மகா சிவராத்திரி தேதி, பூஜைக்கான நேரம் தகவல்கள்

2022 maga shivaratri

மகா சிவராத்திரி 2022 இந்த ஆண்டு மார்ச் 1 செவ்வாய்கிழமை கொண்டாடப்பட உள்ளது. மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி அன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம்.

மகா சிவராத்திரி

maha shivaratri
மகா சிவராத்திரி

சிவராத்திரி என்பது இருவகைப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் தேய்ப்பிறையில் வரும் சதுர்த்தசி நாள் சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதுவே மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி நாள் மகாசிவராத்திரி என்றும் அணுசரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க : மகா சிவராத்திரி வரலாறு

மகா சிவராத்திரி தேதி மற்றும் பூஜை நேரம்

முதல் கால பூஜை

மார்ச் 1ம் தேதி மாலை 6.21 மணி முதல் இரவு 9.27 மணி வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் சோமாஸ்கந்தர்
அபிஷேகம் பஞ்சகவ்யம்
அலங்காரம் வில்வம்
அர்ச்சனை தாமரை, அலரி
நிவேதனம் பால் அன்னம்,சக்கரைபொங்கல்
பழம் வில்வம்
பட்டு செம்பட்டு
தோத்திரம் இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி புட்பதீபம்

இரண்டாம் கால பூஜை

மார்ச் 1 இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் தென்முகக் கடவுள்
அபிஷேகம் பஞ்சாமிர்தம்
அலங்காரம் குருந்தை
அர்ச்சனை துளசி
நிவேதனம் பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் பலா
பட்டு மஞ்சள்பட்டு
தோத்திரம் யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் அகில், சந்தனம்
புகை சாம்பிராணி, குங்குமம்
ஒளி நட்சத்திரதீபம்

மூன்றாம் கால பூஜை

மார்ச் 2ம் தேதி நள்ளிரவு 12:33 மணி முதல் 3.39 மணி வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் இலிங்கோற்பவர்
அபிஷேகம் தேன், பாலோதகம்
அலங்காரம் கிளுவை, விளா
அர்ச்சனை மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் எள்அன்னம்
பழம் மாதுளம்
பட்டு வெண்பட்டு
தோத்திரம் சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை மேகம், கருங் குங்கிலியம்
ஒளி ஐதுமுக தீபம்

நான்காம் கால பூஜை

மார்ச் 2 காலை 3:39 முதல் 6:45 வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் கரு நொச்சி
அர்ச்சனை நந்தியாவட்டை
நிவேதனம் வெண்சாதம்
பழம் நானாவித பழங்கள்
பட்டு நீலப்பட்டு
தோத்திரம் அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் புணுகு சேர்ந்த சந்தணம்
புகை கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி மூன்று முக தீபம்

மகா சிவராத்திரி சிறப்பு

மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் மகாசிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் நீக்குவதோடு காரிய வெற்றியும் ஏற்படும். ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது, ‘உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், சிவாலயங்களில் நான்கு கால பூஜையிலும் சிவனை நினைத்து அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *