மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
சிவராத்திரி என்றால் என்ன?
சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியே சிவன் ராத்திரி. சிவராத்திரி என்பதில் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் இன்பம் என்று பொருள் கொள்ளலாம்.
சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரியை தான் சிவராத்திரி என்று கூறுகின்றனர்.
மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.
இந்த ராத்திரியில் பூஜை செய்தால் பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
சிவராத்திரி விரத வகைகள்
- நித்திய சிவராத்திரி
- மாத சிவராத்திரி
- பட்ச சிவராத்திரி
- யோக சிவராத்திரி
- மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி
சிவராத்திரி என்பது இருவகைப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் தேய்ப் பிறையில் வரும் சதுர்த்தசி நாள் சிவராத்திரி என்றும், அதுவே மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரி என்றும் அணுசரிக்கப்படுகிறது.
மகா சிவராத்திரி 2022 தேதி, பூஜைக்கான நேரம் குறித்த தகவல்கள்
மகா சிவராத்திரி வரலாறு
பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.
அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும்.
மகா சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை சிவன் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டுமென்று அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக்கொண்டாள்.
ஈசனும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
சிவராத்திரி மகிமை
சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி அளித்ததும் மகாசிவராத்திரித் திருநாளில் தான்.
மேலும் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான்.
வில்வ இலைகள்
சிவராத்திரி நாளில ஒரு காட்டில் பல பறவைகளை கொன்ற வேட்டைக்காரன் ஒருவனை பசியுள்ள சிங்கம் ஒன்று துரத்தி சென்றுள்ளது. சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேட்டைக்காரர் வில்வ மரத்தில் ஏறினார். சிங்கம் மரத்தின் அடிப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தது. மரத்திலிருந்து தூக்கத்தில் விழுவதைத் தவிர்ப்பதற்காக விழித்திருக்க வேட்டைக்காரர் வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே இறக்கி போட்டு கொண்டே இருந்தார்.
அப்போது மரத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது இலைகள் விழுந்தன. வில்வ இலைகளை வழங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவன், பறவைகளை கொல்வதன் மூலம் வேட்டைக்காரன் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து வேட்டைக்காரனைக் காப்பாற்றினார். இந்த கதை சிவராத்திரியில் வில்வ இலைகளுடன் சிவனை வழிபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
லிங்க வடிவில்
மஹா சிவராத்திரி நாளில் தான் சிவன் முதலில் ஒரு லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினான் என்று நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது மற்றும் சிவாவின் மகத்தான இரவு மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க : சிவபெருமானின் 19 அவதாரங்கள்
நான்கு ஜாம பூஜைகள்
மகா சிவராத்திரி நாளில்தான் ஈசனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படுகின்றன.
முதல் கால பூஜை
பிரம்மன் செய்யும் பூஜை முதல் கால பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
இரண்டாம் ஜாம பூஜை
மகாவிஷ்ணு செய்யும் பூஜை இரண்டாம் ஜாம பூஜை இரவு 9 முதல் நள்ளிரவு 12 மணி வரைக்கும் நடைபெறும்.
மூன்றாவது கால பூஜை
அம்பாள் செய்யும் பூஜை மூன்றாவது கால பூஜை நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை நடைபெறும்.
மூன்றாவது கால பூஜை காலத்தினை லிங்கோத்பவ இந்த என்றும் எந்த காலத்தில் சிவபெருமானின் ஆதி முடியைக் காண வேண்டி பிரம்மர் அன்ன ரூபமாக மேலேயும் மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடி சிறப்புடையது இந்த காலம்.
நான்காவது கால பூஜை
நான்காவது கால பூஜை மறுநாள் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் நடைபெறும். இந்த கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம்.
சிவராத்திரி விரதம்
மகா சிவராத்திரி எனும் புண்ணியம் நிறைந்த நன்னாளில், இரவில் நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். அப்போது சிவலிங்கமானது குளிரக் குளிர வில்வங்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்படும். அவரின் மனம் குளிரக் குளிர ருத்ர ஜப பாராயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவை பாடப்படும். சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்!
சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.
சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் கிடைக்கும்.
இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டனர். சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!
சிவராத்திரி வழிபாட்டின் மகிமைகள்
சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி.
மகா சிவராத்திரி நாளில் பிரம்மன், விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருந்து அனுஷ்டித்து நான்கு கால பூஜைகளில் பங்கேற்று அபிஷேகம் செய்கின்றனர்.
அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்ற நிலையில் இருந்தும் எம் பெருமாள் அர்த்தனாதீஸ்வரராக ஆனது இந்த நாளில்தான்.
சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.
எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.
அம்மனுக்கு நவராத்திரி, சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள்
கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
இதையும் படிக்கலாம் : சிவராத்திரி சிறப்பு பற்றிய தகவல்கள்