
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து ஜனவரி 1, 1995 அன்று பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் பெரம்பலூர் நகரம்.
பெரம்பலூர் மாவட்டம் 322 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம், நவம்பர் 23, 2007-இல் உருவாக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | பெரம்பலூர் |
பரப்பளவு | 1,752 ச.கி.மீ |
மக்கள்தொகை | 5,65,223 |
அஞ்சல் குறியீடு | 621212 |
தொலைபேசி குறியீடு | 04328 |
வாகனப் பதிவு | TN-46 |
- வரலாறு
- அமைவிடம்
- தோற்றம்
- மக்கட் தொகை
- உலோக மற்றும் கனிம வளம்
- முதன்மை தொழிலகம்
- விவசாயம்
- மாவட்ட வருவாய் நிர்வாகம்
- உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
- அரசியல்
- இலங்கை அகதிகள் முகாம்
- கல்வி நிலையங்கள்
- பெரம்பலூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
- ரஞ்சன்குடி கோட்டை
- மாவட்டத்திலுள்ள ஏரிகள்
- மாவட்டத்திலுள்ள ஆறுகள்
- மாவட்டத்திலுள்ள அருவிகள்
- மாவட்டத்திலுள்ள அணைகள்
- மாவட்ட காவல்
வரலாறு
1741-இல் மராட்டியர் திருச்சியைத் தாக்கி சந்தா சாபேவை சிறை பிடித்தனர். 1748-இல் சந்தா சாகேப் ஆட்சியைப் பிடித்தார். ஆனால் விரைவில் ஆற்காடு நவாப் அன்வார்டின் மற்றும் அவரது மகன் முகமது அலி ஆகியோருக்கு எதிராக காநாடக நவாபின் பிரபலமான போர்களில் ஈடுபட்டார்.
அரியலூர் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் முகமது அலிக்கு வரி கட்ட மறுத்தனர். அவர் இதை சென்னை ஆட்சியாளரிடம் முறையிட்டார். படை உதவி பெற்று அரியலூரைக் கைப்பற்றினார். பாளையக்காரர்கள் உடையார்பாளையம் ஓடினர். பின்னர் அங்கும் தோற்று டேனிஷ் பகுதிக்கு தப்பினர்.
திப்பு சுல்தான் காலத்தில் ஆங்கிலேயர் அவருக்கு உதவினர். 1801இல் திருச்சி ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தது. 1995-இல் திருச்சியில் இருந்து பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் பிரிந்தன.
பெரம்பலூர் மாவட்டம் பல முறை பிரிக்கப்பட்டும் இணைக்கப்பட்டும் வந்தது. 2007இல் பெரம்பலூர், அரியலூர் என இரு மாவட்டங்களாக பிரிந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு வட்டங்கள் உள்ளன – பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றி கடலூர், சேலம், திருச்சி, அரியலூர் மாவட்டங்கள் உள்ளன.
அமைவிடம்
பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கே கடலூர் மாவட்டம், தெற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கில் அரியலூர் மாவட்டம், வடமேற்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் தென்மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
பெரம்பலூர் மாவட்டம், தமிழகத்தின் மையப்பகுதியில், சென்னைக்கு தெற்கே 267 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது 10.54′ மற்றும் 11.30′ டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 78.54′ மற்றும் 79.30′ டிகிரி கிழக்கு அட்சரேகைக்கு இடையில் அமைந்துள்ளது, இது 1,757 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
தோற்றம்
பெரம்பலூர் நகரமும் நகரின் வடக்குப் பகுதியும் சுதந்திரத்திற்கு முன்பு தெற்கு ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது, பின்னர் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாட்டு அரசாணை எண் Ms.No.913 வருவாய் (Y3) துறை நாள் செப்டம்பர் 30, 1995 முதல் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, இணைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பெரம்பலு மாவட்டத்தைத் தலைநகராகக் கொண்டு புதிய பெரம்பலு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அரசாணை எண் Ms.No.656, வருவாய்த்துறை, நாள் டிசம்பர் 29, 2000 மற்றும் அரசாணை எண் Ms.No.657, அரசாணை நாள் டிசம்பர் 29, 2000-இன்படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்ட அரியலூர் மாவட்டம் என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
பின்னர் அரசாணை எண் Ms.No.167 வருவாய்த்துறை ஏப்ரல் 19, 2002 மற்றும் அரசாணை எண் Ms.No.168 வருவாய்த்துறை மேற்குறிப்பிட்ட இரு மாவட்டங்களையும் இணைத்து பெரம்பலூர் மாவட்டத்தைத் தலைநகராகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்க 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் படி ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் 19.04.2002 அன்று உருவானது. பின்னர், தமிழ்நாடு அரசாணை எண் Ms.No.683 வருவாய்த்துறை நாள் நவம்பர் 19, 2007 -இன்படி பெரம்பலூர் மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டமும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்டு அரியலூர் மாவட்டமும் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
மக்கட் தொகை
பெரம்பலூர் மாவட்டம் 1,756 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 5,65,223 ஆகும். 2,82,157 ஆண்கள் மற்றும் 2,83,066 பெண்கள். 10.54% ஆறு வயதுக்குட்பட்டவர்கள். சராசரி கல்வியறிவு விகிதம் 74.32% ஆகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 82.87% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 65.90% ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1003 பெண்கள். பட்டியல் சாதியினர் 33.27%. மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 5,21,658 (92.29%) பேர்; இசுலாமியர்கள் 32,702 (5.79 %) பேர்; கிறித்தவர்கள் 10,301 (1.82%) பேர்; இம் மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு தோராயமாக 321 பேர்.
உலோக மற்றும் கனிம வளம்
கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செலஸ்டி, சுண்ணாம்புக் கற்கள், கங்க்கர் மற்றும் பாஸ்பேட் முடிச்சுகள் கண்டறியப்பட்டுள்ளன. குன்னம், வேப்பந்தட்டை போன்ற பகுதிகளில் அதிகளவில் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதன்மை தொழிலகம்
- ஜவஹர்லால் நேரு பெரம்பலூர் சர்க்கரை ஆலை - எறையூர்
- பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா – எறையூர்
- மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை, நாரணமங்கலம்.
- தனலெட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை - உடும்பியம்.
விவசாயம்
பெரம்பலுார் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,75,739 ஹெக்டேர். சாகுபடி நிலப்பரப்பு 93,581 ஹெக்டேர். இப்பகுதியில் ஆண்டு சராசரி மழையளவு 861 மி.மீ. இந்த பகுதியில் முக்கிய பயிர்கள் பருத்தி, கரும்பு மற்றும் மக்காச்சோளம். பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகம் விளையும் பகுதியாகும். இப்பகுதியின் விளை நிலங்களில் 80% மழையை நம்பியே உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மானாவாரிப் பிரதேசமாக இருந்தாலும், ஆண்டுதோறும் சராசரியாக 400,000 டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. காவிரி ஆறு விவசாயத்திற்கு இன்றியமையாதது. இங்கு முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்திரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது, 27% சோளமும், 50% சின்ன வெங்காயமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இம்மாவட்டம் 1 வருவாய் கோட்டம், 4 வருவாய் வட்டங்கள், 11 உள் வட்டங்கள் மற்றும் 152 வருவாய் கிராமங்கள் கொண்டுள்ளது.
வருவாய் வட்டங்கள்
- பெரம்பலூர் வட்டம்
- ஆலத்தூர் வட்டம்
- குன்னம் வட்டம்
- வேப்பந்தட்டை வட்டம்
உள் வட்டங்கள்
- வடக்கலூர்
- கீழபுலியூர்
- வரகூர்
- பெரம்பலூர
- குரும்பலூர்
- வெங்கலம்
- பசும்பலூர்
- வாலிகண்டபுரம்
- செட்டிகுளம்
- கொளக்காநத்தம்
- கூத்தூர்
உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
இம்மாவட்டம் 1 நகராட்சியும், 4 பேரூராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியகளும், 121 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.
நகராட்சிகள்
- பெரம்பலூர்
பேரூராட்சிகள்
- அரும்பாவூர்
- இலப்பைகுடிக்காடு
- குரும்பலூர்
- பூலாம்பாடி
ஊராட்சி ஒன்றியங்கள்
- ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம்
- பெரம்பலூர்
- வேப்பந்தட்டை
- வேப்பூர்
அரசியல்
இந்த மாவட்டத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலும் ஒரு மக்களவைத் தொகுதியும் இங்கு உள்ளது.
சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்றத் தொகுதிகள்
இலங்கை அகதிகள் முகாம்
இலங்கை அகதிகள் முகாம் துறைமங்கலத்தில் இருக்கிறது. இந்த முகாமில் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. மொத்தம் 280 பேர் இங்கே வசிக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையும் ஒன்று பெரம்பலூரில் இருக்கிறது. அதோடு, வேப்பந்தட்டையிலும் கிருஷ்ணபுரத்திலும் தாலூக்கா மருத்துவமனைகள் இருக்கின்றன.
கல்வி நிலையங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 2017ல் கணக்கெடுப்பின் படி பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றை பற்றி கீழே பார்க்கலாம்.
- 5 கலை அறிவியல் கல்லூரிகள்
- 8 பொறியியல் கல்லூரிகள்
- ஒரு மருத்துவக் கல்லூரி
- செவிலியர் பயிற்சி கல்லூரிகள்
- 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்
- 7 பாலிடெக்னிக் கல்லூரிகள்
- ஒரு வேளாண்மைக் கல்லூரி
- 3 தொழில் பயிற்சி நிறுவனங்கள்
பள்ளிகளின் விவரம்
- 209 தொடக்கப் பள்ளிகள்
- 57 நடுநிலைப் பள்ளிகள்
- 49 உயர்நிலைப் பள்ளிகள்
- 40 மேல்நிலைப் பள்ளிகள் இவற்றுடன் CBSE பள்ளிகளும், சிறப்புப் பள்ளிகளும் செயல்படுகின்றன.
பெரம்பலூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்

சிலப்பதிகாரத்தின் கதாபாத்திரமான கண்ணகியின் கதையோடு இந்த அம்மனின் வரலாறு தொடர்புடையது. கற்புக்கரசி கண்ணகி, தன் கணவனுக்கு நடந்த அநீதியால் கோபம் கொண்டு மதுரையை எரித்தாள். பின்னர் மனம் அமைதியின்றி அலைந்த நிலையில் இந்த இடத்துக்கு வந்து அமைதி பெற்றாள். மதுரை காளியம்மனே இங்கு வந்து தங்கினாள் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
சிறுவாச்சூர் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். ஒரு மந்திரவாதி அவரை கட்டுப்படுத்தி தீய செயல்கள் செய்தான். ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுரை காளியம்மன் இங்கு வந்தபோது, செல்லியம்மன் தன் கஷ்டத்தைச் சொன்னாள். மதுரை காளியம்மன் அந்த மந்திரவாதியை அழித்தாள்.
செல்லியம்மன் அன்னையின் திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாலித்து வர வேண்டும் என வேண்டி, தான் அருகிலிருக்கும் பெரியசாமி மலைக்குச் செல்வதாகவும், ஆனால் கோயிலில் தனக்கு முதல் மரியாதை வேண்டும் என்றும் கேட்டாள். மதுரை காளியம்மன் ஒப்புக்கொண்டாள்.
அதனால் தான் இந்த கோயில் வெள்ளி, திங்கள் கிழமைகளில் மட்டும் திறக்கப்படுகிறது. பூஜையின் போது, முதலில் மலை நோக்கி தீபம் காட்டி, பின்னரே மதுரை காளியம்மனுக்கு காட்டுகிறார்கள். மற்ற நாட்களில் இரண்டு அம்மன்களும் பெரியசாமி மலையில் இருப்பதாக நம்பிக்கை உள்ளது.
காலப்போக்கில் மதுரை காளியம்மன் என்ற பெயர் மதுரகாளியம்மன் ஆனது. கோபத்துடன் வந்த அம்மன் இங்கு அமைதி பெற்று, பக்தர்களுக்கு நன்மை செய்வதால் மதுரம் (இனிமை) என்ற பெயரும் பொருத்தமானதே.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில், அமாவாசைக்குப் பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் பூசொரிதலுடன் விழா தொடங்குகிறது. அடுத்த செவ்வாய் அன்று காப்புகட்டி, 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நாள், ஆடிப்பெருக்கு, புரட்டாசி நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, பொங்கல், தைபூசம், மாசி மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் கோயில் திறந்திருக்கும். அப்போது வழிபாடு செய்யலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: மதுரகாளியம்மன் கோயில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்திருக்கும். அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் திறந்திருக்கும். சில விழா நாட்களிலும் கோயில் திறக்கப்படும். காலை 6.30 முதல் இரவு 9.00 வரை கோயில் திறந்திருக்கும்.
காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும். பின்னர் தங்கக் கவசம் அணிவித்து இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம். உபயதாரர் இருப்பின், மாலை 6.30 மணிக்கு தங்கரதம் ஊர்வலம் நடக்கும்.
ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில்
முன்காலத்தில் இந்த இடம் கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. உறையூரை ஆண்ட சோழ மன்னரின் காலத்தில், ஒரு வணிகன் வியாபாரத்துக்காக வடக்கே பயணம் செய்தான். மாலை நேரத்தில் இந்தக் காட்டுக்கு வந்த போது, இருள் சூழ்ந்ததால் ஒரு ஆலமரத்தில் ஏறி ஓய்வெடுத்தான்.
நள்ளிரவில், திடீரென்று ஒளி தோன்றி, அதில் ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. தேவர்களும் முனிவர்களும் அதை வணங்கும் காட்சியையும் இக்கடம்பவனத்தில் அவன் கண்டான்.
காலையில் உறையூர் திரும்பிய வணிகன், இதை பராந்தக சோழனிடம் சொன்னான். அப்போது சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகரபாண்டியனும், இதைக் கேட்டார். இருவரும் வணிகனுடன் கடம்பவனத்திற்குச் சென்றனர்.
அங்கே ஒரு முதியவர் கரும்பு ஊன்றுகோலுடன் தோன்றி, சிவலிங்கம் இருந்த இடத்தைக் காட்டினார். பின் அவர் ஜோதி வடிவமாக மறைந்தார். அச்சோதி மறைந்த கிழக்கே பார்த்த போது, குன்றின் மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக செங்கரும்புடன் காட்சி தந்தார்.
பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும், பாண்டியனும் சேர்ந்து, ஏகஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேஸ்வரருக்கு ஓர் ஆலயமும் கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலையின் மீது ஓர் ஆலயமும் ஏககாலத்தில் கட்டுவதென தீர்மானித்து குலசேகர பாண்டியனால் இரு ஆலயங்களும் கட்டப்பட்டது.
பின்னர், கண்ணகி பாண்டியனால் தன் கணவன் கோவலன் கொலையுண்ட பிறகு, கடுஞ்சினங்கொண்டு மதுரையை எரித்தும் சினம் தணியாதவளாக, இவ்வழி வந்த போது, முருகன் அவரின் கோபத்தை தணித்து, சிறுவாச்சூரில் மதுரகாளியாக அமர வழி காட்டினார் என்று சொல்கிறார்கள்.
செட்டிகுளம் ஊரின் நடுவில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. ஊரின் கீழ்ப்பகுதியில் உள்ள மலை மேல் தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இரண்டும் பழைமையான கோயில்கள் ஆகும்.
உறையூர் சோழன் பராந்தகனுக்கும், பாண்டிய மன்னன் குலசேகரனுக்கும் சிவன் காட்சி கொடுத்த இடத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. மலை மேல் உள்ள தண்டாயுதபாணி சுவாமி, 11 கணுக்கள் உள்ள செங்கரும்பை கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறார்.
முருகன் அசுரர்களை அழித்த பிறகு, காமாட்சி அம்மன் தன் கையில் இருந்த கரும்பை முருகனுக்கு பரிசாக கொடுத்தார். அன்று முதல் இந்த கோயிலில் முருகன் கரும்பு ஏந்தி நிற்கிறார். அதனால் தான் இங்குள்ள காமாட்சி அம்மன் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் கிழக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. மலை மேலே இருக்கும் தண்டாயுதபாணி கோயில் மேற்கு பக்கம் பார்த்து, தன் அப்பாவை நோக்கி இருப்பது சிறப்பு.
ஏகாம்பரேஸ்வரர் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய நாட்களில் காலை சூரியனின் ஒளி படும். இந்த ஒளி கொஞ்ச நேரத்தில் நகர்ந்து அம்மன் மீதும் விழும். இதைப் பார்க்க நிறைய பக்தர்கள் வருவார்கள்.
மலை மேலே உள்ள தண்டாயுதபாணி மீது மாசி மாதம் 19, 20, 21 ஆகிய நாட்களில் மாலை சூரியன் மறையும் நேரத்தில் ஒளி விழும்படி கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதிக்கு எதிரே குபேரனுக்கு தனி இடம் உள்ளது. இங்கே குபேரன் சித்ரலேகா என்பவருடன் தாமரை பூவில் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். மேலும், கோயிலின் தூண்களில் 12 ராசிகளுக்கும் குபேரன் ஓம் வடிவில் இருக்கிறார். குபேரனுக்கு பச்சை துணி கட்டி வழிபாடு செய்வது சிறப்பு.
இதனால் செல்வம் பெருக வழி செய்யும் இடமாக இந்த கோயில் விளங்குகிறது. குபேரனின் பிறந்த நட்சத்திரமான பூரட்டாதி நாளில் குபேர ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது.
சாத்தனூர் கல்மரம்

சாத்தனூருக்கு கிழக்கே 100 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று கடல் உள்ளது. ஆனால் 12 கோடி ஆண்டுகளுக்கு முன், இந்த கடல் சாத்தனூருக்கு மேற்கே 8-10 கிலோ மீட்டர் வரை இருந்தது என்று புவியியல் ஆய்வுகள் சொல்கின்றன.
அந்த காலத்தில் (க்ரிடேஷன் காலம்) இன்று கடலில் காணும் உயிரினங்களைப் போலவே பல உயிரினங்கள் வாழ்ந்தன. இந்த உயிரினங்கள் இறந்த பிறகு, ஆற்று மணலாலும் களிமண்ணாலும் மூடப்பட்டு கடல் அடியில் புதைந்தன. கடலோர மரங்களும் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டு கடலில் மூழ்கி, காலப்போக்கில் கல்லாக மாறின.
இங்குக் காணப்படும் கல்லாக மாறிய பெரிய மரம் சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தய திருச்சிராப்பள்ளி பாறையினப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இது பூக்கள் இல்லாத ‘கோனிபர்ஸ்’ வகை மரம். இந்த மரம் 18 மீட்டர் நீளம் உள்ளது. வரகூர், அனைப்பாடி, அலுந்தளிப்பூர், சாரதாமங்கலம் ஆகிய ஊர்களின் அருகேயும் இது போன்ற கல்லுருவாகிய மரங்கள் உள்ளன. 1940-ல் டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவர் முதன்முதலில் இந்த கல் மரத்தைப் பற்றி ஆய்வு செய்தார்.
சாத்தனூரில் உள்ள தேசிய புதைபடிவ மர பூங்காவில் அருங்காட்சியகம், குழந்தைகள் பூங்கா மற்றும் கல்வி மையம் உள்ளன. இங்கு பார்வையாளர்களுக்கு புதைபடிவ மரங்களின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்கள்.
கல்வி மையத்தில் நான்கு அரங்குகள் உள்ளன. இங்கு சூரிய மண்டலம், பூமியின் தோற்றம், பெருவெடிப்பு கோட்பாடு, உயிரினங்களின் பரிணாமம், புதைபடிவ மரங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. இப்பகுதியில் கிடைத்த புதைபடிவங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ரஞ்சன்குடி கோட்டை

ரஞ்சன்குடி கோட்டை 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது பெரம்பலூரில் இருந்து வடக்கே 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை NH 45-ல் அமைந்துள்ள இக்கோட்டை, சென்னையில் இருந்து 253 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. கர்நாடக நவாப் இந்தக் கோட்டையைக் கட்டினார்.
1751 ஆம் ஆண்டில் நடந்த வாலிகொண்டா போரில் இக்கோட்டை முக்கிய இடமாக இருந்தது. பிரஞ்ச் படையின் துணையோடு இருந்த சந்தா சாஹிப்பை, ஆங்கிலேயர் உதவியோடு இருந்த முகமது அலி வென்றார்.
கோட்டை நீள்வட்ட வடிவில் உள்ளது. மூன்று பெரிய சுவர்கள் கோட்டையைச் சுற்றி உள்ளன. கற்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. கோட்டையில் அரண்மனை, வீடுகள், நிலவறைகள் உள்ளன. மேலே உள்ள பகுதிக்கும் கீழே உள்ள பகுதிக்கும் பாதை உள்ளது.
இப்போது தொல்பொருள் துறை இக்கோட்டையைப் பாதுகாத்து வருகிறது. பெரம்பலூரின் முக்கிய சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
விசுவக்குடி நீர்த்தேக்கம்
விசுவக்குடி அணை தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. இது அன்னமங்கலம் ஊராட்சியில் கல்லாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 2015ல் பயன்பாட்டுக்கு வந்தது.
வேப்பந்தட்டை அருகே உள்ள பச்சைமலை – செம்மலை இடையே இந்த அணை அமைந்துள்ளது. இரு மலைகளில் இருந்து பெய்யும் மழைநீர் கல்லாற்று வழியாக அணைக்கு வருகிறது. மழைநீர் வரும் பகுதி சுமார் 5.61 சதுர மைல்கள் ஆகும்.
அணை 665 மீட்டர் நீளமும் 10.3 மீட்டர் ஆழமும் கொண்டது. இதில் 41 மில்லியன் கனஅடி நீர் தேங்கும். இதில் 30.67 மில்லியன் கனஅடி நீர் விவசாயத்திற்கும், 10 மில்லியன் கனஅடி நீர் குடிநீருக்கும் பயன்படுகிறது. அணையில் இரண்டு நீர் வெளியேற்றும் வாய்க்கால்களும், ஒரு உபரி நீர் வெளியேற்றும் வாய்க்கால்களும் உள்ளன.
இந்த அணை 2,500 ஏக்கர் பயிர்சாகுபடிக்குரிய நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது.
அணையின் உபரி நீர் முதலில் லாடபுரம் ஏரிக்குச் செல்கிறது. பின்னர் வெங்கலம், வெண்பாவூர், வடகரை, பாண்டகாபாடி, மறவநத்தம், என் புதூர், விகளத்தூர் ஆகிய ஊர்கள் வழியாக கல்லாற்றில் சென்று, இறுதியில் வெள்ளாற்றில் கலக்கிறது.
கொட்டரை தடுப்பணை
கொட்டரை தடுப்பணை தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ளது. இது மருதையாற்றின் குறுக்கே கட்டப்படும் நீர்த்தேக்கம் ஆகும்.
2013-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த நீர்த்தேக்கத்திற்கான அரசு ஆணையை வெளியிட்டார். இந்த திட்டத்தால் 4199 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.
நிலம் கையகப்படுத்த 56.7 கோடி ரூபாயும், கட்டுமானப் பணிகளுக்கு 67.5 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 124.2 கோடி ரூபாய் செலவில் இந்த அணை கட்டப்படுகிறது.
அணை 2170 மீட்டர் நீளம் கொண்டது. நிலங்களில் 70% கொட்டரை கிராமத்திலும், 30% ஆதனூர் கிராமத்திலும் உள்ளன. அணையில் 212 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். மொத்த பரப்பளவு 815 ஏக்கர். இரண்டு நீர் வெளியேற்று வாய்க்கால்களும், 100 மீட்டர் நீள வடிகாலும் உள்ளன. வெள்ள நீர் இந்த வடிகால் வழியாக மருதையாற்றில் கொட்டரை கீழக்காடு பகுதியில் கலக்கிறது.
வாலிகண்டபுரம் வாலீசுவரர் கோயில்

வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீசுவரர் கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில்உள்ளது. பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் 4 வழிச்சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்தில், கோனேரி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது. சுற்றியுள்ள ஊர்களான இரஞ்சன்குடி, தொழுதூர், சிறுவாச்சூர் ஆகியவற்றிலிருந்து எளிதில் வரக்கூடிய தூரத்தில் இருக்கிறது.
வாலி என்ற வானர வீரன் இங்கு வழிபட்டதால் இந்த ஊருக்கு வாலிகண்டபுரம் என்ற பெயர் வந்தது.
கோயிலின் மூலவராக வாலீசுவரர். அம்மனின் பெயர் வாலாம்பிகை. கோயிலின் பல இடங்களில் வாலியின் சிலைகள் உள்ளன. இங்கு வழிபட்டால் வாலிக்கு எதிராளியின் பலத்தில் பாதி கிடைத்ததாக சொல்கிறார்கள். கோயிலில் சரவண தீர்த்தம் என்ற புனித நீர் குளம் உள்ளது.
ஏழு நிலை கோபுரம் கோயிலில் உள்ளது. அதன் முன்னால் நடராசர் மண்டபம் இருக்கிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் அழகான சிற்பங்கள் உள்ளன. கோயிலில் 3 நந்திகள், பைரவர், கணபதி, துவாரபாலகர்கள், தண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, கொற்றவை போன்ற கடவுளர்களின் சிலைகள் உள்ளன. தென் புறத்தில் 1008 பாணங்கள் கொண்ட சிறப்பான லிங்கமும் இங்கு உள்ளது. இக்கோயிலில் அஷ்டமி நாளில் சிறப்பு பூஜை நடைபெறும்.
செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

தண்டாயுதபாணி கோவில் செட்டிக்குளம் என்ற ஊரில் இருக்கிறது. இது பெரம்பலூர் நகரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இக்கோவிலை பாண்டிய மன்னன் குலசேகரன் கட்டினார் என்று சொல்கிறார்கள்.
இக்கோவிலில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. இங்கு வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. பஞ்சநதி என்ற புனித நீர் ஓடுகிறது.

முருகப்பெருமான் அழகிய முடியுடன் காட்சி தருகிறார். 4 அடி உயரமுள்ள சிலையில் 11 கணுக்கள் கொண்ட கரும்பை ஏந்தியுள்ளார். மாசி மாதம் 3, 4, 5 ஆம் நாட்களில் மாலை நேரத்தில் சூரியனின் கதிர்கள் சாமியின் பாதம் முதல் முகம் வரை விழுகிறது.
இங்கு ஓடும் பஞ்சநதியில் எப்போதும் நீர் இருக்கும். மலையில் இருந்து வரும் இந்த நீரில் மூலிகைகளின் மருத்துவ குணம் கலந்துள்ளது. பழனி மலையில் செய்யும் வழிபாடுகளை இங்கும் செய்யலாம். அதனால் இதை வடபழனி என்றும் அழைக்கிறார்கள்.
கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
மாவட்டத்திலுள்ள ஏரிகள்
- துறைமங்கலம் பெரிய ஏரி
- பெரம்பலூர் பெரிய ஏரி
- துறைமங்கலம் சித்தேரி
- வெண்பாவூர் ஏரி
- வடக்கலூர் ஏரி
- கீரவாடி ஏரி
- லாடபுரம் பெரிய ஏரி
- காருகுடி பெரிய ஏரி
- குரும்பலூர் ஏரி
- லாடபுரம் பெரிய ஏரி
- ஆய்க்குடி பெரிய ஏரி
- எசனை பெரிய ஏரி
- அரும்பாவூர் பெரிய ஏரி, சிறிய ஏரி
- பூலாம்பாடி 3 ஏரிகள்
- பெரியம்மா பாளையம் ஏரி
- வெங்கனூர் ஏரி
- இலப்பைகுடிக்காடு ஏரி
மாவட்டத்திலுள்ள ஆறுகள்
- மருதையாறு
- கல்லாறு
- சுவேதா ஆறு
- கோனேரி ஆறு
- வெள்ளாறு (வடக்கு)
- சின்னாறு – பெரம்பலூர் மாவட்டம்
- ஆனைவாரி ஓடை
மாவட்டத்திலுள்ள அருவிகள்
- மயிலூற்று அருவி
- ஆனைக்கட்டி அருவி
- கோரையாறு அருவி
- வெண்புறா அருவி
- எட்டெருமை அருவி
- மங்களம் அருவி
- அத்தி அருவி
மாவட்டத்திலுள்ள அணைகள்
- சின்னாறு அணை – பெரம்பலூர் மாவட்டம்
- விசுவக்குடி அணை
- கொட்டரை தடுப்பணை
- கீழக்குடிக்காடு தடுப்பணை
மாவட்ட காவல்
பெரம்பலூர் மாவட்டத்தின் காவல்துறை, தமிழக காவல்துறையின் ஒரு பகுதியாகும். இந்தப் பிரிவு பெரம்பலூர் மாவட்டம் முழுவதையும் கவனித்து வருகிறது. இங்கு பல காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
- குன்னம்
- அரும்பாவூர்
- கை.களத்தூர்
- பெரம்பலூர்
- மங்கல மேடு
- பாடாலூர்
- மருவத்தூர்
- வி. களத்தூர்