன் |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | முத்துக்குமரன் |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | பி. ஆர். எஸ். வெங்கடேசன் |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | பி. ஆர். எஸ். வெங்கடேசன் |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | கலியபெருமாள் |
1996 | தமிழ் மாநில காங்கிரசு | பி. ஆர். எஸ். வெங்கடேசன் |
1998 | அதிமுக | எம். சி. தாமோதரன் |
1999 | திமுக | ஆதி சங்கர் |
2004 | திமுக | கே. வெங்கடபதி |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | கே. எஸ். அழகிரி |
2014 | அதிமுக | அ. அருண்மொழித்தேவன் |
2019 | திமுக | டி. ஆர். வி. எஸ். ரமேஷ் |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | எம். கே. விஷ்ணு பிரசாத் |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எசு. அழகிரி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | எசு. அழகிரி | 3,20,473 |
அதிமுக | மு. சி. சம்பத் | 2,96,941 |
தேமுதிக | எம். சி. தாமோதரன் | 93,172 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் அ. அருண்மொழித்தேவன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | அ. அருண்மொழித்தேவன் | 4,81,429 |
திமுக | நந்தகோபாலகிருஷ்ணன் | 2,78,304 |
தேமுதிக | ஜெயசங்கர் | 1,47,60 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் டி. ஆர். வி. எஸ். ரமேஷ் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | டி. ஆர். வி. எஸ். ரமேஷ் | 5,22,160 |
பாமக | கோவிந்தசாமி | 3,78,177 |
நாம் தமிழர் கட்சி | சித்ரா | 34,692 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | எம். கே. விஷ்ணு பிரசாத் | 4,55,053 |
தேமுதிக | பி. சிவக்கொழுந்து | 2,69,157 |
பாமக | தங்கர் பச்சான் | 2,05,244 |
இதையும் படிக்கலாம் : சிதம்பரம் மக்களவைத் தொகுதி