கடலூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கடலூர் மக்களவைத் தொகுதி 26வது தொகுதி ஆகும்.

கடலூர் துறைமுகம் மற்றும் மீன்பிடி தொழில்கள் வருவாய் ஈட்டும் முக்கிய தொழில்களாகும். பண்ருட்டி பகுதியில் பயிரிடப்படும் முந்திரி பிரதான பயிராக இருந்து வருகிறது. முந்திரி ஏற்றுமதியும் இந்த பகுதியில் அதிக அளவில் நடைபெறுகிறது. ஒரு சில நகரங்களைத் தவிர, பெரும்பாலானவை கிராமப்புறங்கள்.

கடலூர் தொகுதியை பொறுத்த வரையில் காங்கிரஸ் நீண்ட நாட்களாக வெற்றி பெற்று வருகிறது. காங்கிரசுக்கும் இந்த தொகுதி அடிக்கடி கூட்டணியில் ஒதுக்கப்படுகிறது. திமுக, அதிமுக இரண்டு முறை இங்கு வெற்றி பெற்றுள்ளன. எவ்வாறாயினும், இம்மாவட்டத்தில் போட்டியிட இருகட்சியும் பொதுவாக ஆர்வம் காட்டவில்லை.

சட்டமன்ற தொகுதிகள்

கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • திட்டக்குடி (தனி)
  • விருத்தாச்சலம்
  • நெய்வேலி
  • பண்ருட்டி
  • கடலூர்
  • குறிஞ்சிப்பாடி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

17 ஆவது

(2019)

6,73,660 6,89,899 91 13,63,650
18 ஆவது

(2024)

10,45,551 10,77,438 287 21,23,276

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு

கட்சி

வென்ற வேட்பாளர்

1951 தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி கோவிந்தசாமி கச்சிராயர்
1957 சுயேட்சை முத்துக்குமாரசாமி
1962 திமுக இராமபத்ரன்
1967 திமுக வி. கே. கவுண்டர்
1971 இந்திய தேசிய காங்கிரசு ச. இராதாகிருஷ்ணன்
1977 இந்திய தேசிய காங்கிரசு ஜி. பூவராகவன்
1980 இந்திய தேசிய காங்கிரசு முத்துக்குமரன்
1984 இந்திய தேசிய காங்கிரசு பி. ஆர். எஸ். வெங்கடேசன்
1989 இந்திய தேசிய காங்கிரசு பி. ஆர். எஸ். வெங்கடேசன்
1991 இந்திய தேசிய காங்கிரசு கலியபெருமாள்
1996 தமிழ் மாநில காங்கிரசு பி. ஆர். எஸ். வெங்கடேசன்
1998 அதிமுக எம். சி. தாமோதரன்
1999 திமுக ஆதி சங்கர்
2004 திமுக கே. வெங்கடபதி
2009 இந்திய தேசிய காங்கிரசு கே. எஸ். அழகிரி
2014 அதிமுக அ. அருண்மொழித்தேவன்
2019 திமுக டி. ஆர். வி. எஸ். ரமேஷ்

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எசு. அழகிரி வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு எசு. அழகிரி 3,20,473
அதிமுக மு. சி. சம்பத் 2,96,941
தேமுதிக எம். சி. தாமோதரன் 93,172

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் அ. அருண்மொழித்தேவன் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

அதிமுக அ. அருண்மொழித்தேவன் 4,81,429
திமுக நந்தகோபாலகிருஷ்ணன் 2,78,304
தேமுதிக ஜெயசங்கர் 1,47,60

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் டி. ஆர். வி. எஸ். ரமேஷ் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

திமுக டி. ஆர். வி. எஸ். ரமேஷ் 5,22,160
பாமக கோவிந்தசாமி 3,78,177
நாம் தமிழர் கட்சி சித்ரா 34,692

இதையும் படிக்கலாம் : சிதம்பரம் மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *